தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

9 May 2026, 2:01 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

என்சிசி மாணவிகளின் மலையேற்ற பயிற்சி துவக்கம்

உதகை, மே 8- அகில இந்திய தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவிகளின் மலையேற்ற பயிற்சி முகாம் உதகை யில் வியாழனன்று துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவர் படை மாணவியரின் மலையேற்ற பயிற்சி முகாம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொள் வார்கள். ஒழுக்கம், நன்னடத்தை, தைரியம், நாட்டுப் பற்று, கட்டுப்பாடு, மற்ற மாநிலங்களின் கலாச் சாரத்தை கற்றுக் கொள்ளுதல், தேசிய ஒருமைப் பாடு மற்றும் சிறந்த குடிமக்களாக உருவாகுதல் ஆகியவை குறித்து பயிற்சி அளித்தல் முகாமின் நோக்கமாகும். நடப்பு ஆண்டுக்கான என்சிசி மாண விகளின் மலையேற்ற பயிற்சி முகாம் நீலகிரி மாவட் டத்தில் வியாழனன்று தொடங்கியது. இதில், தமிழ் நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கர்நா டகா, கோவா, கேரளம், அந்தமான், லட்சத்தீவு, புதுச் சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த 525 பள்ளி மற்றும் கல்லூரி என்சிசி மாணவிகள் கலந்து கொண்டனர். உதகை அருகே முத்தோரை பாலாடா வில் உள்ள ஏகலைவா மாதிரி பழங்குடியினர் பள்ளி யில் தங்கியிருந்து மலையேற்ற பயிற்சியை தொடங்கினர். இவர்கள், ரேடியோ வானிலை ஆய்வு மையம், பழங்குடியினர் ஆய்வு மையம், ரயில் நிலையம், மெட்ராஸ் ராணுவ மையம், ஸ்ட்ரா பெரி, கேரட் விவசாய முறைகளை பார்வையிடவும் உள்ளனர். தினமும் 12 கி.மீ. தொலைவு நடைப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. முகாமுக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கமாண்டர் கர்னல் சித்து, என்சிசி முதன்மை அலுவலர் சுப்பிரமணி யன் ஆகியோர் செய்து வருகின்றனர். இம்முகாம் வரும் மே 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது குழுவுக்கான பயிற்சி முகாம் மே 16 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வடமாநிலங் களை சேர்ந்த குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

ரயில் சேவையில் மாற்றம்

சேலம், மே 8- ஈரோடு - திருப்பூர் வழித்தடத்தில் உள்ள ஊத்துக் குளி ரயில்வே யார்டு பகுதியில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, வரும் மே 12-ஆம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார். இதன்படி, திருச்சியிலிருந்து மதியம் 1.00 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி சந்திப்பு - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16843), வரும் மே 12-ஆம் தேதி அன்று ஈரோடு அருகே உள்ள ஈங்கூர் ரயில் நிலையத்துடன் தனது பயணத்தை முடித்துக்கொள்ளும். பராமரிப்பு பணிகள் நிறைவ டைந்த பிறகு, இந்த ரயில் ஈங்கூரிலிருந்து பாலக் காடு டவுனுக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயி லாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில், வழக்க மான திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

உதகை, மே 8- பந்தலூர் அருகே யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங் கோடு, வட்டக்கொல்லி எண்ணுமிடத்தில் வெள்ளி யன்று செம்பன் (65) மற்றும் அவரது உறவினர் விஷ்ணு (25) ஆகியோர் கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பின்புறத் தில் இருந்த யானை இவர்களை தாக்க ஓடி வந் துள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத இரு வரும் அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளனர். இருந்தபோதிலும் யானை இவர்களை பின்தொ டர்ந்து தாக்கியதில் செம்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறிய காயங்களுடன் விஷ்ணு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதி பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில், மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு

உதகை, மே 8- முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதி களில் பருவமழைக்கு முந்தைய புலிகள் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு வியாழனன்று துவங்கியது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பருவமழைக்கு முந்தைய புலிகள் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு வியாழனன்று துவங்கி மே 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த கணக்கெடுப்பில் வன விலங்குகளின் வாழ்விடங்களை மதிப்பீடு செய்தல், கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது. தெப்பக்காடு, கார் குடி, முதுமலை நெலாக்கோட்டை ஆகிய வனச் சரகங்க ளில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் முன்களப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ரூ.9 லட்சம் மோசடி: நகை வியாபாரி புகார்

