தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கியூஆர் கோடு மூலம் ரகசியமாக புகார் அளிக்கும் வசதி அறிமுகம்

13 Jul 2026, 10:36 pm
கியூஆர் கோடு மூலம் ரகசியமாக  புகார் அளிக்கும் வசதி அறிமுகம்
<p><strong>கியூஆர் கோடு மூலம் ரகசியமாக புகார் அளிக்கும் வசதி அறிமுகம்</strong></p><p>கோவை, ஜூலை 13- பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கியூஆர் கோடு (QR Code) மூலம் ரகசியமாக புகார்களை தெரிவிக்க ஏதுவாக, ‘நிழல்’ (Nizhal) என்ற அதிநவீனத் தொழில்நுட்ப பொதுப் பாது காப்பு திட்டம் திங்களன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட ஆட்சி யர் பவன்குமார் கிரியப்பனவர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பவன்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், கூடுதல் மற்றும் துணைக் காவல் கண் காணிப்பாளர்கள், மாவட்ட கலால் அலுவலர், வரு வாய்த் துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர் கள் பலர் கலந்து கொண்டனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க புதிய தொழில்நுட்ப அணுகுமுறை அவசியமாகியுள்ளதைக் கருத்தில் கொண்டும், அவசர காலங்களில் காவல்துறை யின் சேவையை விரைவாக கொண்டு சேர்க்கும் நோக்கிலும் “நிழல் - பாதுகாப்பான சமூகத்திற்காக ஒன் றிணைவோம்” என்ற இந்த சிறப்புத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது கைப்பேசியின் கேமரா வழியாக ஆங்காங்கே ஒட்டப் பட்டுள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, காவல் துறையுடன் உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் நூறு சதவீதம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்பதே இத்திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாகும். கியூஆர் கோடு மூலம் வரும் தகவல்களை உட னுக்குடன் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலை யங்களுக்கு அனுப்பி துரித நடவடிக்கைகளை மேற் கொள்வார்கள். பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங் கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பூங்காக் கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் என மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இந்த கியூஆர் குறியீடுகள் படிப்படியாக நிறுவப்பட உள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.