கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
27 Jun 2026, 12:43 am

மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல் - கைது

நாமக்கல், ஜூன் 26- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில், மதுபோதையில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் நபரை பொதுமக்கள் பிடித்து தாக்கிய பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிபாளையத்தை சேர்ந்த 70 வயதான மூதாட்டி, கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வருகி றார். இவரது மகன், மகள்கள் திருமணமாகி அதே பகுதி யில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அருகில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி பணியாற்றி வந்த மணிகண்டன் (45), வெள்ளியன்று மதியம் மது போதையில் மூதாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளார். அவர் கொண்டு வந்திருந்த மதுவை மூதாட்டிக்கு வலுக்கட்டாயமாக மது குடிக்கச் செய்து, பின்னர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி அங்கிருந்து தப் பித்து சாலைக்கு ஓடி சத்தம் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை தெரிவித்தார். உடனடியாக பொதுமக்கள் மணிகண்டனை பிடித்து மூதாட்டியை மீட்ட னர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவேசமடைந்த பொது மக்கள் மணிகண்டனை தாக்கிய பின்னர், தகவலறிந்து வந்த பள்ளிபாளையம் போலீசார் அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மூதாட்டி 108 ஆம்பு லன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்ப வம் தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்ப திவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிற்பக்கலை என்பது நிஜம் பத்மஸ்ரீ ராஜா ஸ்தபதி பெருமிதம்

சேலம், ஜூன் 26- இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன் றான பத்மஸ்ரீ விருது பெற்ற சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சிற்பக் கலைஞர் ராஜா ஸ்தபதி காளியப்ப கவுண்டருக்கு பொதுமக்கள் உற்சாக வர வேற்பு அளித்தனர். பின்னர் பாலமுருகன் சிற்பக் கலைக் கூடத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து செய்தியாளர் களிடம் பேசினார். அப்போது சாதாரண குடும்பத்தில் பிறந்த தனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சிற்பக்கலை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று, பின்னர் சென்னையில் கூடு தல் பயிற்சி முடித்ததாக கூறினார். 1980-ஆம் ஆண்டு பால முருகன் சிற்பக் கலைக்கூடத்தை தொடங்கி, 46 ஆண்டு களாக சிற்பக்கலையில் பணியாற்றி வருவதாகவும், மாநி லம், தேசியம் மற்றும் உலகளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விருதை தனது தாய் மற்றும் மனை விக்கு சமர்ப்பிப்பதாக உணர்ச்சியுடன் தெரிவித்த அவர், தனது குருமார்கள், குடும்பத்தினர், உடன் பணியாற் றிய ஸ்தபதிகள் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றி தெரி வித்தார். இளைய தலைமுறையினருக்கு பாரம்பரிய சிற்பக் கலையை கைத்திறன் மூலமாகவே கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பா மல் பாரம்பரிய கலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், ”சினிமா என்பது நிழல் கலை; சிற்பக்கலை என்பது நிஜ கலை” என்று குறிப்பிட்ட அவர், கலைத்துறையை வளர்க்க ஒன்றிய, மாநில அரசுகள் மேலும் ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்டங் களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மாதர் சங்க புதிய கிளை

கோவை, ஜூன் 26 அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் கோவை மாநகர கிழக்கு நகரக் குழு விற்குட்பட்ட புலியகுளம் பகுதி, 66 ஆவது வட்டம் பால சுப்பிரமணியம் நகரில் மாதர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. கிளையை சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.உஷா துவக்கி வைத்தார். இதில், கிளை தலைவராக கல்பனா, செயலாளராக வினிதா, பொருளாளராக வடிவுக்க ரசி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில், ததீஒமு மாவட்டச் செயலாளர் த.நாக ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கைது

கோவை, ஜூன் 26- தொண்டாமுத்தூர் அருகே இளம் பெண்ணுக்கு பாலி யல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவரை ஆலந் துறை காவல் துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட 21 வயது இளம் பெண் ஒருவர், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் தொண்டாமுத்தூர் அருகே தனது தோழிகளுடன் வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள் ளார். இவரது பக்கத்து வீட்டில் அருணன் (60) என்பவர் வசித்து வருகிறார். அருணனின் மனைவி உடல்நலக் குறைவால் படுக்கையில் இருந்ததால், அந்த இளம் பெண் மனிதாபிமான அடிப்படையில் அடிக்கடி அங்கு சென்று அவரது உடல்நலனை விசாரிப்பதை வழக்க மாக கொண்டிருந்தார். வழக்கம் போல் வியாழனன்று காலையில் அருணனின் மனைவியை பார்ப்பதற்காக அந்த பெண் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப் போது, அந்த பெண் சமையலறை பகுதியில் இருந்த போது, அருணன் அவரை தனிமையில் பாலியல் ரீதி யாக துன்புறுத்தியுள்ளார். முதியவரின் இந்த செய்கை யால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உதவி கேட்டு அலறி யுள்ளார், பின்னர் அங்கேயே மயங்கி விழுந்தார். பெண் ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவ ருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஆலந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அருணனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.