தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டியால் நெருக்கடியில் பம்ப் தொழில்

5 Jun 2026, 8:57 pm
மூலப்பொருட்களின் விலை உயர்வு,  ஜிஎஸ்டியால் நெருக்கடியில் பம்ப் தொழில்

மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டியால் நெருக்கடியில் பம்ப் தொழில்

இந்தியாவின் பம்ப் உற்பத்தி யில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி, நாட்டின் முன்னணி பம்ப் உற்பத்தி மையமாகத் திகழ்கிறது கோவை. விவசாயத்திற்கும், சாமானிய மக்க ளின் குடிநீர் தேவைக்கும் உயிர்நாடி யாக விளங்கும் இந்த பம்ப் தொழிற்துறை, இன்று மூலப் பொருட்களின் அசுரத்தனமான விலை உயர்வு, சர்வதேசப் பொருளாதாரக் காரணிகள், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஒன்றிய அரசின் 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகிய வற்றால் கடும் நெருக்கடியில் தள்ளப் பட்டுள்ளது.

பம்ப் தயாரிப்பிற்கு மிக முக்கிய மான மூலப்பொருட்களான காப்பர் மற்றும் அலுமினியத்தின் விலை கடந்த 2025 செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு கிலோ ரூ. 900 முதல் ரூ. 950 வரை விற்கப்பட்ட காப்பரின் விலை, தற்போது ரூ. 1,300 முதல் ரூ. 1,350 வரை உயர்ந்துள் ளது. அதேபோல், சர்வதேசச் சந்தை யில் அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ. 91–92 என்ற நிலையிலிருந்து, தற்போது ரூ. 95–96 ஆக அதிகரித்துள்ளது. இந்த நாணய மதிப்பு வீழ்ச்சி, சர்வதேசச் சந்தையில் மூலப்பொருட்களின் இறக்குமதிச் செலவை மேலும் உயர்த்தி, உற்பத்தியாளர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட அமெரிக்கா - ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான பதற்றமான போர்ச் சூழலால் சர்வ தேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடும், எல்பிஜி எரிவாயு விநியோகக் கட்டுப்பாடும் சேர்ந்து கொண்டன. இதன் நேரடி விளைவாக, பம்ப் தயாரிப்புக்குத் தேவையான ரப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட இதர துணைப் பொருட்களின் விலையும் சுமார் 30 சதவிகிதம் வரை உயர்ந்து, தொழிற்துறையை மேலும் முடக்கியுள்ளது.

கோடைக்காலத்திலும் முடங்கிய விற்பனை

கடந்த 2025 செப்டம்பர் மாதத்து டன் ஒப்பிடும்போது, தற்போது பம்ப் தயாரிப்புக்கான உற்பத்திச் செலவு சராசரியாக 40 சதவிகிதம் வரை அதி கரித்துள்ளது. ஆனால், சந்தையில் நிலவும் கடுமையான மந்தநிலை காரணமாக பம்ப் விலையை உற்பத்தியாளர்களால் 10 சதவிகி தம் மட்டுமே உயர்த்த முடிந்துள்ளது. எஞ்சிய 30 சதவிகித நஷ்டத்தை உற்பத்தியாளர்களே சுமக்க வேண்டியுள்ளது. பொதுவாக, தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் கோடைக் காலத்தில்தான் பம்புகளின் விற்பனை உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு கோடைக் காலத்திலும் நாடு முழுவதும் விற் பனை முற்றிலும் மந்தமாகவே இருந்தது.

மறுபுறம், டீசல் விலை உயர்வால் போர் வெல் தோண்டும் கூலி அதிகரித்துள்ளதோடு, பிளாஸ்டிக் மற்றும் காப்பர் விலை உயர்வால் பைப் மற்றும் கேபிள்களின் விலையும் 30 முதல் 40 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த மாக ஒரு புதிய போர்வெல் அமைத்து பம்ப் பொருத்துவதற்கான செலவு 30 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை அதிகரித்து விட்டது.

இந்த திடீர் பொருளாதாரச் சுமையைத் தாங்க முடியாமல், நுகர்வோர்களான விவ சாயிகளும் பொதுமக்களும் புதிய பம்புகள் வாங்குவதையே முற்றிலும் தவிர்த்து வரு கின்றனர்.

