தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

19 Jun 2026, 12:10 am
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, ஜூன் 18- கோவையில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்த வலியுறுத்தி மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கோவையில் உள்ள தனியார் பள்ளி களில் கல்வி கட்டண விபரங்களை வெளிப்படுத்த வேண்டும். எல்.கே.ஜி வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வு என்ற பெயரில் தகுதித் தேர்வு நடத்தப்படுவதை தடை செய்ய வேண்டும். தனியார் பள்ளி களின் கட்டண கொள்ளையை முறைப் படுத்த அரசு தனி வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து வியாழனன்று கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் உஷா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவர், பெற் றோர் நல சங்க தலைவர் தெய்வேந்தி ரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் தினேஷ் ராஜா, மாவட்ட துணைத் தலைவர் குருசாரதி, மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, மாணவர் சங்க மாவட்டத் தலை வர் பாவெல், செயலாளர் அகமது ஜூல்ஃபிகர் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.