கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
15 Jun 2026, 12:20 am

தங்கும் விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு உதகை, ஜூன் 14- உதகைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் தனியார் தங்கும் விடுதியில் சாப்பிட்ட உணவால் 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற் பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கர்நாடகா மாநிலம், மங்களூருவிலுள்ள மருத்து வக்கல்லூரியில் பயிலும் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியர்களுடன் உதகைக்கு சுற் றுலா வந்துள்ளனர். இவர்கள் உதகை அருகே எம ரால்டு பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் உணவருந்திய நிலையில், அதில் 30க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால் எமரால்டு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முத லுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 15க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உயர் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இதுகுறித்து எமரால்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

கோவையில் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை

கோவை, ஜூன் 14- கோவை மாவட்டத்தில் 7 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக் கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித் துள்ளன. இந்நிலையில், மாவட்டத்தில் மொத்தம் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்ட றியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவ ரும் கோவை அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது. தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்கால நோய் பர வலை தடுக்க சுகாதாரத் துறையினர் தீவிர பொது சுகா தார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். டெங்கு கொசுக்களை அழிக்க தெருத்தெருவாக கொசு மருந்து அடிக்கும் பணிகளும், பிளீச்சிங் பவு டர் தூவும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், தண்ணீர் தொட்டிகளில் கொசுக்கள் உற் பத்தி ஆவதை தடுக்கும் வகையில் ’அபேட்’ மருந்து தெளிக்கும் பணிகளும் தொடர்ந்து நடை பெறுகின்றன. இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தலை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருந்தகங்களுக்கு சென்று சுய மாக மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உதகை சுற்றுப்பேருந்துகளில் ஒரு லட்சம் பேர் பயணம்

உதகை, ஜூன் 14- நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் காலமான கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்ட சுற்றுப் பேருந்துகளில் (சர்க்கியூட் பேருந்து) ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகைக்கு நாள்தோறும் ஏரா ளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதி களவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்று லாப் பயணிகள் வசதிக்காக கடந்த சில ஆண்டுக ளாக சுற்றுப்பேருந்து (சர்க்கியூட் பஸ்) சேவை போக்குவரத்து கழகம் மூலம் அறிமுகம் செய்யப் பட்டது. குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மக்கள் கண்டு ரசிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த பேருந்து களில் பெரியவர்களுக்கு ரூ.100, குழந்தைகளுக்கு ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்பட்டது. இத்திட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இம்முறை கடந்த ஏப்ரல் மாதம் துவக்கத் தில் 4 பேருந்துகள் இயக்கப்பட்டன. சுற்றுலாப் பய ணிகள் வருகை அதிகரித்தை தொடர்ந்து படிப்படி யாக உயர்த்தப்பட்டு, மலர்கண்காட்சி நடந்த 10 நாட் களில் 40 பேருந்துகள் வரை இயக்கப்பட்டன. தொடர்ந்து, இம்முறை பள்ளிகள் திறக்க தாமதம் ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக மாக இருந்தது. இதனால் சுற்றுப்பேருந்துகள் ஜூன் மாதம் துவக்கம் வரை இயக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் இந்த பேருந்துகளில் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் போக்குவரத்துக்கழகத்திற்கு ரூ.1 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மின் வேலியின் மின் அளவை கணிக்கும் புதிய கருவி கண்டுபிடிப்பு

ஈரோடு, ஜூன் 14- மின்வேலியில் சட்டவிரோதமாக செலுத்தப் பட்ட மின் அளவை துல்லியமாக கணிக்கும் புதிய கருவியை பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி கண்டுபிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர், தாளவாடி பகுதியில் விவசாய நிலத்துக் குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானையை கட்டுப்படுத்துவதற்கு மின் வேலியில் உயரழுத்த மின்சாரத்தை செலுத்துவ தால், அதை அறியாமல் மின்சாரம் பாய்ந்து யானை கள் உயிரிழக்கின்றன. இதைத்தடுக்க வனத்துறை மற்றும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி ஆராய்ச்சிக்குழுவினர், புதிய மின் அளவீடு சோலார் கருவியை கண்டுபிடித்துள்ளனர். சோலார் சக்தியில் இயங்கும் இந்த புதிய கருவி மூலமாக, மின்வேலி யில் செலுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவை துல்லி யமாக கண்டறிந்து, விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும். இந்த கருவி வனத்துறையினருக்கு பேருதவியாக இருக்கும்.

யானை உயிரிழப்பு

ஈரோடு, ஜூன் 14- தமிழ்நாடு - கர்நாடகா எல் லையான ஈரோடு மாவட் டம், சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி வனப்பகுதி யில் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிர் களை சேதப்படுத்தி வரு கின்றன. மக்களுடன் வனத் துறையினர் இணைந்து யானைகளை விரட்டி வரு கின்றனர். இதற்கிடையே, ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10 வய துள்ள பெண் ஒற்றை யானை கரளவாடி, தமிழ்ப்புரம், ஓங் கன்புரம், மல்லன்குழி ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து, கடந்த 4 நாட்களாக நடமாடி வந்தது. மானாவாரி நிலத் தில் புகுந்த யானை தீவனம் சாப்பிட்டு அதே பகுதியில் முகாமிட்டது. இந்நிலையில், கரளவாடி கிராமத்துக்குள் வெள்ளியன்று புகுந்த யானை மானாவாரி நிலத்தில் சுருண்டு விழுந்தது. அங்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலில் தண் ணீர் தெளித்து வெப்பத்தை தணித்தனர். இருப்பினும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், யானை உயிரி ழந்தது. இதுகுறித்து வனத் துறையினர் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பில் அலட்சியம்; 3 போலீசார் பணியிடை நீக்கம்!

