கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
19 May 2026, 11:54 pm

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நவீன வலைதள சுற்றுலா வழிகாட்டி

உதகை, மே 19- உதகையில் கோடை சீசனின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக போலீசார் சார்பில் நவீன வலைதள சுற்றுலா வழி காட்டி தொடங்கி வைக்கப்பட்டது. உதகையில் போக்குவரத்து நெரிசலை முன் கூட்டியே சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொண்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், வாகன நிறுத்தும் இடங்களில் வசதி உள்ளதா? என் பதை ஆன்லைனில் அறிந்து கொள்ளவும் தனியார் பங்களிப்புடன் நவீன வலைதள சுற்றுலா வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா துவக்கி வைத்து, செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்மார்ட் டூரிஸ்ட் என்ற பெயரில் கியூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகன நிறுத்தங்களில் இடம் உள்ளதா? என்பதை யும், போக்குவரத்து நெரிசல் உள்ளதா? என்பதை யும் முன்கூட்டியே எளிதாக ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சாலையில் சென்றால் எவ் வளவு நேரமாகும் என்பதையும் தெரிந்து கொள்ள லாம். அதுமட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் எந்த வரிசையில் சென் றால் எளிதாக சுற்றுலாத் தலங்களை பார்க்கலாம் என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக கார் போன்ற சிறிய வாகனங்களுக்கும், பேருந்து போன்ற பெரிய வாகனங்களுக்கும் இடம் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ளலாம், என்றார்.

குறைதீர் கூட்டம்: பொதுமக்கள் மனு!

கோவை, மே 19- கோவை மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கூட்டத்தில், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார் பில் மனுக்களை அளித்தனர். குறிப்பாக, ராமநாதபுரம் நடராஜன் காலனி (வார்டு 38, 65) பகுதியில் நீர்வழித்தட ஆக்கிரமிப்பு களால் மழைநீர் தேங்குவதாகவும், கடந்த இரண்டு மாதங்களாகக் குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றத் துடன் வருவதாகவும் பொதுமக்கள் புகார் அளித் துள்ளனர். வார்டுகள் 86, 84, 62 ஆகியவற்றை இணைக்கும் ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, போர்க்கால அடிப்படையில் தூர் வாரி பாதுகாப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர் மனு அளித்துள்ளார். இதேபோன்று, சௌரிப்பாளையம் (வார்டு 63) புறம்போக்கு நிலங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் கஞ்சா, மதுப் பயன்பாடு போன்ற சமூக விரோத செயல்கள் நடப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பு வழங்க வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாகப் பணி புரியும் உடற்கல்வி மற்றும் வகுப்பாசிரியர்கள், தங்க ளின் மாதாந்திர ஊதியத்தை ரூ.12,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தவும், நிலுவையின்றி வழங்க வேண்டும். 9-ஆவது வார்டில் பழைய கட்டிடத்தின் மீது தரமற்ற முறையில் கட்டப்பட்டு, இரு மாதங்க ளுக்கு முன் திறக்கப்பட்ட நகர்நல மைய கட்டிடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட மனுக்களை அளித்தனர்.

மாணவி பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது

கோபி, மே 19- கோபிசெட்டிபாளையம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொ டுமை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் மணி (50). இவர் அப்பகுதியில் ஒர்க் ஷாப் வைத் துள்ளார். அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளி யில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மணியின் ஒர்க் ஷாப் அருகே உள்ள தனது பாட்டியின் வீட் டிற்கு அந்த சிறுமி அவ்வப்போது வந்து சென்றுள்ளார். அதன்படி, சிறுமி கடந்த 2025 அக்டோபர் மாதம் வந்துள்ளார். அப்போது, அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்த மணி, அவரிடம் ஆசை வார்த்தைகளைக்கூறி பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்நிலையில், சிறு மிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப் பட்டதால், அவரை கோபியிலுள்ள தனி யார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர் கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந் தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட குழந்தை கள் நலக்குழுமத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணி யாளர் தேவகி, அந்த சிறுமியிடம் கடந்த மே 7 ஆம் தேதி விசாரணை மேற்கொண் டார். அப்போது, மெக்கானிக் மணி, அந்த சிறுமியை பாலியல் வன்கொ டுமை செய்தது தெரியவந்தது. இது குறித்து கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமூகப் பணியாளர் தேவகி புகாரளித்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மணியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

ரோஜா கண்காட்சி: ஜேஎஸ்எஸ் கல்லூரிக்கு பரிசு

உதகை, மே 19- உதகை ரோஜா கண்காட்சியில் 10 பரிசுகள் பெற்று ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி அசத்தியுள்ளது. உதகை அரசு ரோஜா பூங்காவில் நடந்த ரோஜா கண் காட்சியில், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி, 10 பரிசுகளை பெற்று பாராட்டுகளை குவித்துள்ளது. கண்காட்சி நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், ஜே.எஸ்.எஸ். மருந்தி யல் கல்லூரிக்கு தொட்டிகளில் வளர்க்கப்பட்ட ரோஜாக் களில் மூதல் மூன்று இடங்களை ஹைபிரிட் டீஸ், பிளோரி பண்டாஸ், ஸ்டாண்டர்ட்ஸ்களுக்கு வழங்கப்பட்டது. ரோஜா அலங்காரம், ரோஜா ரங்கோலி மற்றும் ரோஜா தயாரிப்பு களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி முதன்மை அலுவலர் பசுவண்ணா, பேராசிரியர்கள் சண்முகம், பிரியங்கா, பிரியதர்ஷினி, கல்லூரி அலுவலர் மோகன்குமார் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

