தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

4 Nov 2026, 11:52 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

உதகை, நவ.4-பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

குந்தா தாலுகாவிற்குட்பட்ட எடக்காடு நடுஹட்டிபகுதியை சேர்ந்தவர் வசந்த். இவருடைய தந்தை பெயரில் உள்ள மூன்றரை சென்ட் நிலத்தை, தான செட்டில்மெண்டாக வாங்கிய இவர், பட்டா மாற்றத்திற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவை தொடர்பு கொண்டார். அப்போது பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய தனக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று உமா பிரியா கேட்டுள்ளார்.ஆனால், அவ்வளவுதொகை தர முடியாது என்று வசந்த் கூறியுள்ளார். கடைசியில் ரூ.1¼ லட்சம் தந்தால் பணியை முடித்துகொடுப்பதாக உமா பிரியாகூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத வசந்த், நீலகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புகாரளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர்சண்முகவடிவு, துணை ஆய்வாளர் சக்தி தலைமையிலான காவல்துறையினர், ரசாயனம் தடவிய பணத்தை, வசந்த்-டம் கொடுத்தனர்.இந்நிலையில், நியூ அட்டுபாயில் என்ற இடத்தில் உமா பிரியா பணி நிமித்தமாக இருந்ததால், அந்த பணத்தை மஞ்சூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வசந்த் பணத்தை தனியார் வங்கிஊழியரிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும்,இதுகுறித்து விசாரணை நடத்திவிஏஓ உமா பிரியாவை கைது செய்தனர்.

விதிகளை மீறி விளம்பர பதாகைகள்புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை!

உடுமலை, நவ.4-திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம் பள்ளபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வைக்கப்பட்டுள்ள விதிமீறல் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தியுள்ளது.

திருமூர்த்திமலை, அமராவதி மற்றும் மூணார்செல்லக்கூடிய இச்சாலை வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சாலை ஓரங்களில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள ராட்சதவிளம்பர பதாகைகள் வாகனஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து, விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. பொது இடங்களில் பதாகைகள் வைப்பது தொடர்பாக நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருந்தும், அவை இங்கு மீறப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளபாளையம் ஊராட்சி நிர்வாகம்மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.விபத்துகள் நிகழும் முன், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த பதாகைகளை அகற்ற வேண்டும் என்றும்,அலட்சியம் காட்டியஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழக்கழிவுகளை அகற்ற மாமூல்!

சேலம், நவ.4-சேலத்தில் அழுகிய பழக்கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் மாமூல் கேட்பதாக புகார்எழுந்துள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையம் முதல் அக்ரஹாரம் வரை 500-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் பழ மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பழங்களை வாங்கிச் செல்கின்றனர். விற்பனையாகாமல் மீதமுள்ள பழக்கழிவுகளைமாநகராட்சி நிர்வாகம் அகற்றி, மின்சாரம் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்துவது வழக்கம். இதற்காக பழக்கடை வியாபாரிகள் குப்பை வரியும் செலுத்தி வருகின்றனர். கடந்த ஆயுத பூஜைக்கு பிறகு மாநகராட்சி நிர்வாகம் முறைபழ கழிவுகளை அகற்றாததால், அழுகிய பழங்கள் தேங்கி, அப்பகுதிமுழுவதும் கடும் துர்நாற்றம்வீசுகிறது. மேலும், பழக்கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் மாமூல் கேட்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே குப்பை வரி செலுத்தும் நிலையில், கூடுதல்பணம் கேட்பதால்சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து சேலம் பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபால் கூறுகையில், முக்கிய வணிகப்பகுதிகளில் பழக்கழிவுகள் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேங்கியுள்ள பழக்கழிவுகளை உடனடியாக அகற்றி,சுகாதாரத்தை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தட்கல் மின் இணைப்பு பெற அழைப்பு

