தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

10 Jul 2026, 9:07 pm
​​​​​​​கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

விபத்தில் 6 பேர் உயிரிழந்த சோகம்

திருப்பூர், ஜூலை 10- ஊத்துக்குளி அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த ஆறு பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வழியாக, விஜயமங்க லம் நோக்கி சென்ற காரும், விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி வந்து கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரியும் காக்காபள்ளம் அருகில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படு காயம் அடைந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி யுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு, ஜூலை 10- சுற்றுசூழலை மாசுபடுத்தி வந்த தனியார் எண்ணெய் ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சிப்காட் வளாகம் அமைந்துள்ளது. இதன் அருகில் சுமார் 8 கி.மீ தொலைவில் விவசாயம் நிறைந்த பகுதியில் மிஸ்டர் கோல்டு சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான சன் ராஜா ஆயில் இண் டஸ்ட்ரீஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அரசு விதி முறைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைக ளுக்கு மாறாக கழிவுகளை வெளியேற்ற வந்தது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்தது. இதற்கெதிரகாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பரிசோதனைக்கான மாதிரி களை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலை யில், ஆலையின் மின் இணைப்பு வியாழனன்று இரவு துண் டிக்கப்பட்டது.

விதிமீறல்: 6 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

தருமபுரி, ஜூலை 10- தருமபுரியில் சுகாதாரமற்ற உணவுப்பொருள்களை விற்ப னைக்காக வைத்திருந்த 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டது. தருமபுரி நகரத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள உணவகங் கள், பேக்கரிகள், மளிகைக் கடைகள், துரித உணவகங்கள், இறைச்சிக் கடைகள், குளிர்பான மற்றும் பழக்கடைகள், பழச் சாறு கடைகள், பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வியாழனன்று உணவு பாதுகாப்புக்குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு துரித உணவகத்தில் விற் பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி யில், செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அங்கிருந்து தலா 100 கிராம் அளவிலான செயற்கை நிறமூட்டிகள் அடங்கிய 10 டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செயற்கை நிறமூட்டி பயன்படுத்தப்பட்டி ருந்த சுமார் 3 கிலோ இறைச்சியும், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நாள்பட்ட பழைய இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே பகுதியில் இருந்த மேலும் இரு உண வகங்களில் குளிர்சாதனப் பெட்டியிலும் உணவகத்தின் பின் புறமும் வைக்கப்பட்டிருந்த 5 கிலோ பழைய இறைச்சி, சப் பாத்திக்கு பிசைந்து வைக்கப்பட்டிருந்த பழைய மாவு மற்றும் செயற்கை நிறம் ஏற்றப்பட்டிருந்த சுமார் 1 கிலோ சோம்பு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறைகளை மீறிய வகையில் செயல்பட்ட ஒரு பேக்கரி உட்பட 6 கடைக ளுக்கு ரூ.8,000 உடனடி அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அமராவதி அணையிலிருந்து ‘உயிர் தண்ணீர்’ திறக்க கோரிக்கை!

உடுமலை, ஜூலை 10- திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் கடும் வறட்சியை கருத்தில் கொண்டு, அமரா வதி அணையில் இருந்து தொடர்ந்து 20 நாட்களுக்கு ‘உயிர் தண்ணீர்’ திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மற்றும் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமராவதி அணை செயற்பொறியாளர் சுப்பிரமணியத்திடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத்துக் குளம் தாலுகா செயலாளர் வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் புத னன்று மனு அளித்தனர். அதில், அமராவதி அணையின் நீர்மட் டம் தற்போது 50 அடியை நெருங்கியுள்ளது. எனினும், பிரதான வாய்க்கால் பாசனப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து கிணறுகள் வறண்டுவிட்டன. இதனால் சுமார் 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புப் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன. கடுமையான நீர் பற்றாக்குறையால் புதிய கரும்பு நடவுப் பணிகளை மேற்கொள்ள முடிய வில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரமான தென்னை மரங்க ளும் காய்ந்து, கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் பாச னத்தை காக்க உயிர் தண்ணீர் திறந்து விடுவது நடைமுறை யில் உள்ளது. எனவே, காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற அமராவதி பிரதான வாய்க்காலில் உடனடியாக 20 நாட்க ளுக்கு தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மடத்துக்குளம் நிர்வாகிகள் ராஜரத்தினம், வீரப்பன், வெள்ளியங்கிரி, நித்தியானந்தம், இராமசாமி மற் றும் தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தயானந்தன், சிவராஜ், தர்மராஜ் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தெருவிளக்கு வசதி செய்யக்கோரி, ஜூலை 27 இல் காத்திருப்புப் போராட்டம்

