கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
15 Jul 2026, 10:44 pm

நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார் நிறுவனங்கள்!

கோவை, ஜூலை 15- சீரபாளையம் புதூர் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் வறண்டு, கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசம யம், நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தனியார் நிறு வனங்கள் மீது பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கோவை மாவட்டம், சீரபாளையம் புதூர் பகுதி யிலுள்ள பெரும்பாலான ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வராதது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், செவ்வாயன்று ஊராட்சி மூலம் ஆழ்துளை கிணறு பழுது நீக்கும் பணியா ளர்கள் நேரில் வந்து பரிசோதனை மேற்கொண்ட னர். இந்த ஆய்வின்போது எடுக்கப்பட்ட புகைப் படங்கள் மற்றும் காணொளிகள் அனைத்தும் ஊராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வில், அம்மா பார்க், சரஸ்வதி எலக்ட்ரிக் கல்ஸ் எதிர்ப்புறம், எஸ்.எஸ். சிக்கன் கடை அரு கில், பழைய மிட்டாய் கம்பெனி அருகில் மற்றும் காமதேனு நகர் விடுதி அருகில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் முற்றிலும் தண்ணீர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனிவாசன் நகர் மற்றும் சிவசக்தி நகரில் உள்ள கிணறுகள் கடந்த ஜனவரி மாதமே வறண்டுவிட்டதால், அதற்கு மாற்றாக பாலாஜி நகரில் புதிய ஆழ்துளை கிணறு அமைக் கப்பட்டு அப்பகுதிக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வரு கிறது. இதுதவிர, ஏபிஎம் நகர் நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் வழங்கும் 5 கிணறுகளிலும் தண்ணீர் இல்லா ததும், வாமனா கார்டன் பகுதி கிணற்றில் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பதால், பொதுமக் கள் தண்ணீரை முடிந்தவரை சிக்கனமாக பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளனர். ஒருபுறம் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மறுபுறம் தனியார் தண்ணீர் விற்பனையாளர்கள், வணிக வளாகங்கள் மற்றும் கல்யாண மண்டபங்கள் நிலத்தடி நீரை அதிக அள வில் உறிஞ்சி எடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனியார் தண்ணீர் விற்ப னையாளர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமே ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ள மக்கள், இதனால் தங்கள் பகுதியில் பெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கடும் அதிருப்தி தெரிவித்துள் ளனர்.

வாரப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

கோவை, ஜூலை 15- கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாரப் பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, வாரப் பட்டி கிராமத்தில் உள்ள சுல்தான்பேட்டை ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க. கிரியப்பனவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் புதனன்று நடைபெற்றது. அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி இந்த முகாம் நடந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் சார்பில் விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டிருந் தன. நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், வாரப் பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைகள், அங்கன் வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் உணவுத் திட்டங்களை கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்த தாக கூறினார். குறிப்பாக, 5 வயது முடிந்த குழந்தை களை அங்கன்வாடியிலிருந்து அரசு ஆரம்பப் பள்ளி களில் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவ தாக தெரிவித்தார். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி படிப் பதை உறுதி செய்வதே மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாகும். கோவை மாவட்டத்தில் உள்ள 180-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சேர மாண வர்களுக்கு உதவ, மாவட்ட அளவில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாண வர்கள் தங்களுக்குத் தேவையான கல்வி வழிகாட்டு தல்களை இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார். முகாமிற்கு வந்துள்ள அனை வரின் கோரிக்கை மனுக்களையும் நேரில் பெற்ற பின்னரே தாமும், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பிற அதிகாரிகளும் இங்கிருந்து புறப்படுவோம் என்று ஆட்சியர் உறுதியளித்தார். எனவே, மக்கள் அனைவரும் எவ்வித சிரமமுமின்றி பொறுமையாக வரிசையில் வந்து தங்கள் மனுக்களைக் கொடுக்கு மாறு அவர் கேட்டுக்கொண்டார்.

