தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

12 Jun 2026, 10:24 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

தருமபுரி, ஜூன் 12- பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த எலந்த கொட்டப்பட்டியை சேர்ந்த சேட்டு மகன் விக்னேஷ் (23), முருகேசன் மகன் மதன்குமார் (19). சங்கர் மகன் சுந்த ரம் (23). ஆகியோர் நண்பர்களாவர். இவர்கள் வியாழனன்று மாலை விக்னேஷின் இருசக்கர வாகனத்தில் பாப்பிரெட்டிப் பட்டிக்கு சென்று விட்டு, மீண்டும் எலந்த கொட்டப்பட்டிக்கு புறப்பட்டனர். வாகனத்தை விக்னேஷ் ஓட்டியுள்ளார். சாமியா புரம் கூட்ரோட்டில் இருந்து அரூர் - சேலம் நெடுஞ்சாலை யில் குமரகோட்டம் பகுதியில் கோதுமை மில் அருகில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட விக்னேஷ், மதன்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுந்தரம் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜூன் 15 இல் மின்தடை

ஈரோடு, ஜூன் 12- ஈரோடு மாவட்டத்தில் சிப் காட், ஈங்கூர், பெரியாண்டி பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் ஜூன் 15 ஆம் தேதியன்று (திங்க ளன்று) மாதாந்திர பராம ரிப்புப் பணிகள் நடைபெற வுள்ளன. இதனால் சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட் டும், கம்புளியம்பட்டி, வரப் பாளையம், புளியம்பாளை யம், காசிபில்லாம்பாளை யம் மற்றும் பெருந்துறை தெற்கு பகுதி, தோப்பு பாளையம், பெருந்துறை ஹவுசிங் யூனிட், கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, ஈங் கூர், பாலப்பாளையம், நெச வாளர் காலனி, புலவனூர், மற்றும் மேலப்பாளையம், பி.கே.புதூர், தொட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோ கம் இருக்காது.

கலந்தாய்வில் குளறுபடி: மாணவர்கள் போராட்டம்

சேலம், ஜூன் 12- கலந்தாய்வில் குளறுபடி ஏற்பட்டதால், சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் கள், பெற்றோர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் அரசு கலைக்கல்லூரியில் மாண வர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு வியாழனன்று நடைபெற்றது. இளங்கலை தமிழ், ஆங்கிலம், புள்ளியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க காலை முதலே மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரண்டிருந்த னர். இந்நிலையில், காலை 8 மணி முதல் காத்திருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்க ளிடம் இடங்கள் நிரம்பிவிட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தி னர். கல்லூரியில் உள்ள காலியிடங்கள் எத் தனை, சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண் என்ன போன்ற விவரங்கள் முன்கூட்டியே வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றும், பல மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னர் கலந்தாய்வு நிறைவடைந்ததாக அறி விக்கப்பட்டது என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். தகவலறிந்து வந்த காவல்துறை யினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நிலையில், சேர்க்கை நடைமுறை களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

நிபா: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

உதகை, ஜூன் 12- கேரளம் மாநிலத்தில் நிபா வைரஸ் உறுதி செய்யப் பட்டுள்ளதால், நீலகிரி எல்லையில் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சி யர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெள்ளியன்று துவக்கி வைத் தார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நீல கிரி மாவட்டம் கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையை ஒட்டி உள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நிபா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்றுகளை தடுக்கும் நோக் கில், சிறப்புக் குழுக்களை அமைத்து தேவையான முன்னேற் பாடுகளுடன் எல்லை மற்றும் எல்லையை ஒட்டியுள்ள கிராமத் தில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகி றது. தற்போது வரை நீலகிரியில் எந்தத்தொற்று பாதிப்பும் உறுதிப்படுத்தவில்லை. எல்லைப் பகுதியிலுள்ள கிராம மக்கள் மற்றும் பொது மக்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த வழிகாட்டுதல்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வெளி யிடப்படும். அதன்படி விழிப்புணர்வுடன் செயல்பட வேண் டும். நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் யாருக் கேனும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தால், முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை, என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.