சிறு தொழில்களை அழிக்கும் ஜிஎஸ்டி வரிமுறை

இந்திய அளவில் பம்ப் தொழிற்துறையின் ஒட்டுமொத்த முறையான வர்த்தகம் சுமார் ரூ. 15,000 கோடியாக உள்ளது. ஆனால், பம்பு களுக்கு விதிக்கப்படும் 18 சதவிகித ஜிஎஸ்டி வரிச்சுமை மிக அதிகமாக இருப்பதால், அதற்கு இணையாக சுமார் ரூ. 10,000 கோடி முதல் ரூ. 15,000 கோடி வரை பில் இல்லாத வர்த்தகமும் நடைபெறுகிறது. குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படும் பம்ப் போன்ற அத்தியாவசியப் பொருளுக்கு 18 சதவிகித ஆடம்பர வரி விதிப்பது எவ்வகையிலும் நியாயமற்றது என்கின்றனர் பம்ப் தொழி லில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்கள்.

இந்த அதிகப்படியான வரி காரணமாக, நேர்மையாக பில் போட்டு விற்கும் நிறுவனங் களுக்கும், பில் இல்லாமல் விற்கும் நிறுவனங் களுக்கும் இடையே 18 சதவிகித விலை வித்தி யாசம் ஏற்படுகிறது. அமைப்புசாரா துறை யினர் தரமற்ற மூலப்பொருட்களைப் பயன் படுத்தி, குறைந்த விலைக்கு விற்பதால், நேர்மையான சிறு, குறு நிறுவனங்கள் சந்தையில் போட்டியிட முடியாமல் நஷ்டத் தைச் சந்தித்து வருகின்றன.

ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு

மூலப்பொருள் விலை உயர்வு ஒருபுறம், நுகர்வோரின் வாங்கும் திறன் சரிவு மறு புறம் என இருமுனைத் தாக்குதலால் கோவை யில் ஏற்கெனவே சுமார் 30 சதவிகித பம்ப் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தொழிலை நிரந்தரமாக மூடிவிட்டன. கடந்த 2024-25 நிதியாண்டைக் காட்டிலும், 2025-26 நிதியாண் டில் பெரும்பாலான நிறுவனங்களின் விற் பனை 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை சரிவடைந்து, எதிர்மறையான வளர்ச்சி யையே பதிவு செய்துள்ளன.

இங்குதான் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வரு கிறது. பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டின் இயற்கை வளங்களையும் பெருநிறு வனங்களுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசு, இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறது. பெருநிறுவனங்களுக்குக் கோடிக் கணக்கில் வரிச் சலுகைகளையும், கடன் தள்ளுபடிகளையும் வாரி வழங்கும் அரசு, லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் கோவை பம்ப் தொழில்துறையின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க மறுப்பது அப்பட்டமான வஞ்சகமா கும். கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்காக மூலப்பொருள் விலையைக் கட்டுப்படுத்தா மல் வேடிக்கை பார்ப்பதும், அத்தியாவசியப் பொருட்களின் மீது கடுமையான வரிச்சுமை களை ஏற்றி வைப்பதும் நவதாராளமயக் கொள் கையின் கொடூர முகத்தையே காட்டுகிறது.

தொழிற்துறையினரின் கோரிக்கைகள்

இந்நிலையில், இத்தொழிலை நம்பி யுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, பம்புகளுக்கான ஜிஎஸ்டி வரியை உடனடியாக 5 சதவிகித மாகக் குறைக்க வேண்டும் என்று தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் (SIEMA) தலைவர் மிதுன் ராம்தாஸ் ஒன்றிய அரசுக்கு அவசரக் கோரிக்கை விடுத்து உள்ளார்.

ஜிஎஸ்டி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட் டால், பில் இல்லாமல் விற்பனை செய்பவர் களுக்கும் அது பெரிய பாரமாகத் தெரியாது. இதனால், பில் இல்லா வர்த்தகம் ஒழிந்து, ஒட்டுமொத்த பம்ப் தொழிற்துறையும் வரி வளையத்திற்குள் வரும். இது சந்தையில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கு வதோடு, அரசுக்கும் கூடுதலாகப் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாயை ஈட்டித் தரும். சர்வதேசக் காரணிகளால் மூலப்பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில், ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது மட்டுமே நுகர்வோர், உற்பத்தியாளர்கள் மற்றும் அரசு என அனைத்துத் தரப்பினருக்கு மான ஒரே தீர்வாக அமையும். ஒன்றிய அரசு கார்ப்பரேட் நலம் பேணுவதைத் தவிர்த்து, மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க முன்வர வேண்டும். - கவி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.