தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

1 hour before
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

போதை காளான்: 4 பேர் கைது உதகை, ஜூலை 9- உதகையில் போதை காளான் பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே பாம்பேகேசில் பகு தியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு உதகையிலுள்ள தனியார் கல்லூரியில், இரண்டா மாண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். இவருக்கு உதகை, பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த, கோவையில் படித்து வந்த 19 வயது நர்சிங் கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அதன்பின் காதலித்து வந்தனர். கடந்த 2024 ஆண்டு பிப்ரவரி மாதம் வார விடுமுறையை தினத்தன்று வாலிபர் அந்த கல்லூரி மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது வீட்டில் மது அருந்திய அவர்கள் போதை காளான் எனப்படும் விஷக்காளான் சாப்பிட்டுள்ளனர். இதில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த உதகை போலீசார், ஆகாஷை கைது செய்தனர். இதன்பின் ஆகாஷ் ஜாமினில் வந்த அவர், கோவையில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இந்நிலையில், ஆகாஷ் இவருடைய நண்பரும் கல்லூரி மாணவருமான இமானுவேல் (19) மற்றும் நண்பர்கள் தனுஷ், (21), ஹரிஷ் (20) ஆகியோருடன் சேர்ந்து பிங்கர் போஸ்ட் பகுதியில் வனப்பகுதிக்கு சென்று போதை காளான் சேகரித்து மீண்டும் பயன்படுத்தி உள்ளார். இவர்களை காவல் துறையினர் பிடித்து சோதனை செய்தபோது, போதை காளான் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களை நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

மழையால் பசுந்தேயிலை வரத்து அதிகரிப்பு

உதகை, ஜூலை 9- நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், தேயிலை தோட்டங்கள் பசு மையாக காட்சியளிப்பதால், தொழிற் சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவ சாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்த லார், மேற்குநாடு, நஞ்சநாடு உட்பட மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகின்றன. இது தவிர, நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட்டுகளுக்கு சொந்த மான தொழிற்சாலைகளும் உள்ளன. இந்நிலையில், நடப்பாண்டு துவக்கத்தி லிருந்து 4 மாதங்களுக்கும் மேலாக போதிய மழை பெய்யாததால், வறட்சி நிலவியது. இதனால், தேயிலை விவ சாயம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்ததால், பசுந்தேயிலை வரத்து குறைந்து போனது. தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலும் ஏற் பட்டது. இதன்காரணமாக தொழிற்சா லைகளில் தேயிலைத்துாள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. அவ் வப்போது நல்ல வெயிலும் காணப்பட் டது. தேயிலை விவசாயத்திற்கேற்ற காலநிலை காரணமாக, கடந்த சில வாரங்களாக தேயிலை மகசூல் படிப் படியாக அதிகரித்து வருகிறது. தற் போது, பெரும்பாலான தொழிற்சாலை களுக்கும் தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கிலோவிற்கும் மேல் பசுந்தே யிலை வரத்து உள்ளதாக கூறப்படு கிறது. பசுந்தேயிலை வரத்து காரண மாக கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற் சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி அதிகரித்துள்ளது.

பள்ளி அருகே உள்ள மதுக்கடையை அகற்ற முதல்வருக்கு கடிதம்

திருப்பூர், ஜூலை 9- திருப்பூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் அருகாமை யில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். திருப்பூர் குமரன் சாலை அருகே உள்ள பென்னி காம்ப வுண்ட் பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு மிக அருகாமையில் 50 மீட்டர் தொலைவில் 1951 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல் பட்டு வருகிறது. இந்த மதுபான கூடத்திற்கு வருபவர்கள் பள்ளிக்கு முன்பாக மற்றும் பக்கவாட்டில் என பல்வேறு பகுதிகளிலும் நின்று மது அருந்துவதால் மாணவர்கள், மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பெண்கள் இப்பாதை வழியாகப் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தமிழக அரசு உத்தரவிட்ட அடிப்படையில், பள்ளிக்கு மிக அருகாமையில் மதுபான கடைகள் இருக்கக் கூடாது என்ற விதிமுறையை பின்பற்றி, உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் காவல் துறை எனபலரிடம் மனு அளிக்கப் பட்டது. எனினும் இதனால் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. எனவே முதலமைச்சர் கவனத்தில் எடுத்து இந்த மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, 400க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் பணி

ஈரோடு, ஜூலை 9- ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2027) பணிகள் துவங்கப்பட்டு முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணிகளும், வீடுகள் தொகுப்பு பணிகளும் நடைபெற உள்ளது. இப்பணியில் ஈரோடு மாவட்டத்தில் 3376 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 595 மேற்பார்வையா ளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதற்கட்டமாக வரும் ஆக.1 முதல் ஆக.30 ஆம் தேதி வரை வீடுகள் கணக்கெடுப்பு பணிகளும், வீடுகள் தொகுப்பு பணிகளும் நடைபெற உள் ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக பிரத்யே கமாக சிஎம்எம்எஸ் (Census Monitoring and Management System) என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ஜூலை 17 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை உள்ளீடு செய்து கொள்ள போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலியில் சுய விவரங்களை உள்ளீடு செய்வதால், எளிய உள்நுழைவு மற்றும் பங்கேற்றல் போன்ற வசதிகள் ஏற்படு கின்றன. ஒரு ஒப்புதல் எண் செயலியில் வரப்பெறும். இந்த ஒப்புதல் எண்ணினை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி யாளர்கள் கணக்கெடுப்பு பணிக்காக வீடுகள்தோறும் வரும் போது எண்ணினை தெரிவித்தால் அதனை உறுதி செய்த பின்பு பதிவேற்றம் செய்ததை உறுதி செய்வர் என தெரி விக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.