தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

13 Jul 2026, 10:31 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அலைக்கழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி - தர்ணா

கோவை, ஜூலை 13- ரயில்வே பாஸ் புதுப்பிக்க கையெழுத்து போடாமல் கடந்த இரண்டு மாதங்களாக கோவை அரசு மருத்துவ மனை நிர்வாகம் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டி, மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லக நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (52). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே மாற்றுத்திறனாளி பாஸ் மூலம் பயணித்து வருகிறார். காலா வதியான அவரது பாஸை புதுப்பிக்க, கோவை அரசு மருத்துவமனை மருத்துவரின் ஒப்புதல் கையெழுத்தைக் கேட்டு ரயில்வே துறை விண்ணப்பம் அளித்துள்ளது. இதற் காகக் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனைக்கு அலைந்தும் அதிகாரிகள் கையெழுத்திடாமல் அலட்சி யப்படுத்தியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த தனலட்சுமி, ஆட்சியர் அலு வலக வாயிலில் அமர்ந்து கண்ணீர் மல்க தர்ணாவில் ஈடுபட்டார். “அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள்; முதல்வர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முழக்க மிட்டார். பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் மருத்துவர்கள் நாளை வரு மாறு கூறியதாகத் தனலட்சுமி வேதனையுடன் தெரிவித் தார்.

வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஜுலை 13- ஈரோடு மாவட்டத்தில் ஜுலை மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தள கூட்ட அரங்கில் வரும் (17.7.2026) வெள்ளி யன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக் கள் பெறப்படும். 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதி கள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம். பிற்பகல் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்பட வுள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச.கந்சதாமி அழைப்பு விடுத்துள்ளார்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:59.55/105 அடி நீர்வரத்து:418 கனஅடி நீர்திறப்பு:755 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:19.10/72 அடி நீர்வரத்து:1190கனஅடி நீர்திறப்பு:800கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:93.24/160 அடி நீர்வரத்து:1070கனஅடி நீர்திறப்பு:1354கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:56.00/120அடி நீர்வரத்து:189கனஅடி நீர்திறப்பு:206கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:27.28/60அடி நீர்வரத்து:616கனஅடி நீர்திறப்பு:621கனஅடி

ஓய்வூதியர் சங்க பேரவை

தருமபுரி, ஜூலை 13- தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூ தியர் சங்கத்தின் தருமபுரி வட்ட பேரவை கூட்டம் தரும புரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பி. தங்கம்மாள் தலைமையில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில், மாவட்டத் தலைவர் பி. மல்லிகா, செயலாளர் சி.காவேரி உள்ளிட்டோர் உரை யாற்றினர். அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம். பெருமாள் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதில், வட்ட தலைவராக வி. மலர் கொடி செயலாளராக கே. ராஜேஸ்வரி பொருளாளராக பி. தங்கம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.