கல்வித்துறை உத்தரவை காற்றில் பறக்கவிடும் தனியார் பள்ளிகள் முதல் நாளிலேயே கட்டண கொள்ளைக்கு அச்சாரம்!
4 Jun 2026, 10:08 pm

கோவை, ஜூன் 4-

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, கோவையில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள்

பெற்றோர்களிடம் கட்டணம்

செலுத்த கட்டாயப்படுத்துவதா

கவும், அரசின் உத்தரவை மீறி கட்டண விவரங்களை வெளியிட மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பள்ளி வளாகத்தில் உள்ள தக

வல் பலகையில் வகுப்பு வாரியான

கட்டண விவரங்களை வெளிப்

படையாக அறிவிக்க வேண்டும் என

பள்ளிக் கல்வித்துறை திட்டவட்ட

மாக உத்தரவிட்டுள்ளது. ஆனால்,

கோவையில் உள்ள பெரும்பா

லான தனியார் பள்ளிகள் (குறிப்

பாக தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள்) இந்த உத்தரவை சற்றும் சட்டை

செய்வதில்லை என்பதே தற்போ

தைய கள நிலவரம். வெளிப்படைத்

தன்மையை உறுதி செய்யும் நோக்

கில் அரசு கொண்டுவந்த இந்த உத்தரவை, பல தனியார் பள்ளி

கள் தங்களுக்கு சாதகமாக மறைத்து விடுகின்றன. கோடை

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளிலேயே கட்டணம் கட்டச்

சொல்லி பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கி

யுள்ளன.

கல்விக் கட்டணம் மட்டுமின்றி, வளர்ச்சி நிதி, சிறப்புப் பயிற்சி,

இதர செயல்பாடுகள் எனப் பல்

வேறு பெயர்களில் கட்டணங்களை

பல மடங்கு உயர்த்தி வசூலிப்ப

தாக பெற்றோர்கள் குமுறுகின்ற

னர். இந்த கட்டண கொள்ளை குறித்து கல்வித்துறையிடம் பகிரங்

கமாக புகார் அளிக்கப் பெற்றோர்

கள் பெரிதும் தயங்குகின்றனர். நாம் புகார் அளித்தால் பள்ளி நிர்

வாகம் தங்களை குறிவைத்து, தங்கள் குழந்தைகளை பாதிப்புக்

குள்ளாக்குமோ என்ற அச்சமே இதற்கு முக்கிய காரணம். குழந்

தைகளின் நலன் கருதி தனிநபராக

புகார் அளிக்க தயங்குவது நியா

யம் என்றாலும், பெற்றோர்கள் ஒன்

றிணைந்து ஒரு குழுவாகக் கூட இந்த கட்டண முறைகேடுகளை தட்டிக்கேட்கவோ, புகார் அளிக்

கவோ முன்வராதது வேதனையின்

உச்சம்.

குறைந்த கட்டணத்தில் சிறந்த தரமான கல்வியை வழங்கும் பல கல்வி நிறுவனங்கள் பல இயங்கி

வருகின்றன. இருந்தும், வெறும் பள்ளியின் பெயருக்காகவும், சமூக

கௌரவத்திற்காகவும் பல லட்சங்

களை செலவு செய்து தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்

கும் பெற்றோர்களின் மனநிலை

யும் இங்கு விமர்சனத்திற்குள்

ளாகிறது. பல்வேறு பெயர்களில் பல மடங்கு அதிகக் கட்டணம் வசூ

லிக்கப்படுகிறது என தெரிந்தும், அனைவரும் அதனை சகித்துக்

கொண்டு செலுத்தி வருவதுதான் இந்த அமைப்பின் மிகப்பெரிய அவ

லத்தின் உச்சம். பெற்றோர்களே பல நேரங்களில் தங்களை அறியா

மல் இந்த தவறை செய்கின்றனர்.

இந்த விவகாரத்தில் கல்வித்

துறை அதிகாரிகள் நேரடியாகக் களமிறங்கி ஆய்வுகளை மேற்

கொள்ள வேண்டும். தகவல் பல

கையில் கட்டண விவரங்களை வெளியிடாத பள்ளிகள் மீதும், முதல் நாளிலேயே கட்டண நெருக்

கடி கொடுக்கும் நிர்வாகங்கள் மீதும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் நலன் கருதி இதுபோன்ற கல்வி வியா

பாரிகளின் கட்டண கொள்ளையை

ஊடகங்கள் தொடர்ந்து வெளிச்சத்

திற்கு கொண்டு வந்து, விழிப்பு

ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்

பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டு

மொத்த கோரிக்கையாகும்.