கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
28 Jun 2026, 2:12 am

வளர்ப்பு யானை தாக்கி பாகன் காயம்

உதகை, ஜூன் 27- கூடலூர், தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் காயமடைந்த நிலையில், தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு முகாமில் 19 வயதான வளர்ப்பு யானை மசினி பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு தாய் யானையால் கைவிடப்பட்ட இந்த யானை முது மலை கார்குடி வனச்சரகத்தில் சாலையோர பாலத்தின் கீழ் நின்றது. ஒரு மாத குட்டியாக அங்கிருந்து மீட்கப்பட்ட யானை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த யானை திருச்சியில் உள்ள சமயபுரம் கோவிலுக்கு அனுப்பப்பட்டது. அங்கு இந்த யானை தாக்கி, அதனை பராமரித்து வந்த பாகன் உயிரிழந்தார். இதனைய டுத்து மசினி யானை மீண்டும் முதுமலைக்கு கொண்டு வரப் பட்டு தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை முதுமலையில் சிறிய குட்டியாக இருந்த காலம் முதல் பொம்மன் (49) என்பவர் பாகனாக இருந்து வந்தார். திருச்சியில் இருந்து மீண்டும் முதுமலைக்கு கொண்டு வரப் பட்ட பின்னரும் பொம்மனே மசினி யானையை பராமரித்து வருகிறார். இந்நிலையில், வெள்ளியன்று காலை அவர் யானையை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்று திரும்பி னார். மீண்டும் மாலையில் மாயாற்றில் குளிக்க வைப்பதற் காக யானையை அவர் அழைத்து வந்தார். ஆற்றில் யானையை இறக்க முயன்றபோது திடீரென பாகன் பொம் மனை யானை தாக்கியது. இதில் பொம்மனின் கையில் முறிவு ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அருகிலிருந்த பாகன் கள் மற்றும் வனத்துறையினர் பொம்மனை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின் மேல் சிகிச்சைக்காக அவரை உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர் சங்கப் பேரவை

கோவை, ஜூன் 27- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை வடக்கு மற்றும் பொள்ளாச்சி வட்டக் கிளை பேரவை கூட்டங்களில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை வடக்கு வட்டக் கிளை பேரவைக் கூட்டம் சனியன்று தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. பொறுப்புத் தலைவர் எம்.நதியா தலைமை யில் நடைபெற்ற இப்பேரவையில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன் துவக்கிவைத்து பேசி னார். இதில், சங்கத்தின் தலைவராக எம்.நதியா, செயலாள ராக ஆர்.ரவி, பொருளாளராக எல்.வளர்மதி உள்ளிட்ட 12 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. முடி வில், இணைச் செயலாளர் பி.கார்த்திகேயன் நன்றி கூறினார். மேலும், இக்கூட்டத்தில் பணிநிறைவு பெற்ற முன்னாள் மாவட்டப் பொருளாளர் பி.நடராஜனுக்கு சால்வை அணி வித்து, நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதேபோல், பொள்ளாச்சி வட்டக் கிளை பேரவைக் கூட்டம் பொள்ளாச்சி வருவாய்த்துறை அலுவலக சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. தலைவர் பத்மநாபன் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன் துவக்கவுரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் சின்னமாரிமுத்து நிறைவுரையாற்றினார். இக் கூட்டத்தின் முடிவில் தலைவராக பத்மநாபன், செயலாளராக கிட்டான், பொருளாளராக மதியரசன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்

கோவை, ஜூன் 27- வால்பாறையில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளியை கரடி தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் பாரி அக்ரோ எஸ்டேட் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கி தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் தில்வார் அலி (38). இவர் அசாம் மாநிலம் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த வர். சனியன்று வழக்கம்போல் அப்பர் பாரளை பீல்டு எண்–1 பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணி யில் ஈடுபட்டிருந்தார். அப்போது மருந்து கலப்பதற்காக தண்ணீர் எடுக்கச் சென்றபோது, புதருக்குள் பதுங்கியிருந்த கரடி திடீரென வெளியே வந்து அவரை தாக்கியது. இந்த தாக்குதலில் தில்வார் அலியின் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் பணியில் இருந்த தொழிலாளர்கள் விரைந்து சென்று கரடியை விரட்டியடித்து, காயமடைந்த அவரை மீட்டனர். பின்னர் உடனடியாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேயிலை தோட்டப் பகுதியில் கரடி தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்ப வம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

