தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

16 May 2026, 11:48 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நீலகிரி: மே 18 ஆம் தேதி விடுமுறை

உதகை, மே 16- நீலகிரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 18 ஆம் தேதி தொடங்கப்படுவதையொட்டி, அன்றைய தினம் மாவட்டத் திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மே மாத கோடை விடு முறையின்போது, மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் அரசின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 128 ஆவது மலர்க் கண்காட்சி மே 18 ஆம் தேதி துவங்கு கிறது. இதையொட்டி, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்க ளுக்கு மே 18 ஆம் தேதி (திங்களன்று) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான அன்றைய தினம், மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 6 ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்துக்கு பணி நாள் ஆகும். கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், ஈரோடு தவெக எம்எல்ஏக்கள் பேட்டி

திருப்பூர், மே 15 - திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு மேம் பாலங்கள் திட்டப் பணி மேற்கொள்ளப்படும் என்று திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ பாலமுருகன் கூறினார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலமுருகன் எம்எல்ஏவாக பதவி ஏற்று திருப்பூர் திரும்பினார். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணி களை ஆய்வு செய்து போக்குவரத்து நெருக்கடி தீர்வதற்கு, ஒரு மாதத்திற்குள் பணிகளை முடித்து தருமாறு அதிகாரி களிடம் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசுகையில் திருப்பூரின் போக்குவரத்து நெரிசல் தீர முழுமையாக ஆய்வு செய்து மேம்பால திட்டப்பணிகள் மேற் கொள்ளப்படும். பள்ளி மற்றும் பேருந்து நிலையங்கள் அரு கில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருவது மற்றும் தலைவரின் பல்வேறு நலத்திட்ட செயல்கள் பொதுமக்க ளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று, ஈரோடு கிழக்குத் தொகுதி தவெக சட்டன்ற உறுப்பினர் விஜய் பாலாஜி சனியன்று ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து காளிங்கராயன் இல் லத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களின் அடிப் படை பிரச்சனைகளை அறிந்து, சரி செய்வேன். ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து, சில குறைகளை சரி செய்ய கேட்டுள்ளேன். அடுத்த வாரம் ஆய்வுக்கூட்டம் நடத்தி, உள், வெளி நோயாளிகளுக்கான தேவை, சாலை வசதி, இயந் திரங்கள் குறித்த விபரம் தர கேட்டுள்ளேன். மாவட்டத்தில் மக்களுக்கு இடையூறாக இருந்த 41 மதுபானக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 2 கடைகள் விபரம் கொடுத் துள்ளோம், என்றார்.

பள்ளி வேனில் சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஓட்டுநர் கைது!

கோவை, மே 16- கோவையில் பள்ளி வேனில் திரும்பிய 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த தனி யார் பள்ளி வாகன ஓட்டுநரை மாநகர கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோவை பகுதியைச் சேர்ந்த முதலாம் வகுப்பு படிக்கும் அச்சிறுமியின் தந்தை காலமாகிவிட்டதால், தாய் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். சிறுமி கோவை யில் உள்ள தாத்தா, பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்தார். கோடை விடுமுறைக்காக தாய் தனது மகளை பெங்களூரு அழைத்துச் சென்றபோது, சிறுமி சோர்வாகவும் மௌன மாகவும் இருந்துள்ளார். சந்தேகமடைந்த தாய் மருத்துவப் பரிசோதனை செய்ததில், சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. தாய் கனிவோடு விசா ரித்தபோது, பள்ளி முடிந்ததும் தினமும் முதல் ஆளாக வேனுக்கு வரும் சமயத்தில், ஓட்டு நர் சாக்லெட் கொடுத்துப் பாலியல் தொல்லை தந்ததாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக வும் சிறுமி அழுதுகொண்டே கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் கணே சன் (43) என்பவரைப் போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்து சிறை யில் அடைத்தனர். இச்சம்பவம் பெற்றோர் களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

தோழர் கே.வரதராஜன் 6 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பூர், மே 16- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான தோழர் கே.வரதராஜன் 6 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஊத்துக்குளி ரயிலடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகாக்குழு அலுவலகத்தில் தோழர் கே.வி படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, ஊத்துக்குளி ஆர்.எஸ். கிளைச் செயலாளர் கே.ஏ.சிவசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரயில் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை, மே 16- ஒண்டிப்புதூர் அருகே ரயில் மோதி 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த முருகேசன் - ஜெயபிரியா தம்பதி யின் மகன் பிரகதீஷ் (8) அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி விடு முறை என்பதால் பிரகதீஷ் வீட்டில் இருந்து வந்தார். வெள்ளியன்று மதியம் பிரகதீஷ் விளையாட செல்வதாகக்கூறி வெளியே சென்றுள்ளார். பின்னர் ஒண்டிப்புதூர் சவு டேஸ்வரி நகரில் உள்ள ரயில்வே தண்ட வாளம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ரயில் வருகிறதா என தண்டவாளம் அருகே நின்று வேடிக்கை பார்த்துள்ளார். அப்போது ரயில் வருவதை பார்த்த பிரகதீஷ் தண்டவாளத்தின் ஓரத்தில் நடந்து சென்றுள்ளார். அதில் எதிர் பாராத விதமாக ரயில் சிறுவன் பிரகதீஷ் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவை ரயில்வே போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து பிரகதீஷ் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

லாரி ஓட்டுநர்களிடம் மாமூல் வசூல்: 3 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

தருமபுரி, மே 16- தொப்பூர் முதல் ஓமலூர் வரை வரும் லாரிகளில் மாமூல் வசூல் செய்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வா ளர், இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சுங் கச்சாவடி அமைந்துள்ளது. இதன் அருகில் நெடுஞ் சாலை ரோந்துக் காவலர்கள், சாலையில் செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் பணம் பெறுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வபதி மற்றும் இரண்டு தலைமை காவலர்கள் பார தன், வெங்கடேசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய் யப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரு வதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

இளைஞர் வயிற்றில் 14 கிலோ கட்டியை அகற்றி அரசு மருத்துவமனை சாதனை

பொள்ளாச்சி, மே 16- பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், இளைஞர் வயிற்றில் இருந்த 14 கிலோ கட்டியை அரசு மருத்துவ மனை மருத்துவக்குழு வெற்றிகரமாக அகற்றியுள்ளது. பொள்ளாச்சி அடுத்த வடக்கி பாளையத்தை சேர்ந்த 40 வயது சசிகுமார் என்பவருக்கு இடுப்பில் வலது புறத் தில் கட்டி முற்றிய நிலையில் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை சிடி ஸ்கேன், ட்ரூக்கட் பயாப்ஸி மற்றும் பல மருத்துவ சோதனைகள் செய்த போது அவருக்கு உடனடி யாக அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது. பின்னர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் முருகேசன், டாக்டர் சங்க மித்ரா மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள் குழு 4 மணி நேரம் போராடி 14 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி தற் போது நலமுடன் உள்ளார். தனியார் மருத்துவமனைகளில் இது போன்று கடின மான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை செலவாக வாய்ப்புள்ளது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர் குழு விற்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா ஆகியோருக்கும் சசிகுமார் மற்றும் அவரது குடும் பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்: 59.64 அடி நீர்வரத்து: 398 கனஅடி நீர்திறப்பு: 700 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:30.40/72 அடி நீர்வரத்து:156கனஅடி நீர்திறப்பு:1210கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:13.24/160 அடி நீர்வரத்து:39.02கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:62.35/120அடி நீர்வரத்து:219கனஅடி நீர்திறப்பு:81கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:46.87/60அடி நீர்வரத்து:800கனஅடி நீர்திறப்பு:241கனஅடி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.