கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
18 Jun 2026, 4:18 pm
<p>கோவையில் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண விபரங்களை வெளிப்படுத்த வேண்டும். எல்.கே.ஜி (LKG) வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வு என்ற பெயரில் தகுதித் தேர்வு நடத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும், தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை முறைப்படுத்த அரசு தனி வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு அறிவுறுத்தியது போல கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்; இதனை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதில் பெற்றோர் மாணவர் ஆசிரியர் கழகம் தலைவர் தேவேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் குருசாரதி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் உஷா, மாநிலக் குழு உறுப்பினர் ராஜலட்சுமி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஜுல்ஃபி, பாவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். </p><p><br></p>
