தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

16 May 2026, 1:05 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மூளைச்சாவு: இளைஞரின் உடலுறுப்புகள் தானம்

கோவை, மே 15- சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட கோவையை சேர்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கோவை மாவட்டம், குரும்பபாளையத்தை சேர்ந் தவர் மகேந்திரன் (28). இவர் தனது இருசக்கர வாக னத்தில் சென்றபோது, விபத்தில் சிக்கி பலத்த காயம டைந்தார். கோவையிலுள்ள தனியார் மருத்துவம னையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், புத னன்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதைய டுத்து, மகேந்திரனின் உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 5 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. இதை யடுத்து, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு, மகேந்திரனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுக்கடைகளை மூடியதில் முறைகேடு?

கோவை, மே 15- தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் உள்ள 717 டாஸ் மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 69 கடைகள் மூடப்பட்ட நிலையில், அதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந் துள்ளன. கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 கடைகளில் (வடக்கு 48, தெற்கு 21), பல கடைகள் தனியார் மனமகிழ் மன்றங்களுக்கு (FL2) சாதகமாக மூடப் பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. விதிகளின்படி 500 மீட்டருக்குள் உள்ள கடைகளை மட்டுமே மூட வேண்டும் என்ற நிலையில், அதிகாரிகள் தன்னிச்சை யாக சில கடைகளை மூட உத்தரவிட்டதாக கூறப் படுகிறது. இது குறித்து டாஸ்மாக் கூட்டுக்குழு அளித்த புகாரைத் தொடர்ந்து, வட்டாட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து அளவீடுகளை சரிபார்த்தார். இதில் விதிகளை மீறாதது கண்டறியப்பட்ட 9 கடை கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு

கோவை, மே.15 - கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழைக் காலத்தை முன்னிட்டு மேற்கொள் ளப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி களை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநக ராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் ஆகி யோர் வெள்ளியன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் சீராக செல்வதை உறுதி செய்ய மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கிழக்கு மண்டலம் திருச்சி சாலை நெசவாளர் காலனி பட்டணம் இட்டேரி பகுதியில் அமைந்துள்ள மழைநீர் வரத்துக் கால்வாயில் சுமார் 2.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியரும், ஆணையரும் அதிகாரிகளிடம் கேட்ட றிந்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய மண்டலம் வார்டு எண் 80-க்கு உட்பட்ட செல்வசிந்தாமணி குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி களையும் அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும், செல்வசிந்தாமணி குளத்திலிருந்து உக்கடம் பெரிய குளம் செல்லும் இராஜவாய்க்கால் பகுதியில் சுமார் 1.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் நேரில் பார்வை யிட்டனர். இந்த ஆய்வின் போது, கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சீர் செய்து, மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்யுமாறும், பணிகளை மிக விரைவாக முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மதுக்கடைகள் மூடல் - போராட்டம்

அவிநாசி, மே 15- அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த இரண்டு மதுபானக் கடைகள் மூடப்பட்டன. திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே கடை எண்: 1510, 1511 ஆகிய மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேருந்துக்கு காத்தி ருக்கும் பயணிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வந்தனர். ஆகவே, இந்த இரு கடைகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில் தமிழக முழுவ தும் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்க ளுக்கு 500 மீட்டருக்குள்ளாக உள்ள மதுபானக் கடை களை மூட தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன் படி, அவிநாசி புதிய பேருந்து நிலையம், தினசரி காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுபானக் கடைகள் வியாழனன்று மூடப் பட்டன. உடுமலை இதேபோன்று, உடுமலைப்பேட்டை தளி சாலை யில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடை யால் மிகுந்த பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள், பெண்கள், வியாபாரிகள் சங்கத்தினர் கடையை திறக்கக்கூடாது எனக்கூறி 200க்கும் மேற்பட் டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையிலான 50 போலீசார் குவிக்கப் பட்டு பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். உரிய அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித் ததை ஒட்டி போராட்டத்தை கைவிட்டனர்.