கோவை, மே 8- அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்பதாகக் கூறி, தன்னிடம் 9 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக ஈரோட்டை சேர்ந்த நகை வியாபாரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் விஜய்குமார். இவர் கோவை பெரியகடை வீதியில் உள்ள தங்க நகைப் பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2025 ஆம் ஆண்டு, சூலூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் விஜய்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். தனது சகோதரி காயத்ரிக்கு சொந்தமான 118 கிராம் தங்க நகைகள் ராம் நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடமானத்தில் இருப்பதாக வும், குடும்பத் தொழில் நஷ்டம் காரணமாக அந்த நகைகளை விற்க விரும்புவதாகவும் லோகேஷ் கூறியுள்ளார். ஏற்கனவே லோகேஷ் நகைகளை விற்றுள்ளதால் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில், விஜய்குமார் வங்கியின் கணக்கில் 9 லட்சம் ரூபாயைச் செலுத்தியுள்ளார். ஆனால், விஜய்குமாருக்கு தெரியாமல் வங்கியிலிருந்து வெளி யேறி, அந்த பணத்தை பயன்படுத்தி அதே வங்கியின் வேறொரு கிளையில் நகைகளை மீட்டு சென்றுவிட்டார். நீண்ட நேரமாக காயத்ரி வராததால் சந்தேகமடைந்த விஜய் குமார், லோகேஷை பின்தொடர்ந்து வெளியே வந்துள் ளார். அப்போது லோகேஷ் அவரைத் தாக்கி, செல்போனை பறித்து அதிலிருந்த ஆதாரங்களை அழித்துவிட்டுத் தப்ப முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள் லோகேஷைப் பிடித்து காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் முன்னிலையில் நடந்த விசாரணையில், லோகேஷ் மற்றும் காயத்ரி ஆகியோர் பணத்தைப் பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்டனர். 9 லட்சத்தில் 4 லட்சம் ரூபாயை உடனடியாகத் தருவதாகவும், மீதியை 10 நாட்களில் தருவதாகவும் உறுதியளித்தனர். இதுவரை பல தவணை களாக 7 லட்சம் ரூபாய் மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளது. மீத முள்ள 2 லட்சம் ரூபாயைத் தராமல் லோகேஷ் ஏமாற்றி வருவதாகவும், இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் விஜய்குமார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, மாநகரக் காவல் ஆணையர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மின்மாற்றி கம்பியை இழுத்த யானை உயிரிழப்பு

கோவை, மே 8- கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில், மின்மாற்றி கம்பியை இழுத்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மதுக்கரை சரகத்தில் உள்ள ஒரு தனியார் தோட் டத்தில், ஆழ்துளை கிணற்றுக்காக 22 கே.வி (KV) உயர் அழுத்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வியாழ னன்று இரவு இந்தப் பகுதிக்கு வந்த ஆண் யானை ஒன்று, தரைமட்டத்திலிருந்து சுமார் 10 அடி உயரத்தில் இருந்த உயர் அழுத்த மின் கம்பியைத் தனது துதிக்கையால் பிடித்து இழுத்துள்ளது. அப்போது பலத்த மின்சாரம் தாக்கியதில், அந்த யானை சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர், கோவை வனத்துறை உதவிப் பாதுகாவ லர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு விரைந்து ஆய்வு நடத்தினர். மின்வாரியப் பொறி யாளர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். கோவை வன கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலைப் பரிசோதித்தபோது, துதிக்கையில் மின்சாரம் பாய்ந்த தற்கான காயங்கள் இருந்தன. இதன் மூலம் யானை மின்சாரம் தாக்கியே உயிரிழந்தது உறுதி செய்யப்பட் டது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விதிமுறைப்படி மின்மாற்றிகள் 10 அடி உயரத் தில் அமைக்கப்பட்டிருந்தாலும், யானைகள் தங்களது துதிக்கையை உயர்த்தினால் அந்த உயரத்தை எளி தில் எட்டிவிடும் அபாயம் உள்ளது. பொதுவாக மின் மாற்றியில் இருந்து வரும் சத்தத்தைக் கேட்டு யானை கள் தள்ளிச் செல்லும்; ஆனால், இந்த யானை மிக அருகே சென்று கம்பியை இழுத்தது துரதிர்ஷ்டவச மானது என அதிகாரிகள் தெரிவித்தனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதை சரிசெய்ய ஏற்க னவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப் பினும், யானைகளின் பாதுகாப்பைக்கருதி இது போன்ற மின் கட்டமைப்புகளை சுற்றி கூடுதல் பாது காப்பு வேலி அல்லது தடுப்புகளை அமைக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

கோடை வெயிலை சமாளிக்க சிக்னலில் பசுமை பந்தல்

ஈரோடு, மே 8- கோடை வெயிலை சமாளிக்கும் வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள சிக்ன லில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மதிய நேரங்க ளில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டி கள், சாலையோர வியாபாரிகள், தொழிலாளர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என பல்வேறு தரப்பின ரும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் சாலை யோரமாக விற்பனை செய்யப்படும் தர்ப்பூசணி, நுங்கு, பதநீர், கம்மங்கூழ், கரும்புச்சாறு, வெள்ளரி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வைத்து வரும் நிலையில், ஈரோடு மாநக ரத்தின் முக்கிய பகுதிகளான ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள சிக்னல், பன்னீர்செல்வம் பார்க் சிக்னல், காளைமாடு சிலை அருகில் உள்ளிட்ட சிக்னல் களில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக, ஈரோடு - பெருந்துறை சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள சிக்ன லில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரி கள் உள்பட பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிர மத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் சிக்னலில் இருபுறமும் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று, பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாடு சிலை பகுதியில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒகேனக்கலில் இயக்கப்படும் பரிசல்களின் தரத்தை ஆய்வு செய்யக் கோரிக்கை