உதகை, நவ.4-தாட்கோ மூலம் வளமிகு வேளாண்மை உதவித்திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த விவசாயிகள் தட்கல்மின் இணைப்பு பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சமூக நீதித்துறையின் சார்பில் தாட்கோ மூலம்ஆதிதிராவிடர் விவசாயிகளின் பாசன வசதி, வேளாண்உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் வளமிகு வேளாண்மை உதவித்திட்டம்2026-27 ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பும் விவசாயிகள், ஆதிதிராவிட இனத்தை சார்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், விவசாய நிலம்விண்ணப்பதாரரின் பெயரில் சொந்தமாக இருப்பதுடன், அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்கவேண்டும். தகுதிகளுடைய விவசாயிகள் என்ற தாட்கோ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து, பயன்பெறலாம் என நீலகிரி மாவட்ட தாட்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு! 94,201 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்

உடுமலை, நவ.4–பாலாறு படுகை மண்டலத்தில் 94,201ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்வகையில் திருமூர்த்தி அணையில் இருந்து புதனன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தின் கீழ் பாலாறு படுகை மண்டலத்தில் 94,201 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்படி, 2027 ஜனவரி 3ஆம் தேதி வரை60 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தொடக்கத்தில் வினாடிக்கு 250 கனஅடி வீதம் திறக்கப்படும். நீரின் அளவு, படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழுக்கொள்ளளவான வினாடிக்கு 912 கனஅடி வரை வழங்கப்படும். மேலும், மழையைப் பொறுத்து பாசனப் பகுதிகளுக்கு உரியகாலஇடைவெளியில் தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம்,தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய வட்டங்களிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளிலும் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறவுள்ளன.முன்னதாக இந்நிகழ்வில், அமைச்சர் அருண்ராஜ், ஆட்சியர் சி.முத்துக்குமரன் மற்றும் வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறைஅதிகாரிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

நியாய விலைக்கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்க வலியுறுத்தல்

உதகை, நவ.4-நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் சிறப்பு மளிகைதொகுப்பு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குன்னூர் நுகர்வோர்பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒருங்கிணைந்த சிறப்பு மளிகை தொகுப்பு ரூ.200 என்ற விலையில்,மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்யஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரிமாவட்டத்தில், உதகை கூட்டுறவு நிறுவனம், கோத்தகிரி கூட்டுறவு பண்டகம் மற்றும் அருவங்காடு கார்டைட் பேக்டரிகூட்டுறவு பண்டக சாலை ஆகிய 3 இடங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டமக்களினநலனை கருத்தில் கொண்டு அனைத்து நியாய விலை கடைகளிலும் சிறப்பு மளிகை தொகுப்பினை விற்பனை செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும் என குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஆல்தொரை, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில், மளிகைப் பொருட்கள் விலை உயர்வை கருத்தில் கொண்டு மலிவு விலையில் மளிகை தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நீலகிரி மலை மாவட்டத்திற்கு மளிகைப் பொருட்கள் அனைத்தும்சமவெளி பகுதிகளிலிருந்து வருவதால் சாதாரணமாகவே விலை அதிகமாக இருக்கும். தற்போதுள்ள சூழலில் மேலும் விலை உயர்ந்துள்ளது. இதனால் இங்கு பெரும்பான்மையாக வாழும் சிறு குறு விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகிஉள்ளனர். எனவே, நீலகிரியின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும்மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை!

சேலம், நவ.4-கால்நடை பராமரிப்புத் துறையில் உதவியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கமலி தெரிவித்தார்.சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவமனை மற்றும் நிர்வாக அலுவலகத்தில் புதனன்று அமைச்சர்கமலி ஆய்வு மேற்கொண்டார். அப்போது,கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், மருத்துவமனையின் தேவைகள்குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், கறவை மாடுகள் அடுத்தடுத்து உயிரிழப்பது குறித்து ஆய்வு செய்ய மாதிரிகள்சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தலைவாசல் கால்நடைபூங்காவில் தேவையான மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு

வருவதாகவும் அமைச்சர் கமலி தெரிவித்தார்.