யானை நடமாட்டம்: வனத்துறை

அறிவுறுத்தல் உதகை, ஜூன் 27- நீலகிரி மாவட்டம், குன் னூர் மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள் ளதால், சமவெளி பகுதிகளி லிருந்து யானைக்கூட்டங் கள் மலைப்பாதையில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் முகாமிட் டுள்ளன. இந்நிலையில். குன்னூர் – மேட்டுப்பாளை யம் சாலையில், கே.என்.ஆர். மற்றும் இச்சி மரப்ப குதிகளில் யானை நடமாட் டம் அதிகம் இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமு டன் செல்ல வேண்டும் என குன்னூர் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளி நிலத்தில் குப்பை கிடங்கா? நகராட்சி முடிவுக்கு கட்சிகள் எதிர்ப்பு!

அவிநாசி, ஜூன் 27- திருமுருகன்பூண்டி நகராட்சி, ராக்கியாபாளையம் பகுதி யில் உள்ள அரசு நத்தம் நிலத்தைத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்காக வகைமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு நகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. பொதுமக்களி டமோ, மக்கள் பிரதிநிதிகளிடமோ எவ்விதக் கருத்தும் கேட்கா மல் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்பகுதியில் திடக்கழிவு மையம் அமைந்தால் சுற்றுச் சூழல் பாதிப்பதோடு, மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மேலும், இப் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இந்த நிலமே மிக அவசியமானது. எனவே, கல்வி வளர்ச்சிக்காக இந்நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ராக்கியாபாளையம் அனைத்துக் கட்சியினர் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து ஜமாபந்தியில் மனு அளித்ததுடன், நகராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை மனு கொடுத்துள்ள னர். பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த முடிவை நகராட்சி உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கிராவல் மண் கடத்திய லாரிகள் பறிமுதல்

கோவை, ஜூன் 27- கோவை மாவட்டத்தின் பல்வேறு புறநகர் மற்றும் கிராமப் புற பகுதிகளில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய 30-க்கும் மேற்பட்ட கனரக லாரிகளை போலீசார் அதிரடி யாக பறிமுதல் செய்தனர். சூலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து முக்கிய சாலைகள் மற்றும் கிராமப்புற இணைப்புச் சாலைகளில் வெள்ளியன்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது உரிய அரசு அனுமதி மற்றும் கனிமத் துறை ஆவணங்கள் இன்றி டன் கணக்கில் கிராவல் மண் ஏற்றி வந்த 30க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேனர் அனுமதி மற்றும் கட்டணத்தை கைவிடுக மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

அவிநாசி, ஜூன் 27- அவிநாசி நகராட்சியில் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு நக ராட்சியிடம் அனுமதி பெற்று கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அரசியல் கட்சி களோ, பொதுமக்களோ பேனர் வைக்க நேர்ந்தால், அதே நகராட்சியிடம் எப்படி அனுமதி பெற முடியும்? கண்ணீர் அஞ் சலி பேனர்களுக்கு முன்கூட்டியே அனுமதி கோருவது நடை முறைக்கு சாத்தியமற்றது. இந்த உத்தி ஜனநாயக ரீதியி லான கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயலாகும். பிளக்ஸ் பேனர் தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கனவே பல் வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக நடைமுறைப் படுத்துவதில் நகராட்சி நிர்வாகம் இதுவரை என்ன நடவ டிக்கை எடுத்துள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மறுபுறம், அவிநாசி நகராட்சியில் ரூ.20 கோடிக்கும் அதிக மதிப்பில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பல கட்டடங் கள் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதில் அக்கறை காட்டாத நகராட்சி, பேனர் கட்டணம் வசூலிப் பதில் மட்டும் தீவிரம் காட்டுவது ஏற்புடையதல்ல. எனவே, இப்புதிய முறையை கைவிட்டு, பூட்டியிருக்கும் கட்டடங் களை உடனே திறக்க வேண்டும்; தவறினால் சிபிஎம் சார்பில் வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும், என எச் சரித்துள்ளார்.

