கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
20 May 2026, 11:44 pm

மசினகுடியில் யானை உயிரிழப்பு

உதகை, மே 20- மசினகுடி அருகே யானை உயிரிழந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக் கோட்டம், சிக்கோலை ஆற்றுப் பகுதியில் வனப்பணி யாளர்கள் செவ்வாயன்று ரோந்துப்பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, அங்கு அழுகிய நிலையில் யானையின் உடல் கிடந்தது தெரியவந்தது. இதைய டுத்து, உயர் அதிகாரிகள், வன கால்நடை மருத்துவர் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், மருத்துவக்குழுவினர் யானையின் உடலை ஆய்வு செய்தனர். இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலை யில் யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, பின் னர் அங்கேயே புதைக்கப்பட்டது. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே யானையின் உயிரிழப்புக் கான காரணம் தெரியவரும் என்று வனத்துறை யினர் தெரிவித்தனர். வளர்ப்பு யானை உயிரிழப்பு கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்ப கத்தில் உள்ள அபயாரண்யம் வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை சேரன் (40) புதனன்று காலை உயிரிழந்தது. அதிகாலை யானைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்த னர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி யானை உயிரி ழந்தது.

போக்குவரத்து விதிமீறல்: 187 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

திருப்பூர், மே 20- போக்குவரத்து விதிமீறல் காரணமாக பல்ல டத்தில் 187 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிர பாகரன் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலை விதி களை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அபராதம் விதித்தனர். மேலும் இருசக் கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகை யில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருசக்கர வாகனங்க ளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 552 பேர் மீதும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டிச் சென்ற 89 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சிக்னலை மதிக்காமல் சென்ற 150 பேர் உட்பட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டதாக மொத்தம் 1,297 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதி களை மீறிய குற்றத்துக்காக 187 பேரின் ஓட்டுநர் உரி மமும் ரத்து செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது

நாமக்கல், மே 20- மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வீடு களில் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட எலக்ட் ரானிக் பொருட்கள் பழுது ஏற்பட்டு விட்டதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்ட னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்குட் பட்ட அக்ரஹாரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளது. அதிக அளவு விசைத்தறி தொழிலாளர் கள் சார்ந்த குடும்பங்கள் இங்கு வசித்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் பள்ளிபாளை யம் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அக்ரகாரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்த போது, அங்கு இருந்த மின் கம்பிகள் ஒன்றை ஒன்று உரசி கொண்டதால், அப்பகுதியில் மின்சார பாதிப்பு ஏற்பட்டது. இத னையடுத்து மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக மின் பாதிப்பை சரி செய்த நிலையில், ஒவ்வொரு வீடுகளிலும் மின்சாரம் அதிகமாகவும், குறைந்தும் என மாறி மாறி மின்சா ரம் வந்துள்ளது. இதன் காரணமாக செவ்வாயன்று இரவு அக்ரஹாரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடு களில் மின்விசிறி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் அதீத மின்சார அழுத்தத்தின் கார ணமாக பழுது ஏற்பட்டு இயங்கவில்லை. இதனால் ஆவேசம டைந்த பொதுமக்கள் புதனன்று காலை மின் இணைப்பு பாதிப்புகளை காண்பதற்காக மின்வாரிய ஊழியர்களுடன் வந்த பள்ளிபாளையம் மின்சார ஏஇ ராமதுரையை, முற்றுகை யிட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தின் அலட்சியத்தால் வீட்டிலுள்ள அனைத்து விதமான எலக்ட்ரானிக் பொருட்களும் பழுது ஏற்பட்டு விட்ட தாகவும், விசைத்தறி தொழிலாளர்களான எங்களால் இதை சரி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மின்வாரியம் சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த னர். அதற்கு பதில் அளித்த மின்வாரிய ஊழியர் இயற்கை யான முறையில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகளுக்கு மின்வாரியம் தரப்பிலிருந்து எதுவும் செய்ய முடியாது, அதிகா ரிகள் மத்தியில் பேசிவிட்டு சொல்வதாக பொதுமக்களை சம ரசம் செய்தார். தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ள மின் கம்பங்க ளில் மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்ட னர்.