சீருடை வழங்கல்

உதகை, நவ.4-தீபாவளியை முன்னிட்டு,தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி உதகை நகராட்சி கூட்டரங்கில் புதனன்று நடைபெற்றது. ஆணையர் தாமோதரன் தலைமை வகித்தார்.நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார் ஆகியோர், தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகள்மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர். இந்நிகழ்வில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு

உடுமலை, நவ. 4 –ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதனன்று நடைபெற்றஉடுமலை நகரமன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் வேலுச்சாமி தனிநபர் தீர்மானங்களைமுன்வைத்தார்.உடுமலைப்பேட்டை நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும். நகராட்சியின் நிர்வாகம், தொழிலாளர் நலன், நிதி மேலாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது.

நகராட்சியின் கடந்த ஐந்தாண்டு நிர்வாகச் செயல்பாடுகள், மனைப்பிரிவு அங்கீகாரங்கள், நகர்மன்ற கூட்ட தீர்மானங்கள் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்க வேண்டும். நகராட்சி சந்தை கட்டடப்பணிகள்தாமதம், பழைய கட்டடத்தை இடித்தபோது கிடைத்த 25 டன் இரும்புக் கம்பிகள், சுகாதாரத் துறைவாகனங்கள் மூலம் கிடைத்த வருவாய், குப்பை மேலாண்மைக்கான செலவினங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் நகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட சேவைகளை பெற பொதுமக்கள்அலைக்கழிக்கப்படுவதையும், கையூட்டு புகார்கள் எழுவதையும் சுட்டிக்காட்டி, புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 169 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிறம் மாறிய காவிரி ஆறு: மக்கள் அச்சம்

ஈரோடு, நவ.4-பவானி பகுதிகளில் பாயும் காவிரி ஆற்றில், தண்ணீர் பச்சை நிறத்தில் பாசிபோன்று கலந்து ஓடுவதால் சூழலியலாளர்கள்கவலை தெரிவித்துள்ளனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு, விநாடிக்கு 1,000 கன அடி நீர் மட்டுமே தற்போது திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி ஆற்றில் ஓடும்தண்ணீர் பச்சை நிறத்தில்

காணப்படுகிறது. அதிகளவில் கரையோரப் பகுதிகளில் பச்சை நிறத்தில் படிவம் தேங்கியுள்ளதால், ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் செல்லும் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்ஆற்றில் பச்சை நிறத்தில் படிவங்கள் கலந்தும், தண்ணீரின் நிறம் மாறியும் காணப்பட்ட நிலையில், கரையோரப் பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரின் நிறமும் மாறியிருந்தது. ஆற்றிலிருந்த மீன்களும் அதிக அளவில் செத்து மிதந்தன. காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள், குடியிருப்புகளின் கழிவுகள் நேரடியாக கலக்கும் நிலையில், தண்ணீரும் மிகக்குறைந்த அளவிலேயே திறக்கப்படுவதால் மாசடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரை முறையாக சுத்திகரித்து விநியோகிக்க வேண்டும். தண்ணீரில் காணப்படும் பச்சை நிற படிவம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தீபாவளி பண்டிகை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம், நவ.4-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, பெங்களூரு–திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்களும், கோவை–திண்டுக்கல் இடையே பொள்ளாச்சி வழியாக முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

பெங்களூரு கண்டோன்மென்ட்–திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில் (06575) நவம்பர் 6-ஆம் தேதி மாலை 4.40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 0.30 மணிக்குச் சென்றடையும். மறுமார்க்க ரயில் (06576) நவம்பர் 7-ஆம் தேதி மதியம் 12.40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்குப் பெங்களூருசென்றடையும். இவை சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.கோவை–திண்டுக்கல் முன்பதிவில்லா மெமு ரயில்கள் (06169, 06170) நவம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். கோவையிலிருந்து காலை 9.35 மணிக்கும், திண்டுக்கல்லிலிருந்து மதியம் 2 மணிக்கும் புறப்படும். பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி வழியாகச் செல்லும் இந்தச் சேவைகளைப் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.