காரின் மேற்கூரையில் தொங்கியபடி சென்ற காவலர் குட்கா பறிமுதல்; வாலிபர்கள் 3 பேர் கைது
27 Sept 2026, 11:40 pm
<p><strong>காரின் மேற்கூரையில் தொங்கியபடி சென்ற காவலர் குட்கா பறிமுதல்; வாலிபர்கள் 3 பேர் கைது</strong></p><p>கோவை, செப்.27-பெங்களுருவில் இருந்து கோவைக்கு காரில் குட்கா கடத்தி வந்து தப்ப முயன்றவர்களை, சுமார் 40 கி.மீ. காரின் மேற்கூரையில் தொங்கியபடி பயணித்து போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ், தலைமை காவலர்வேல்முருகன்உள்ளிட்ட போலீசார் ஞாயிறன்று அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டதில், தமிழகத்தில்தடை செய்யப்பட்ட சுமார் 300 கிலோ குட்கா மற்றும்புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்தவர்களை கைது செய்ய முயன்றபோது, அவர்கள் போலீசாரை கீழே தள்ளிவிட்டு காரை வேகமாக இயக்கி தப்ப முயன்றனர். அப்போது தலைமை காவலர் வேல்முருகன் காரின் மேற்கூரையில் ஏறி பிடித்துக்கொண்டார். கார் வேகமாக சென்றபோதும், அவர் செல்போன் மூலம் காரின் நகர்வு குறித்து காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவில்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை சுமார் 40 கி.மீ. காரில் தொங்கிச் சென்ற நிலையில்,அன்னபூர்ணா உணவகம் அருகே காரை சுற்றிவளைத்து நிறுத்தினர். காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 3 பேரில் இருவர் தப்பியோட முயன்ற நிலையில், போலீசார் அவர்களையும் பிடித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துணிச்சலுடன் செயல்பட்ட தலைமை காவலர் வேல்முருகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>