நகராட்சி குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து

உதகை, மே 20- உதகை தீட்டுக்கல் பகுதியிலுள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை, 10 மணி நேரம் போராடி தீய ணைப்புத்துறையினர் அணைத்தனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. சுற்றுலாத் தலமாக இருப்பதால், ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தரு கிறார்கள். தற்போது கோடை சீசன் என்பதால், சுற்றுலாப் பய ணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இத னால் உதகை முழுவதும் தினமும் 45 டன்னுக்கு மேல் குப்பை கள் சேகரமாகிறது. இதில் மார்க்கெட்டில் மட்டும் சுமார் பத்து டன் குப்பைகள் அகற்றப்படுகிறது. குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளில் சேகரமாகும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்காததால், அதனை தரம் பிரிக்க தூய்மைப் பணியாளர்கள் சிரமமடைந்து வருகின்ற னர். இதனால் குப்பை கிடங்கில் குப்பைகளை சரிவர கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதனன்று காலை தீட்டுக்கல் குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட காவலாளி உடனே நகராட்சி அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறைக்கும் தக வல் தெரிவித்தார். தீயணைப்புத்துறையினர் இரண்டு பெரிய வாகனங்களில் தீயை அணைக்க சென்றனர். நெருப்பின் அனல் அதிகமாக இருந்ததால் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத் திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் வெளியே இருந்தபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை அணைக்க முயற்சித்தனர். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நகராட்சி மூலம் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 4 லாரிகளில் இருந்து தீயை அணைக்க தண்ணீர் பீய்சப்பட்டது. கொழுந்து விட்டு எறிந்த தீ ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து மறு சுழற்சி செய்யும் மையம் தீயால் முழுமையாக சேதமடைந்தது. மையத்திற்குள் இருந்த குப் பைகள் எரிந்து கொண்டிருப்பதால் அதனை அணைப்பதற்கு 10 மணி நேரமாக தீயணைப்புத்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த விபத்தால் எழும்பிய கரும்புகை தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

நாளை மின்தடை

ஈரோடு, மே 20- ஈரோடு, சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் வெள் ளியன்று (நாளை) நடை பெறவுள்ளது. இதனால் சிப் காட் வளாகம் (தெற்கு பகுதி தவிர) வாவிக்கடை, திரு வாச்சி, சோளிபாளையம், கருமாண்டி செல்லிபாளை யம், திருவேங்கடம்பாளை யம் புதூர், கந்தாம்பாளை யம், கந்தாம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளை யம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை சாலை, குன்னத்தூர் சாலை, பவானி சாலை, சிலேட்டர் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

நகராட்சி குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து

உதகை, மே 20- உதகை தீட்டுக்கல் பகுதியிலுள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை, 10 மணி நேரம் போராடி தீய ணைப்புத்துறையினர் அணைத்தனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. சுற்றுலாத் தலமாக இருப்பதால், ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தரு கிறார்கள். தற்போது கோடை சீசன் என்பதால், சுற்றுலாப் பய ணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இத னால் உதகை முழுவதும் தினமும் 45 டன்னுக்கு மேல் குப்பை கள் சேகரமாகிறது. இதில் மார்க்கெட்டில் மட்டும் சுமார் பத்து டன் குப்பைகள் அகற்றப்படுகிறது. குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளில் சேகரமாகும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்காததால், அதனை தரம் பிரிக்க தூய்மைப் பணியாளர்கள் சிரமமடைந்து வருகின்ற னர். இதனால் குப்பை கிடங்கில் குப்பைகளை சரிவர கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதனன்று காலை தீட்டுக்கல் குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட காவலாளி உடனே நகராட்சி அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறைக்கும் தக வல் தெரிவித்தார். தீயணைப்புத்துறையினர் இரண்டு பெரிய வாகனங்களில் தீயை அணைக்க சென்றனர். நெருப்பின் அனல் அதிகமாக இருந்ததால் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத் திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் வெளியே இருந்தபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை அணைக்க முயற்சித்தனர். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நகராட்சி மூலம் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 4 லாரிகளில் இருந்து தீயை அணைக்க தண்ணீர் பீய்சப்பட்டது. கொழுந்து விட்டு எறிந்த தீ ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து மறு சுழற்சி செய்யும் மையம் தீயால் முழுமையாக சேதமடைந்தது. மையத்திற்குள் இருந்த குப் பைகள் எரிந்து கொண்டிருப்பதால் அதனை அணைப்பதற்கு 10 மணி நேரமாக தீயணைப்புத்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த விபத்தால் எழும்பிய கரும்புகை தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