ஈரோடு, ஜூலை 10- அந்தியூர் அருகே குண்டு மூப்பனூரில் தெருவிளக்கு வசதி செய்து தரக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி காத்திருப்புப் போராட்டம் அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், நகலூர் ஊராட்சிக் குட்பட்ட குண்டு மூப்பனூர் கிராமத்தில், பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பில் சுமார் 80 குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இக்குடியிருப்பின் ஒரு பகுதியில் தெருவிளக்கு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை ஒட்டியுள்ள நிலத்தின் உரிமையாளரான ஓய்வுபெற்ற காவல் துறை அதி காரி முத்துசாமி என்பவர், அதனை தடுத்து, பட்டியலின மக் களை அடித்து துன்புறுத்தினார். இதுகுறித்து பல்வேறு முறை யீடுகள், போராட்டங்கள் நடைபெற்றன. ஆயினும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம் தெரு விளக்கும் அமைக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட் டம் ஈரோட்டில் வியாழனன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் ஏ.கே.பழனிசாமி, பொருளாளர் எம்.அண்ணாதுரை உள் ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பட்டியலின மக்களை துன்புறுத்திய ஆதிக்க சக்தியான முத்துசாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியில் தெருவிளக்கு வசதி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 27 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, அங்கேயே காத்திருப்புப் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

பாலியல் வன்கொடுமை - கைது

தருமபுரி, ஜூலை 10- மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தப்பியோடிய கல்லூரி பேருந்து ஓட்டுநரை காவல் துறை யினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பகு தியை சேர்ந்த கல்லூரி மாணவி, மருத்துவமனைக்கு சென்ற போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சீலநாயக்கனூரை சேர்ந்த கல்லூரி பேருந்து ஓட்டுநர் சதாசிவம் (30) என்பவர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந் தது. இதையடுத்து, சதாசிவம் மீது போலீசார் போக்சோ சட்டத் தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, தப்பியோ டிய சதாசிவத்தை பென்னாகரம் மகளிர் காவல் துறையினர் ஏரியூர் அருகே வியாழனன்று கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

கோவை புறநகர் பகுதிகளில் கனமழை

கோவை, ஜூலை 10- கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட் டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளை யம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் உள் ளிட்ட இடங்களில் வெள்ளியன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நி லையில், பிற்பகலில் திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் மழை யின் காரணமாக அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி னர். மேலும், பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப் பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப் பட்டாலும், விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக, பணப்பயிர்களை நடவு செய்துள்ள விவ சாயிகள், பயிர்களுக்கு தனியாக நீர் பாய்ச்ச வேண்டிய தேவை இல்லாததால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்!

உடுமலை, ஜூலை 10- விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கட்டாயப்பணம் வாங்கும் மின்வாரிய அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் வெள்ளியன்று கோட்டாட்சியர் குமார் தலைமையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மதுசூதனன், வீரப்பன், அருண்பிரகாஷ், தர்ம ராஜ் உள்ளிட்ட திரளான விவசாயிகள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் பேசுகையில், உடு மலை மற்றும் மடத்துக்குளம் மின்வாரிய அலு வலகங்களில் ஆட்கள் பற்றாக்குறை, மின் உபகரணங்கள் இல்லை என்ற காரணங் களை கூறி விவசாயிகளிடமும், பொதுமக்க ளிடமும் அதிகாரிகள் கட்டாயப் பண வசூலில் ஈடுபடுகின்றனர். மேலும், விவசாய நிலங்க ளில் செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்ப டுவதை தடுக்க பிளாஸ்டிக் பைப் அமைக்கக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், இந்நட வடிக்கைகளை தடுக்காவிட்டால் மின்வா ரிய அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று எச்சரித்தனர். பிஏபி மற்றும் அமராவதி பாசன கால்வாய் கரைகளில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. சில இடங்களில் பாசன கால்வாய்களில் சாக்கடை கழிவுநீர் கலக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள் ளன. இதனால் எதிர்காலத்தில் பாசன கால் வாய்கள் முற்றிலும் கழிவுநீர் கால்வாய்க ளாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் கீழ் இயங்கும் சர்வே துறையில், ஊழியர்கள் பற்றாக்கு றையை காரணம் காட்டி நிலங்களை அளவீடு செய்ய ஏக்கருக்கு இவ்வளவு என லஞ்சம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பணம் தருப வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவ தால், ஆன்லைனில் முறையாகக் கட்டணம் செலுத்திவிட்டு வரிசையில் காத்திருக்கும் விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே, பதிவு செய்த வரிசைப்படி நிலங் களை அளவிட வேண்டும். கோமங்கலம் பகுதியில் அமைந்துள்ள புதிய சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும்; பெட்ரோல் பங்குகளில் விவசாயிகளுக்கு கேன்களில் டீசல், பெட் ரோல் வழங்க அனுமதிக்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வலியு றுத்தப்பட்டன.

மின்தடை

ஈரோடு, ஜூலை 10- ஈரோடு மாவட்டம், விஜய மங்கலம் துணை மின் நிலை யத்தில் ஜூலை 14 ஆம் தேதி யன்று மாதாந்திர பராமரிப் புப் பணிகள் நடைபெறவுள் ளது. இதனால் பெரிய வீர சங்கிலி, சின்ன வீரசங்கிலி, கைக்கோளபாளையம், வட மலை கவுண்டன்பாளையம், பச்சா கவுண்டன்பாளையம், கினிப்பாளையம், கிரே நகர், கரட்டூர், பாப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோ கம் இருக்காதென தெரி விக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.