குறு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியம் வழங்க நில அளவை அலுவலர் ஒன்றிப்பு வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 27- குறு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடி யாக வழங்க வேண்டும் என நில அளவை அலுவலர் ஒன்றிப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் தரும புரி மாவட்ட பொதுக்குழு கூட்டம், அச்சங்க அலுவலகத்தில் சனியன்று மாவட்டத் தலைவர் கி.வெங்கடேசன் தலைமை யில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் அண்ணா குபேரன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி. பிரபு, பொருளாளர் மா.முருகன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநில துணைத்தலைவர் ரா.கல்பனா வாழ்த்திப் பேசினார். இக்கூட்டத்தில், அனைத்து வட்டங்களுக்கும் நில அளவீடு கருவி (டிஜிபிஎஸ்) வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத் தில் பதவி உயர்வு பெற்ற குறு வட்ட அலுவலர்களுக்கு வழங் கப்படாத 6 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். தமிழ் நிலம் இணையதளத்தை நவீனப்படுத்தி, மேம்படுத்த வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, அமைப்பின் மாவட்டத் தலைவராக சி. பிரபு, மாவட்டச் செயலாளராக மா.முருகன், மாவட்டப் பொரு ளாளராக மா.முரளிதரன், துணைத்தலைவராக கு.சின்னராசு, இணைச்செயலாளராக அ.செந்தில் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். மாநிலத் தலைவர் வெ.ராஜா நிறைவுரையாற்றி னார். முடிவில், அரூர் கோட்டப் பொருளாளர் மு.ராஜா அபி ஷேக் நன்றி கூறினார்.

சிறப்பு ரயில்களால் ரூ.243.22 கோடி வருவாய்

சேலம், ஜூன் 27– 2025–26 ஆம் நிதியாண்டில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் சாதனை அளவிலான பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த கால கட்டத்தில் 229 சிறப்பு ரயில் சேவைகள் வாயி லாக மொத்தம் 2,513 முறை முன்பதிவு செய் யப்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள் ளன. இந்த சேவைகளை பயன்படுத்தி 32.98 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.243.22 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களில் ஒரு பயணத் திற்கு சராசரியாக 1,312 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது இந்திய ரயில்வேயின் தேசிய சராசரியான 894 பயணிகளை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும். இதன் மூலம் சிறப்பு ரயில்கள் இயக்கத்தில் சிறந்த செயல்திறன் கொண்ட ரயில்வே மண்டலமாக தேசிய அளவில் தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் மட்டுமின்றி, பயணிகளின் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு இந்த நிதி யாண்டில் 1,762 முன்பதிவில்லாத சிறப்பு ரயில் சேவைகளும் இயக்கப்பட்டன. தென் தமிழகம், கேரளம், பெங்களூரு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் நாட்டின் கிழக்கு, மேற்கு, வடக்கு பகுதிகளை இணைக்கும் அதிக தேவையுள்ள முக்கிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும், வழக்கமான ரயில்களில் டிக் கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டிய லில் இருந்த பயணிகளுக்கு, அதே வழித்தடத் தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தகவல் குறுஞ்செய்தி மூலம் உடனுக்குடன் தெரி விக்கப்பட்டது. இந்த மாற்று ஏற்பாடு பயணி களுக்கு பெரிதும் பயனளித்ததுடன், சிறப்பு ரயில்களின் பயன்பாட்டையும் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அமோனியா கசிவு; பலி 16 ஆக உயர்வு

சென்னை, ஜூன் 27- திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயின்ட் பீட்டர் பால் என்ற பெயரில் மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவு பொருட்களை பதப படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. சென்னை வண்ணா ரப்பேட்டையை சேர்ந்த ஜோசப் ஜெகன் (48), மோகன் (59) ஆகியோர் நடத்தி வரும் இந்த நிறுவனத்தில், கடந்த ஜூன் 21 அன்று அமோ னியா வாயுக் கசிவு ஏற்பட்டு, இதுவரை வட மாநிலங்க ளைச் சேர்ந்த 15 பேர் வரை உயிரிழந்திருந்தனர். இந் நிலையில், சென்னை ஸ்டா ன்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கபிதா ஜுங்கா (18) என்ற இளம் பெண் சனிக்கிழமையன்று பலியானார். இவர் ஒடிசா வை சேர்ந்தவர் ஆவார். இத னால், அமோனியா வாயுக் கசிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந் துள்ளது.