விபத்து புகார்: கேரள தம்பதியினரை அலைக்கழித்த

கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார்! கோவை, மே 20- கோவைக்கு வந்த கேரளம் மாநிலத்தை சேர்ந்த தம்பதி யினரை, தமிழக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவ காரத்தில் முதலமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக் கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளம் மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வர் விபின் ஜோஸ். தனது மனைவி அனு மற்றும் இரு குழந்தைகளுடன் கடந்த ஞாயிறன்று காரில் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கோவை பட்டணம் புதூர் அருகே பாலக்காடு புறவழிச்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று இவர்களது காரின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புல னாய்வுப் பிரிவில் இத்தம்பதியினர் புகார் அளித்தனர். ஆனால், புகாரை பெற்ற போலீசார் உடனடியாக சி.எஸ்.ஆர் (CSR) வழங்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அனு கூறுகையில், விபத் துக்குப் பிறகு கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் புகார் அளித்தோம். ஆனால், சி.எஸ்.ஆர் வழங்க தாம தம் செய்ததால் பயத்துடன் பெங்களூரு சென்றோம். பின்னர் காப்பீட்டு (இன்சூரன்ஸ்) நடவடிக்கைக்காக சி.எஸ்.ஆர் தேவைப்பட்டதால் மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்த போது கூடுதல் ஆவணங்களை கேட்டனர். அவற்றை கொடுத்த பிறகும், மதியம் 1.15 மணி முதல் இரவு 9 மணி வரை குழந்தைகளுடன் காவல் நிலையத்திலேயே காத்தி ருக்க வைத்தனர். இறுதியில் ஆய்வாளர் இல்லை என்று கூறி, திங்கட்கிழமை வந்து வாங்கிக்கொள்ளுமாறு திருப்பி அனுப் பினர், என்றார். தொடர்ந்து விபின் ஜோஸ் பேசுகையில், கேரளாவில் ஆன் லைனில் புகார் அளித்தாலே உடனடியாக சி.எஸ்.ஆர் நகல் கிடைத்துவிடுகிறது. ஆனால், தமிழகத்தில் காவல் துறை யினர் சாக்கு போக்கு சொல்லி எங்களை அலைக்கழித்தனர். எங்கள் நண்பர்கள் நேரில் சென்றபோதும் சி.எஸ்.ஆர் வழங்க மறுத்து, நாங்களே நேரில் வர வேண்டும் என கூறினர். நேரில் வந்த பிறகே சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டது என்று தெரிவித் தார். கேரளாவில் ஆன்லைன் மூலமாக எளிதாகப் பெறக்கூடிய ஒரு ஆவணத்திற்காக, தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் தங்களை தேவையில்லாமல் அலைக்கழித்ததை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த இத்தம்பதியினர், இந்த அவலநிலை குறித்து தமிழக அரசும் காவல்துறை உய ரதிகாரிகளும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:59.05 அடி நீர்வரத்து:253கனஅடி நீர்திறப்பு:1050கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:28.60/72 அடி நீர்வரத்து:265கனஅடி நீர்திறப்பு:1040கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:18.15/160 அடி நீர்வரத்து:347.00கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:64.05/120அடி நீர்வரத்து:182கனஅடி நீர்திறப்பு:162கனஅடி

எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக ரூ.9 லட்சம் மோசடி; ஒருவர் கைது

கோவை, மே 20- வெள்ளலூரை சேர்ந்த மாணவியின் தந்தையிடம் குறைந்த கட்டணத்தில் எம்பி பிஎஸ் சீட் பெற்றுத் தருவதாகக்கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை வெள்ளலூர் நேதாஜி வீதியை சேர்ந்த தியாகராஜனின் மகள், மருத்துவப் படிப்பில் சேரும் நோக்கில் நீட் தேர்வு எழுதி யிருந்தார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடை உரிமையாளர் ரஜினி காந்த் மூலம் செல்வகுமார் என்பவர் தியாக ராஜனிடம் அறிமுகமானதாக கூறப்படுகிறது. தன்னை மருத்துவக் கல்லூரிகளில் செல் வாக்கு கொண்ட நபராக அறிமுகப்படுத்திக் கொண்ட செல்வகுமார், தமிழ்நாட்டிலேயே குறைந்த கட்டணத்தில் எம்பிபிஎஸ் சீட் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார். இதனை நம்பிய தியாகராஜன், ஐந்து தவணைகளாக மொத்தம் ரூ.9 லட்சத்தை செல்வகுமாரிடம் கொடுத்ததாக கூறப்படு கிறது. பின்னர், மருத்துவக் கல்லூரி அறக் கட்டளையின் பெயரில் ரசீதுகள் மற்றும் அலாட்மென்ட் கடிதம் உள்ளிட்ட ஆவணங் கள் வழங்கப்பட்டன. அந்த ஆவணங்களை பயன்படுத்தி கல்விக்கடன் பெற வங்கியில் விண்ணப்பித்தபோது, ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதை வங்கி அதிகாரி கள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து மேற் கொண்ட சரிபார்ப்பில், அவை அனைத்தும் போலியான ஆவணங்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தியாகராஜன், போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, செல்வகுமாரை கைது செய்தனர். மேலும், மோசடிக்கு உடந்தையாக செயல் பட்டதாக கூறப்படும் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி மாணவி தற்கொலை: இளைஞர் கைது

ஈரோடு, மே 20- அந்தியூரில் பள்ளி மாணவி தற் கொலைக்கு காரணமான கல்லூரி மாண வரை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி, தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் இருந்தார். இதனி டையே, ஒருவரை காதலித்து வந்த நிலை யில், இருவருக்குமிடையில் கருத்து வேறு பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனது பாட்டி வீட்டிற்கு சென்ற மாணவி கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான புகா ரில் மாணவியின் அலைபேசியை ஆய்வு செய்ததில், மாணவியை காதலித்து வந்த சதீஷ் என்பவர், மாணவியை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளை பேசியுள் ளார். இதன் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. விழுப்பு ரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, தனி யாளம்பட்டுவை சேர்ந்த சதீஷ், தனது அலை பேசியை அணைத்து விட்டு தப்பியோடிய நிலையில், திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிப் படையினரிடம் பிடிபட்டார். தொடர்ந்து, அந்தி யூர் அழைத்து வரப்பட்ட சதீஷ் விசார ணைக்குப் பின் நீதிமன்ற காவலில் உட்படுத் தப்பட்டார்.