கோவை, ஜூன் 14- கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து தப்பிய கார் மோசடி கைதி 5 மணி நேரத்தில் கைது செய் யப்பட்டார். இந்த கைதி தப்புவதற்கு உடந்தையாக செயல் பட்டதாக காவலர் உட்பட இருவர் சிறையிலடைப்பு, 3 போலீ சார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் திருப்பூர் மாவட்டங்க ளில் 30-க்கும் மேற்பட்ட சொகுசு கார் விற்பனை மோசடி வழக்குகளில் தொடர்புடைய ஆந்திராவை சேர்ந்த பிம்முடு அஜித் குமார் (35) என்பவர் கடந்த வாரம் கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார். சர்க்கரை நோய் மற்றும் கால் காயம் காரணமாக கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், வெள்ளியன்று இரவு கழிப்பறை துவாரத்தின் வழியே நைசாக நுழைந்து, முகத்தை துணியால் மூடிக்கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் கண் ணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தப்பியோடிய 5 மணி நேரத்திற்குள், சேலம் மேச்சேரி பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீசாரால் கைதி மீண்டும் மடக்கிப் பிடிக் கப்பட்டார். இதுகுறித்து பந்தையசாலை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கைதி அஜித் குமார் நீண்ட நாட்களாக திட்டம் தீட்டி தப்பியது அம்பலமானது. அவருக்கு தப்பிக்க உடந்தையாக இருந்த கார் ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் ஒரு இரண்டாம் நிலை காவலர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கைதிகள் பாதுகாப்பில் அலட்சியமாக வும் கவனக் குறைவாகவும் செயல்பட்ட சிறப்பு உதவி ஆய் வாளர் பெரியசாமி, காவலர்கள் பாரதிதாசன், அசோக்குமார் ஆகிய 3 பேரைப் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வாடகை நிலுவை: 19 கடைகளுக்கு ‘சீல்’

ஈரோடு, ஜூன் 14- ஈரோடு ஜவுளிச்சந்தையில் ரூ.60 லட்சம் வாடகை நிலுவை வைத்திருந்ததாக 19 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள மாநக ராட்சி வணிக வளாகத்தில் ஜவுளிச்சந்தை செயல்பட்டு வருகி றது. இங்கு 200க்கும் மேற்பட்ட ஜவுளி விற்பனைக் கடை கள் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி செயல்பட்டு வரு கின்றன. இதில் 19 கடைகள் ரூ.60 லட்சம் வரை நீண்ட காலமாக வாடகை பாக்கி வைத்திருந்தனர். இதையடுத்து சம் பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கித் தொகையை உடனடியாக செலுத்துமாறு மாநகராட்சி நிர்வா கம் சார்பில் முன்னறிவிப்பு வழங்கப்பட்டது. அதற்கான காலக்கெடுவும் வழங்கப்பட்டது. ஆனால், அறிவுறுத்தலுக்கு பின்னரும் இந்த 19 கடை உரிமையாளர்கள் வாடகை பாக்கி தொகையை செலுத்தாததால், ஈரோடு மாநகராட்சி ஆணை யர் அர்பித் ஜெயின் உத்தரவின்பேரில், மாநகர வருவாய் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டனர். இதன்படி வாடகை பாக்கி வைத்தி ருந்த 19 கடைகளும் வெள்ளியன்று பூட்டி ’சீல்’ வைக்கப்பட் டன. சம்பந்தப்பட்ட 19 கடைகள் மொத்தமாக ரூ.60 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருப்பதாக மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்தனர். கடைகள் ’சீல்’ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடை உரிமையாளர்கள் ரூ.20 லட்சம் வாடகை பாக்கி தொகையை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முட்டை கொள்முதல் விலையை உயர்த்த முடிவு!

நாமக்கல், ஜூன் 14- முட்டை ஏற்றுமதி கடும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் கொள்முதல் விலையை உயர்த்த தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங் கம் முடிவெடுத்துள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, அதன் தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்கா - ஈரான் - இஸ் ரேல் ஆகிய வளைகுடா நாடுகளின் போர் பதற்றம் மற்றும் கப்பல் வாடகை உயர்வு காரணமாக, வளைகுடா நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி தினசரி 1 கோடியிலிருந்து 25 லட்சமாகக் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை உயர் வால் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு முட்டைகளை ஏற்றிச் செல்லும் டீசல் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளது. கோழித்தீவன மூலப் பொருட்களான மக்காச்சோளம், சோயாவின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, பண் ணையாளர்கள் நஷ்டமின்றி தொழிலை நடத்த முட்டை கொள்முதல் விலையை குறைந்தபட்சம் 7 ரூபாயாக உயர்த்த வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தூரத்தை கணக்கிட்டு விரைவில் விலை உயர்த்தப் படும். தற்போது கேரளாவில் மீன்பிடி தடை காலம் என்பதால் முட்டை நுகர்வு அதிகரித் துள்ளது. பண்ணைகளில் நிலவும் 80% வட மாநில தொழிலாளர்கள் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க 100 நாள் வேலைத்திட்ட ஆட்களை பயன்படுத்த தமிழக அரசை அணுக உள்ளோம், என் றார்.