காட்டுப்பன்றிகளால் வாழை சேதம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

அவிநாசி, மே 15- அவிநாசி அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், பெரியகானூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் மற்றும் சதீஷ்குமார் ஆகி யோர் கூட்டாக சுமார் 2 ஏக்கர் அளவில் வாழைகள் பயிரிட்டுள் ளனர். சாகுபடி செய்து ஆறு மாதமே ஆன நிலையில், இரவு நேரத்தில் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றிகள், சுமார் 80 வாழை மரங்களை வேருடன் பிடுங்கி சேதப்படுத்தி யுள்ளது. தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினர் சேதம டைந்த வாழைகளை பார்வையிட்டனர். இதுகுறித்து தமிழ் நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் விடுத்துள்ள அறிக்கையில், சேவூர் சுற்றுவட்டார கிராமப்பகுதி களில் காட்டுப்பன்றி, மான், மயில் போன்றவை காரண மாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப் பாக, காட்டுப்பன்றியை விரட்ட ஒவ்வொரு விவசாயிகளும் நாய் குரைப்பது போல் ஒலிபெருக்கி வைத்து, அதன் மூலமாக விரட்டுகின்றன. மேலும், வலைகளும் அமைக் கப்பட்டு வருகிறது. வாழைகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் முன்பு இருந்தது. ஆனால், அந்த திட்டமானது ரத்து செய் யப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அர சாங்கம் வனவிலங்குகளில் பயிர்களை பாதுகாக்க உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வன விலங்குகளை பிடித்துச்செல்ல வனத்துறையினர் மூலமாக தற் காலிக முகாம்கள் அமைக்க வேண்டும். மேலும், இயற்கை சீற்றம் போன்றவை காரணமாக பாதிப்பிலிருந்து விவசாயி கள் மீண்டு வர நிவாரணத்தொகை வழங்க வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் குளக்கரை பகுதிகளிலுள்ள புதர் களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் மோதி 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு

உதகை, மே 15- கூடலூர் அருகே தேவாலா - பந்தலூர் சாலையில் அடை யாளம் தெரியாத வாகனம் மோதி, இரண்டு சிறுத்தை குட்டி கள் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம், தேவாலா - பந்தலூர் நெடுஞ்சாலையில் ரிச்மவுண்ட் என்ற பகுதியில் வெள்ளியன்று காலை இரண்டு சிறுத்தை குட்டிகள், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த நிலையில் கண்டறிப்பட்டது. இதையடுத்து தேசிய புலிகள் காப்பக ஆணைய நெறிமுறைகளின்படி, மாவட்ட வன அலுவலர் தலைமையில் இறந்த சிறுத்தை குட்டிகள் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து பந்தலூர் வனச்சரக வனஉயிரின குற்ற எண்:04/2026 பதிவு செய்யப்பட்டு விசா ரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:59.71/105அடி நீர்வரத்து:258கனஅடி நீர்திறப்பு:550கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:13.01/160அடி நீர்வரத்து:30.23கனஅடி நீர்திறப்பு:5கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:30.90/72அடி நீர்வரத்து:65கனஅடி நீர்திறப்பு:1210கனஅடி ஆழியார் அணை: நீர்மட்டம்:62/120அடி நீர்வரத்து:199கனஅடி நீர்திறப்பு:81கனஅடி

மதுபானக் கடையை மூடக்கோரி மறியல்

ஈரோடு, மே 15- அம்மாபேட்டை அருகே மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை - அந்தியூர் சாலை யில், முளியனூர் பிரிவு பகுதியில் தமிழக அரசின் மது பானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, மது அருந்த வரு வோரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால், இந்த மதுக்கடையை மூட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மக்கள் நடமாட்டம் அதிம் உள்ள பகுதியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தி ருந்த நிலையில், இந்த மதுக்கடையையும் மூட வேண்டும் என வலியுறுத்தி முளியனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் முனியனூர் பிரிவில் வியா ழனன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தக வலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்மா பேட்டை காவல் துறையினர், வருவாய்த்துறையினர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொது மக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரி வித்து, மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.

நீரில் மூழ்கி புலிக்குட்டி உயிரிழப்பு?

உதகை, மே 15- நீலகிரி மாவட்டம், உதகை அருகே மசனகுடி வனக் கோட்டம், மாயார் அணை சேனல் கால்வாய் பகுதியில் சுமார் ஒரு வயதுடைய பெண் புலிக்குட்டி ஒன்று இறந்துள்ளதை வனப்பணியாளர்கள் கண்டறிந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அதை மீட்டெடுத்து, இதுகுறித்து தெப்பக் காடு வன கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. தொடர்ந்து, வெள்ளியன்று முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெற் றது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, புலிக் குட்டி எதனால் உயிரிழந்தது குறித்து தெரியவரும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.

