கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
22 Jul 2026, 10:52 pm

தரமற்ற டயர்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

நாமக்கல், ஜூலை 22- தரமற்ற இறக்குமதி டயர்களுக்கு தடை விதிக்கக் கோரி நாமக்கல் டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங் உரிமையா ளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் லில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்க துணைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் லாரி போக்குவரத்துத் தொழிலுக்கு பக்கபலமாக விளங்கி வரும் டயர் ரீட்ரேடிங் தொழில் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, சீனா மற்றும் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய் யப்படும் தரமற்ற டயர்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மேலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தரமான டயர்களுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநி லத் தலைவர் இராஜ்குமார், மாவட்ட இணைச் செய லாளர் ஹரிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

பிளாஸ்டிக் பயன்பாடு: அபராதம் விதிப்பு

உதகை, ஜூலை 22- உதகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்ப டுத்திய ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாக, பிளாஸ் டிக் பொருட்களுக்கு கடுமையான கட்டுப்பாடு களும், தடைகளும் அமலில் உள்ளன. ஆனாலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறையவில்லை. மாறாக அதிகரித்து வருகிறது வனப்பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் சிதறி கிடக்கின்றன. இந்நி லையில், உதகை நகராட்சி நிர்வாகம் சார்பில் சுகா தார உதவி ஆய்வாளர் வைரம் தலைமையிலான குழுவினர், உதகையிலுள்ள 10க்கும் மேற்பட்ட கடை கள் மற்றும் ஓட்டல்களில் செவ்வாயன்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு சில கடைகளில் தடை விதிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்ப டுத்தப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இரண்டு ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு ரூ.17,500 அபராதம் விதிக்கப்பட்டது.

காட்டுப்பன்றிகள் சுட்டுக்கொலை

கோவை, ஜூலை 22– கடந்த ஒரு வருடமாக பொதுமக்களையும், விவசாயி களையும் அச்சுறுத்தி வந்த காட்டுப்பன்றிகள் சுட்டு வீழ்த்தப் பட்டன. கோவை மாவட்டம், பி.என்.புதூர் பகுதியில் காட்டுப்பன்றி களின் நடமாட்டம் அதிகரித்து, பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இவற்றை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டுகள் அமைத்தும், கடந்த ஒரு வருடமாக பன்றிகள் அதில் சிக்காமல் போக்குகாட்டி வந்தன. இந்நிலையில், இப்பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக வனத் துறை அதிகாரிகள், கடந்த 20 ஆம் தேதி முதல் அப்பகுதி யில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து புத னன்று அப்பகுதியில் உலா வந்த 3 காட்டுப்பன்றிகளையும் வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மூன்று காட்டுப்பன்றிகளின் உடல்களும், அரசு விதிகளுக்குட்பட்டு, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆகி யோரின் முன்னிலையில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டன.

திருமூர்த்தி அணையில் அமைச்சர் ஆய்வு

உடுமலை, ஜூலை 22- திருப்பூர் மாவட்டம், உடுமலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவாரே தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. இவ்விழாவில் உணவுப்பொருள் வழங் கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ராஜ் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இத னைத்தொடர்ந்து, உடுமலை அருகே அமைந் துள்ள திருமூர்த்தி அணைப் பகுதிக்கு அமைச்சர் அருண்ராஜ் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அணையின் தற்போதைய நீர்மட்டம், பாசனத்திற்கான நீர் விநியோக முறை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதி கள் குறித்துப் பொதுப்பணித்துறை அதிகாரி களிடம் விரிவாக கேட்டறிந்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், திருமூர்த்தி அணையின் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 3.77 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன நீரின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போதிய அளவில் சென்றடையவில்லை என்ற கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. இக்கோரிக்கைகள் விரிவாக பரிசீலிக்கப்பட்டு, தேவையான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைப் பகுதிகளை சிறந்த சுற்றுலாத் தலங் களாக மாற்றும் வகையில், ரூ.18 கோடி மதிப் பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதேபோல், திருமூர்த்தி அணையிலிருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள ஏதுவாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது மாவட்ட நிர்வாக உயர் அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரி கள் உடனிருந்தனர்.