சாலை விபத்தில் பெண் உட்பட 7 பேர் படுகாயம்

நாமக்கல், மே 19- பள்ளிபாளையம் அருகே தொழிலாளர் களை ஏற்றிச் சென்ற ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதிய விபத்தில், வட மாநில பெண் தொழிலாளர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற் பாலைக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்ல, ஞயிறன்று காலை ஜீப்பில் 6-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெப்படை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப் போது வாகன ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தெற்குப்பாளை யம் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டி ஒரு வர் சாலையை கடக்க முயன்றபோது, அவர் மீது மோதாமல் இருக்க ஜீப்பை சாலையோ ரம் திருப்பியதாக கூறப்படுகிறது. அப் போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சாலை யோர சுவரில் பலத்த சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 6 வட மாநில பெண் தொழிலாளர்களும், இருசக்கர வாகன ஓட்டியும் படுகாயமடைந்தனர். காய மடைந்த பெண்கள் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர். பலத்த காயமடைந்த இரு சக்கர வாகன ஓட்டி ஈரோட்டில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை மின்தடை

ஈரோடு, மே 19- ஈரோடு, கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் சின்னியம்பாளையம் மின்பாதையில் வியாழ னன்று (நாளை) பராமரிப் புப் பணிகள் நடைபெறவுள் ளது. இதனால் சின்னியம் பாளையம், ஆலுச்சாம்பா ளையம், ராம்ராஜ் நகர், சென் னப்பநாய்க்கன்பாளை யம், கொள்ளுகாட்டு மேடு, கரட்டாங்காடு, பழனிகாடு, வேலு கார்டன், ஆர்டி பள்ளி, காலேஜ், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் விநியோ கம் இருக்காது.

சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை: 33 பேர் மீது வழக்குப்பதிவு

தருமபுரி, மே 19- சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த 33 பேர் மீது தருமபுரி மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கள்ளச்சந்தையில் நடைபெறும் மது விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில், காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இதன்ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக முக்கிய பகுதிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளபட்டன. அதில், கள்ளச்சந்தையில் மது விற் பனை செய்த 27 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, சுமார் 1102 மது பாட்டில்கள் மற்றும் அதற்கு பயன் படுத்தப்பட்ட 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன. மேலும், போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 6 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:59.24/105அடி நீர்வரத்து:43 கனஅடி நீர்திறப்பு:950 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:28.97/72 அடி நீர்வரத்து:143கனஅடி நீர்திறப்பு:1120கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:16.01/160 அடி நீர்வரத்து:367.00கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:64.00/120அடி நீர்வரத்து:233கனஅடி நீர்திறப்பு:154கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:50.47/60அடி நீர்வரத்து:791கனஅடி நீர்திறப்பு:255கனஅடி

குதிரைகளை உதகைக்கு கொண்டு வர தடை

உதகை, மே 19- குதிரைகளுக்கு பரவும் ஈக்வின் ஹெர்பெஸ் வைரஸ் காரணமாக, வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு முறையான அனுமதியின்றி குதிரைகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், குதிரைகளுக்கு ஈக்வின் ஹெர்பெஸ் வைரஸ் காரணமாக, சுற்றுலா நகரமான உதகையிலுள்ள குதிரைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். மேலும், முறையான அனுமதியின்றி வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு குதிரைகளை கொண்டு வர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடை தொடரும். மேலும், குதிரைகள் சாலையில் சுற்றித்திரிந்தால், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் குதிரைகளுக்கு பயோச்சிப் பொருத்தும் பணிகளும் நடைபெறும், என்றார்.

கோவில் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், மே 19 - திருப்பூர் மாநகராட்சி 25ஆவது வார்டுக்கு உட்பட்ட அணைப்பாளையத்தில் குடியிருப்பு, கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள மதுபானக் கடையை (எண்:1965) அகற்றுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. தமிழக அரசு வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங் களுக்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதாக அறிவித்துள்ளது. இங்கு விநாயகர் கோவில் 165 மீட்டர், மாகாளியம்மன் கோவில் 360 மீட்டர், இயேசுநாதர் தேவாலயம் 390 மீட்டர் கருப்பராயசாமி கோவில் 165 மீட்டர் தொலைவில் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் முக்கிய சாலைக்கு அருகில் இந்த கடை அமைந்துள்ளது. எனவே உடனடியாக நீக்குமாறு டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளை யம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் செவ்வாயன்று நேரில் மனு அளித்தார்.