லாரிகளில் டீசல் திருட்டு: 2 பேர் கைது

தருமபுரி, ஜூலை 15- லாரிகளில் டீசல் திருட்டில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஓட்டுநர்கள் ஓய்வுக்காக நிறுத்தப்படும் லாரிகளில் டீசல் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத்தடுக்க காவல் துறை உள்ளிட்ட அரசு துறையினர் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை துணை காவல் கண்காணிப் பாளர் ரமேஷ்குமார் தலைமையில், காவல் ஆய்வா ளர் சிவனேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு வினர் தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி பகுதி யில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் செவ்வாயன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், லாரிகளி லிருந்து டீசல் திருடிய காரிமங்கலம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன், பழைய தருமபுரி பகுதியை சேர்ந்த சங்கர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் பதுக்கி வைத்தி ருந்த 210 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 15- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதவி உயர்வு வழங்குவதில் ஏற்பட் டுள்ள கால தாமதத்தின் காரணமாக, பணியாளர்களின் அடுத்தடுத்த நிலையி லான பதவி உயர்வு பெறுவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாக உள்ள கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் உதவி இயக் குநர் நிலையில் பதவி உயர்வினை உட னடியாக வழங்க வேண்டும் என வலியு றுத்தி புதனன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வட்டச் செயலாளர் தங்கதுரை தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ச.இளங்குமரன், மாவட்டத் தலைவர் முகமது இலியாஸ், பொருளா ளர் வினோத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, நல்லம் பள்ளியில் வட்டத் தலைவர் தர்மராஜன், அரூரில் வட்டத் தலைவர் வீரமணி, மொரப்பூரில் வட்டத் தலைவர் சிலம் பரசன், பாப்பிரெட்டிப்பட்டியில் வட்டத் தலைவர் ராமஜெயம், காரிமங்கலத் தில் வட்டத் தலைவர் மாதையன், பாலக் கோட்டில் வட்டத் தலைவர் மேகநா தன், பென்னாகரத்தில் வட்டத் தலை வர் குமார், ஏரியூரில் வட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், கடத்தூரில் வட்டத் தலைவர் தீபா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் திரளானோர் பங்கேற்றனர். சேலம் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், ஏற் காடு, மேச்சேரி, வாழப்பாடி, ஓமலூர், காடையாம்பட்டி, கெங்கவல்லி உள் ளிட்ட 20 ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ந.திருவேரங்கன், மாவட்டச் செயலாளர் ஜான் ஆன்ஸ்டீன், பொறுப்பு தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குட்கா விற்பனை: 279 கடைகளுக்கு ‘சீல்’

ஈரோடு, ஜூலை 15- புகையிலைப் பொருட் கள் விற்பனை தொடர்பாக 279 கடைகளுக்கு ‘சீல்’ வைக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்றவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய் வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் வரை குட்கா பொருட்களை விற் பனை செய்ததாக 279 கடை களுக்கு ‘சீல்’ வைக்கப் பட்டு, ரூ.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 551.83 கிலோ புகையிலைப் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:59.57/105அடி நீர்வரத்து:993 கனஅடி நீர்திறப்பு:955 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:19.68/72 அடி நீர்வரத்து:1042கனஅடி நீர்திறப்பு:260கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:90.55/160 அடி நீர்வரத்து:630.66கனஅடி நீர்திறப்பு:1194கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:56.50/120அடி நீர்வரத்து:358கனஅடி நீர்திறப்பு:256கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:27.92/60அடி நீர்வரத்து:545கனஅடி நீர்திறப்பு:490கனஅடி

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது

ஈரோடு, ஜூலை 15- பவானியில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான இருவர் குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த 74 வயது மூதாட்டி யின் வீட்டில் புகுந்து, பொருட்களை திருட முயன்ற இரண்டு இளைஞர்கள், அந்த மூதாட்டியை தாக்கி பாலியல் வன் கொடுமை செய்தனர். இச்செயலில் ஈடுபட்ட பவானி, மண் தொழிலாளர் 2 ஆவது வீதியை சேர்ந்த ஹரிகுமார் (22), கிரி (எ) கண்ணன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இத னிடையே, பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஜூன் 30 ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில் மூதாட்டி திங்களன்று உயிரிழந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் ஏற்கெனவே கைதாகி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறை யில் அடைக்கப்பட்டிருந்த ஹரிகுமார், கிரி (எ) கண்ணன் ஆகியோரை குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

காலாவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல்

சேலம், ஜூலை 15- அரசு மருத்துவமனையில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, காலாவதியான உணவுப்பொருட்கள் மற்றும் தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் இருந்த உணவுகள் அழிக்கப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல் பட்டு வரும் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தரம் இல் லாத உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்து உள்ளது. இதனையடுத்து சேலம் மாவட்ட உணவு பாது காப்பு துறை அதிகாரி கவிக்குமார் தலைமையிலான அதி காரிகள், புதனன்று அரசு மருத்துவமனையில் மருத்து வர்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் ஆய்வு மேற் கொண்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தி னர். தொடர்ந்து, உணவகங்கள், டீக்கடைகள் ஆகியவற் றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அவற்றை குப்பையில் கொட்டி அழித்தனர். தொடர்ந்து சுகாதார மான முறையில் உணவு தயாரிக்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரித்த னர். அதேபோல தரம் இல்லாத உணவு காலாவதியான உணவு விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யவும் பரிந்துரைக்கப்படும் என எச்சரித்தனர்.