சிட்கோ செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு

உதகை, ஜூலை 22- இனி வரும் காலங்களில், அதிகளவி லான தொழில் முனைவோர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதென, அமைச்சர் மதன்ராஜா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், குன்னூர் இன்ட்கோ சர்வ் தேயிலை தொழிற்சாலையில், டீ சர்வே மற்றும் மாவட்ட தொழில் மைய அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பி.மதன்ராஜா தலைமை வகித்தார். இன்ட்கோ சர்வ் முதன்மை செயல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, புதனன்று உதகையி லுள்ள மாவட்ட தொழில் மைய அலுவ லக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் மற்றும் சிட்கோ ஆகியவற்றின் செயல்பாடு கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், நீலகிரி மாவட்டத்தில் 7 திட்டங்க ளின் வாயிலாக, 2026-2027 ஆம் நிதியாண் டிற்கு மொத்தம் 162 விண்ணப்பங்கள் வங்கி களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, 68 பய னாளிகளுக்கு ரூ.9.03 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் ஒப்பளிப்பு ஆணையும், ரூ.3.04 கோடி மானியம் ஒப்பளிப்பும் செய்யப்பட் டுள்ளது. இனி வரும் காலங்களில் அதிக அள விலான தொழில் முனைவோர்களை உரு வாக்கிடும் வகையில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும், என்றார். இதைத்தொடர்ந்து, சிட்கோ தொழிற் பேட்டை வளாகத்தில், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று செயல்பட்டு வரும் பல் வேறு தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய் தார். இந்நிகழ்வில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரேம்குமார், கோட்டாட்சி யர் டினுஅரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை? போலீசார் விசாரணை

தருமபுரி, ஜூலை 22- தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே உள்ள கிணற்றில் 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து காவல் துறையி னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட தோக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சர வணன். இவரது மனைவி அம்சா (35) மற்றும் மகள்கள் ஜீவிதா (16), நவீனா (6), மகன் குமரன் (3) ஆகியோர், கடந்த ஜூலை 19 ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள னர். இந்நிலையில், செவ்வாயன்று இரவு இவரது வீட்டிலி ருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில், ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் அருகிலுள்ள அம்சாவின் தந்தை நிலத்தில் உள்ள கிணற்றில், அம்சா மற்றும் அவரது குழந்தைகளின் சடலங்கள் மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல றிந்த அதியமான்கோட்டை காவல் துறையினர் மற்றும் தீய ணைப்புத்துறையினர் அங்கு சென்று சடலங்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தம்பதி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் அம்சா, தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு மாயமானது தெரியவந்துள் ளது. இரண்டு நாள்களுக்குப்பின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதால், கொலையா? அல்லது தற் கொலையா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரு கிறது. இச்சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை யும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தனியார் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு போராட்டத்தை தொடர்ந்து, அமைச்சர் ஆய்வு

ஈரோடு, ஜூலை 22- அம்மாபேட்டை அருகே எத்தனால் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சியில் தனியாருக்கு சொந்தமான ஸ்டார்ச் தயாரிக்கும் கம்பெனி மற்றும் எத்தனால் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைக ளில் இருந்தும் வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இத னால், பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து புகாரளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த ஜூலை 18 ஆம் தேதியன்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழி யாக வந்த அமைச்சர்கள் செங்கோட்டை யன், விஜய் பாலாஜி, ஆட்சியர் கந்தசாமி ஆகி யோர், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். இந்நிலையில், செவ்வாயன்று சுற்றுச்சூழல் துறை அமைச் சர் ராஜீவ், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகளுடன், அந்த கிராம மக்களிடம் பாதிப்பு களை குறித்து கேட்டறிந்தார். விவசாய நிலங் களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது, தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வெளி வந்ததை கண்டு அமைச்சர் அதிர்ச்சியடைந் தார். அதனை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது, 2,000 டிடிஎஸ் அளவு இருப் பது தெரியவந்தது, தொடர்ந்து, அவற்றின் மாதிரிகளை பரிசோதனைக்காக அதிகாரி கள் சேகரித்தனர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அமைச்சர் தெரிவித்தார்.