தருமபுரி, மே 8- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கப்படும் பரிசல்களின் தரம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோடைகால விடுமுறையை கொண்டாடுவதற் காக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தரும புரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நாள்தோறும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலா னோர் அருவிகளின் அழகை காண பரிசலில் செல் வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசின் அனுமதி பெற்ற 430 பரிசல் ஓட்டிகள் உள்ளனர். தற்போது காவிரி ஆற்றில் மாம ரத்துக்கடவு பரிசல் துறையிலிருந்து தொம்பச்சிக் கல் வழியாக மணல்மேடுவரை பரிசல்கள் இயக்கப்படு கின்றன. இந்நிலையில், காவிரி ஆற்றில் இயக்கப் படும் பரிசல்களில் சிலவற்றில் மேல்புறத்தில் பூசப் பட்டுள்ள தார், வெயிலின் காரணமாக உருகி துளைகள் ஏற்பட்டு தரமற்று காணப்படுவதாகவும், பயணத்தின் போது பரிசலுக்குள் நீர் புகுவதாலும், சுற்றுலாப் பய ணிகளை மகிழச்செய்ய அருவியின் அருகில் செல் லும்போது பரிசலுக்குள் நீர் விழுவதாலும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட் டில், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத் தின் மேற்பார்வையில் உள்ள ஒகேனக்கல் பரிசல் துறையில் இயக்கப்படும் பரிசல்களின் தரம் குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு, சுற்று லாப் பயணிகள் காவிரி ஆற்றில் பாதுகாப்பான பரிசல் பயணம் மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா வாகனங்களை அனுமதிக்க வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம்

உதகை, மே 8- உதகைக்கு செல்ல மசினகுடி வழியாக சுற்றுலா வாக னங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வியாபாரி கள் மற்றும் சவாரி வாகனங்கள் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா மாநிலம், மைசூருவிலிருந்து முதுமலை புலி கள் காப்பகம் வழியாக மசினகுடிக்கும், கூடலூருக்கும் சாலை செல்கிறது. இதில் மசினகுடியில் இருந்து கல்லட்டி மலைப் பாதை வழியாக உதகைக்கு கொண்டை ஊசி வளைவு கொண்ட சாலை செல்கிறது. கடந்த காலங்களில் உதகையிலி ருந்து கல்லட்டி வழியாக மசினகுடிக்கு சுற்றுலாப் பயணிக ளின் வாகனங்கள் இயக்கும்போது விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனால் பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து உத கையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசின குடிக்கு வாகனங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், மசினகுடியில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணி களின் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. வாகன விபத்து கள் அதிகரித்து வருவதாக நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த மே 1 ஆம் தேதி முதல் சுற்றுலா வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் மசின குடியில் இருந்து உதகைக்கு சுற்றுலா வாகனங்கள் இயக்கப் படாததால், பயணிகள் கூடலூர் வழியாக பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மசினகுடி ஊராட்சி மக்கள் கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்று வர கட்டுப் பாடு விதிக்கவில்லை. இந்நிலையில், மசினகுடியில் இருந்து உதகைக்கு செல் லும் மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங் களை அனுமதிக்கக்கோரி மசினகுடி ஊராட்சியில் வெள்ளி யன்று முழு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற் றது. இதனால் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட் டுள்ளன. நகரின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட் டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் மக்கள் கூடும் இடங்களில் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சுற்றுலாப் பயணிக ளின் வாகனங்களுக்கு தடை விதிப்பதால் வணிக ரீதியாக மசினகுடி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணி கள் வருகை குறைந்துள்ளதால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

வெள்ளிங்கிரி மலையேறிய ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோவை, மே 8- கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற ஓட்டுநர், மலைப்பாதையில் மயங்கி விழுந்து உயிரி ழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மதுக்கரை அடுத்த கண்ணமநாயக்கனூர் பகு தியை சேர்ந்தவர் மயில்சாமி (32). டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், வெள்ளியன்று அதிகாலை பூண்டி அடிவாரத்திலிருந்து வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு செல்வதற்காக மலை ஏறத் தொடங்கினார். மயில்சாமி நான்கா வது மலைப்பாதையில் ஏறிக்கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைக் கண்ட சக பக்தர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த வனத்துறை யினர், அங்கிருந்த தொழிலாளர்களின் உதவியுடன் அவரை மலைப்பாதையிலிருந்து மீட்டு அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அடிவாரத்தில் மயில்சாமியைப் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. மயில்சாமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகு றித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.