மாணவர் தற்கொலை
22 May 2026, 10:14 pm

மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை கோவை, மே 22- கோவை பிஎஸ்ஜி மருத் துவக் கல்லூரி விடுதி அறை யில் பி.பார்ம் இறுதியாண்டு மாணவர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி (22) என்ற மாணவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் பி.பார்ம் (B.Pharm) நான் காம் ஆண்டு படித்து வந் தார்.

கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கித் தனது படிப்பைத் தொடர்ந்து வந்து உள்ளார்.

இந்நிலையில், வெள்ளி யன்று காலை அவரது விடுதி அறை நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்த தால் உடன் தங்கி இருந்த சக மாணவர் சந்தேகமடைந்த கதவை தட்டியுள்ளனர்.

எவ் வித பதிலும் வராததால், கதவை உடைத்துப் பார்த்த போது மாணவர் பாலாஜி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தி னர், உடனடியாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

சம் பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோ தனைக்காக கோவை சிங் காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பீள மேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.