தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

11 Jul 2026, 10:46 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சுற்றுலா வாகனம் விபத்து: 12 பேர் காயம்

உதகை, ஜூலை 11- குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்தனர். கடலூரில் இருந்து 18 பேர் வேனில் உதகைக்கு வியாழ னன்று சுற்றுலா வந்தனர். இங்குள்ள சுற்றுலாத் தலங்களை ரசித்த பின், மீண்டும் கடலூருக்கு வெள்ளியன்று திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை சதீஷ் (30) என்பவர் இயக்கியுள் ளார். குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாக னம் சென்று கொண்டிருந்தபோது, கோழிக்கரை பகுதியில் நிலைத்தடுமாறி சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத் துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 12 பேர் பலத்த காய மடைந்தனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு ஆம்பு லன்ஸ் மூலமாக மேட்டுப்பாளையம் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ் விபத்து குறித்து குன்னூர் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

வங்கித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்

கோவை, ஜூலை 11- கோவை டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பாக, வங்கித் தேர்வுக ளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் (ஜூலை 12) ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9.30 மணிக்கு, கோவை திருச்சி சாலை யில் உள்ள கிரியாஸ் ஷோரூம் அருகில், எல்.ஐ.சி ஊழியர் சங்க கட்டிடமான ‘சரோஜ் நிலையம்’ வளாகத்தில் நடை பெறும். இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது பெயர் மற்றும் ஊர் விவரங்களை 94436 22408, 94430 24973, 94875 91972 ஆகிய எண்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பயிற்சி மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

லஞ்சப் புகாரை திரும்பப் பெற மிரட்டல்?

சேலம், ஜூலை 11- வாழப்பாடி அருகே மக்கள் தொடர்பு முகாமில் அளிக்கப் பட்ட லஞ்சப் புகாரை திரும்பப் பெறக் கோரி, கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மிரட்டியதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. சேலம் மாவட்டம், புழுதிக்குட்டை ஊராட்சியில் நடந்த முகாமில், அறுநூத்துமலை விஏஓ பாலம்மாள் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக பெலாப்பாடி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட விஏஓ இடைத்தரகர் கள் சிலருடன் புகார் அளித்தவரின் வீட்டிற்கு சென்று, மனுவை திரும்பப் பெற வலியுறுத்தியதாகவும், தவறினால் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என மிரட்டியதாகவும் கூறப் படுகிறது. இதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவின. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சி யர் உத்தரவின் பேரில் வாழப்பாடி வட்டாட்சியர் நாகலட்சுமி இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். பணம் கொடுத் ததற்கான போதிய ஆதாரம் இல்லை என கூறப்பட்ட நிலை யில், புகார் மனு திரும்பப் பெறப்பட்டதாக தெரிகிறது. எனினும், இந்த ஆடியோ விவகாரம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:

18.62/72 அடி நீர்வரத்து:1529கனஅடி நீர்திறப்பு:790கனஅடி மழையளவு:17 மி.மீ சோலையார் அணை நீர்மட்டம்:93.52/160 அடி நீர்வரத்து:2221கனஅடி நீர்திறப்பு:1248கனஅடி மழையளவு:46 மி.மீ ஆழியார் அணை நீர்மட்டம்:55.85/120அடி நீர்வரத்து:360கனஅடி நீர்திறப்பு:206கனஅடி மழையளவு:3 மி.மீ திருமூர்த்தி அணை நீர்மட்டம்:28.33/60அடி நீர்வரத்து:540கனஅடி நீர்திறப்பு:954கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:48.99/90அடி நீர்வரத்து:518கனஅடி நீர்திறப்பு:கனஅடி மழையளவு:1 மி.மீ

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.