விசாரணை என்ற பெயரில் அத்துமீறல்: பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் கைது
19 Jul 2026, 10:41 pm
<p><strong>விசாரணை என்ற பெயரில் அத்துமீறல்: பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் கைது</strong></p><p>கோவை, ஜூலை 19- கோவையில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணை, விசா ரணை என்ற பெயரில் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்த காவலர் கைது செய்யப்பட்டார். கோவை மாநகரம், துடியலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரு பவர் வினோத்குமார் (35). இவர் கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று சக போலீசாருடன் இணைந்து, வெள்ளக்கிணறு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப் போது, அப்பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டி ருந்தார். இதனைப்பார்த்த போலீ சார், அந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, காவலர் வினோத்குமார் அந்த இளம் பெண்ணை மட்டும் விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். யாரும் இல்லாத இருட்டான பகுதிக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்ற அவர், அங்கு வைத்து அப்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியும், அச்சமு மடைந்த அப்பெண், அங்கிருந்து தனது நண்பரிடம் ஓடிச்சென்று தனக்கு நடந்த கொடூரத்தைக்கூறி கதறி அழுதுள்ளார். இதைத் தொடர்ந்து, நண்பர் உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து புகாரளித்தார். அதன்பேரில் உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில், காவ லர் வினோத்குமார் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சனியன்று துடிய லூர் காவல் நிலையத்தில் வினோத் குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய் யப்பட்டது. வழக்கின் தொடர்ச்சியாக அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பெண்கள் மற் றும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் சமூகத்தில் தொடர்ச்சி யாக அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், பொதுமக்களுக்கு பாது காப்பளிக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே விசாரணை என்ற பெய ரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப் தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத் தியுள்ளது.</p>