நிஃப்ட் டீ கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பூர், மே 15 - திருப்பூர் முதலிபாளையத்தில் அமைந்துள்ள நிஃப்ட் டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சி யர் மனிஷ் நாரணவரே நேரில் சென்று பார்வையிட்டார். கல்லூரியின் தலைமை ஆலோசகர் ராஜா எம்.சண்முகம், தலைவர் ஆர்.கோவிந்தராஜு, பொருளாளர் ஆர்.மோகன் குமார், முதல்வர் வி.ஆர். சம்பத், கல்வித்துறை தலைவர் மற்றும் முதல்வர் ஆர்.ராதாமணி ஆகியோர் வரவேற்றனர். இந்த வருகையின்போது கல்லூரியின் கல்வி கட்டமைப்பு கள், நவீன ஆய்வகங்கள், பின்னலாடை மற்றும் ஃபேஷன் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள், திறன் மேம்பாட்டு மையங் கள் மற்றும் மாணவர்களின் படைப்பாற்றல் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டார். மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த நடைமுறை கல்வி, திறன் அடிப்படை யிலான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு நோக்கமுடைய கற்றல் முறைகள் வழங்கப்படுவது குறித்து கல்லூரி நிர்வா கத்தினர் விளக்கமளித்தனர். தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பயிற்சித்திட்டங்கள், தொழில் முனைவு வளர்ச்சி முயற்சிகள் மற்றும் சமூக பொறுப்பு சார்ந்த செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தனர். அதைத்தொடர்ந்து, மாணவர்கள் உருவாக்கியிருந்த ஆடை வடிவமைப்புகள், கிராபிக்ஸ் மற்றும் படைப்பாற்றல் கண்காட்சிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண ரும் வகையில் கல்வி மற்றும் தொழில்துறையை ஒருங்கி ணைத்து செயல்படும் நிஃப்ட் டீ கல்லூரியின் முயற்சிகள் சிறப்பானவை என அவர் குறிப்பிட்டார். மேலும், இளைஞர் களுக்கு திறன் சார்ந்த கல்வி மற்றும் தொழில் முனைவு பயிற்சிகள் மிகவும் அவசியமானவை என்றும், தொழில் வளர்ச்சிக்கு தேவையான மனிதவளத்தை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

லாரி தொழில் முடங்கும் அபாயம்: மாதேஸ்வரன் எம்.பி எச்சரிக்கை!

நாமக்கல், மே 15- பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒன்றிய அரசு திடீரென உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.84, டீசல் லிட்டருக்கு ரூ. 2.87 என விலையை உயர்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் இந்திய அளவில் கனரக போக்குவரத்து நிறைந்த ஒரு முக்கியமான மாவட்டமாகும். இந்தப் பகுதியின் பிரதான வாழ்வாதாரமே லாரித் தொழிலை சார்ந்துதான் உள்ளது. ஏற்கனவே பல்வேறு பொருளாதார இடர்பாடுகளால் முடங்கியுள்ள லாரித் தொழில், இந்தத் திடீர் விலை உயர்வால் கடும் சரிவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வின் காரணமாக லாரிகளுக்கான வாடகை உயரும் சூழல் உருவாகியுள்ளது. இதன் நேரடி விளைவாக, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து, பொதுமக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு எவ்வித தாமதமுமின்றி திரும்பப்பெற வேண்டும். தொழில்துறையினரையும், சாமானிய மக்களையும் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

போத்தனூர் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

சேலம், மே 15– கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், அவர்களின் பயணத் தேவை களை பூர்த்தி செய்யவும் போத்தனூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தச் சிறப்பு ரயில்கள் (வண்டி எண்: 06028/06027) வாரந்தோறும் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை களில் இயக்கப்பட உள்ளன. அதன்படி, மே 20-ஆம் தேதி முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை மொத்தம் 9 சேவைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வண்டி எண் 06028 போத்தனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், போத்தனூர் சந்திப்பிலிருந்து காலை 07.40 மணிக்கு புறப் பட்டு அதே நாள் மாலை 16.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், வண்டி எண் 06027 சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில், சென்னையிலிருந்து மாலை 17.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு போத்தனூரை வந்தடையும். இந்த ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம் பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஏசி சேர் கார், இரண்டாம் வகுப்பு சேர் கார் மற்றும் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டி ருக்கும். கூடுதல் பயண வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு ரயில் சேவையைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கோவை - சென்னை சதாப்தி ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம், மே.15 - கோவை மற்றும் சென்னை இடையே பயணிக்கும் பயணி களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அவர்களின் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்கா லிகமாக ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வண்டி எண் 12243 சென்னை சென்ட்ரல் - கோவை சந்திப்பு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஏசி சேர் கார் (AC Chair Car) பெட்டி கூடுதலாக இணைக் கப்பட்டுள்ளது. இதேபோல், மறுமார்க்கத்தில் இயங்கும் வண்டி எண் 12244 கோவை சந்திப்பு - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் ஒரு கூடுதல் ஏசி சேர் கார் பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் பெட்டி வசதியானது வரும் ஜூலை 06, 2026 (06.07.2026) வரை பயன்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை மற்றும் தொடர் பயணக் கூட்ட நெரிசலைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளு மாறு சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.