தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

17 Jun 2026, 10:15 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

புதிய எஸ்.பி.,க்கள் பொறுப்பேற்பு

நாமக்கல், ஜூன் 17- நாமக்கல் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பா ளராக யாதவ் கிரிஷ் அசோக் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக காவல் துறையில் பல்வேறு மாவட்டங் களின் புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்ஒருபகுதி யாக, நாமக்கல் மாவட்ட புதிய காவல் கண்கா ணிப்பாளராக யாதவ் கிரிஷ் அசோக் (30) செவ்வா யன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தருமபுரி இதேபோன்று தருமபுரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளராக அருண்கபிலன், புதனன்று பொறுப் பேற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் குறைதீர் முகாம் (மனு மேளா) நடை பெற்றது. இம்முகாமில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு: அமராவதி ஆற்றுநீர் வழங்க கோரிக்கை

திருப்பூர், ஜூன் 17- தாராபுரம் நகரத்தில் நிலவக்கூடிய கடுமையான குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கு அமராவதி அணை யில் இருந்து ஆற்று நீர் திறந்து விட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாரா புரம் ஜமாபந்தியில் மனு அளித்தனர். மேலும், தாராபுரத்தில் செவ்வாயன்று நடை பெற்ற ஜமாபந்தியில், புதிதாக ரூ.24 கோடியில் தாரா புரம் 6 மாடி அரசு தலைமை மருத்துவமனை, மேம்ப டுத்தப்பட்ட மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு திறந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை செயல்படுத்தவில்லை. புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. ரத்த சுத்திகரிப்பு (டயா லிசிஸ்), சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற வசதிகள் இல்லை. எனவே அரசு மருத்துவம னையை முழுமையாக மேம்படுத்தப்பட்ட மருத்துவ மனையாக செயல்படுத்த வேண்டும். மேலும், தாரா புரம் நகரத்தில் உள்ள குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும், குப்பை தேங்காத நகராட்சி யாக இருக்க வேண்டும் என்றும் மனு அளிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட உறுப்பினர் என். கனகராஜ் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

தேயிலை தோட்டத்தில் யானைகள் நடமாட்டம்

உதகை, ஜூன் 17- ஆடர்லி தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் யானைகள் நடமாடுவதால், பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், சமவெளிப் பகுதிகளில் இருந்து யானை கூட்டங்கள் மலைப்பாதையில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் முகாமிட் டுள்ளன. இந்த யானைகள் தேயிலை தோட்டத்தில் ஊடு பயிராக இருக்கக்கூடிய பலா மரங்களிலிருந்து பழங்களை சாப்பிடுவதும், சாலைகளில் உலா வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆடர்லி, சேம்பக்கரை, முத்திரி எஸ்டேட் போன்ற பகுதியில் குட்டியுடன் யானை கள் முகாமிட்டுள்ளதால், தேயிலை தோட்டத் தொழி லாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி யுள்ளனர். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

கைவிடப்பட்ட கல்குவாரி குப்பை கிடங்கில் தீ வைப்பு

திருப்பூர், ஜூன் 17- திருப்பூர் நல்லூர் அடுத்த முதலிபாளையம் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரி குப்பை கிடங்கில் சமூக விரோதிகள் தீ வைத்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலிபாளையம் - நல்லூர் பகுதியில் உள்ள கைவிடப் பட்ட கல் குவாரிகளில் நீண்ட நாட்களாக பழைய குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் ஏற்கனவே பல்வேறு சுகாதார பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது புதிய சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உரு வெடுத்துள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கி ருந்த பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த ரோகிணி என்பவர், நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதனிடையே, புதனன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குப்பை கிடங்கின் ஒரு பகுதிக்கு திடீரென தீ வைத்துள்ளார். காய்ந்த குப்பைகள் என்பதால் தீ மளமள வெனப் பரவி, அப்பகுதி முழுவதும் அடர்ந்த நச்சுப் புகை சூழ்ந்தது. தொடர் அச்சுறுத்தல்களை சந்தித்து வரும் முதலிபாளை யம் பகுதி மக்கள், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், குப்பைக் கிடங்கிற்கு தீ வைத்த சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூரில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு தின ஊதியம் ரூ.838 வழங்க சிஐடியு கோரிக்கை

திருப்பூர், ஜூன் 17 - திருப்பூர் மாநகராட்சியில் வேலை செய்யும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அறிவித் துள்ள தினசரி ஊதியம் ரூ.838 வீதம் கணக்கிட்டு மாதம் தோறும் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க செயலாளர் கே.ரங்கராஜ், தலைவர் பி. பழனிச்சாமி ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி ஆணையா ளர் மு.பெ. அமித்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர். அப்போது கொசுப்புழு ஒழிப்பு (டிபிசி) பணியாளர்க ளுக்கு தின ஊதியம் ரூ.838 வீதம் மாதந்தோறும் 5ஆம் தேதிக் குள் வழங்க வேண்டும். அயல் பணி (அவுட்சோர்சிங்) தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.761/-, ஓட்டுனருக்கு ரூ.799/- தினசரி ஊதியம் வழங்க வேண்டும். முதல் மண்டலத்தில் பணி யாற்றும் தூய்மைப்பணியாளர்கள் 59/ பேருக்கும், மூன்றா வது மண்டலத்தில் 70 பேருக்கும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு தினசரி மதியம் வழங்கும் உணவினை காலை வழங்க வேண்டும் என்று கோரி யுள்ளனர்.

முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

நாமக்கல், ஜூன் 17- இந்தியாவின் முக்கிய முட்டை உற்பத்தி மையமாக விளங்கும் நாமக்கல்லில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 7 கோடிக் கும் அதிகமான கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டை கள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற் கும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. கடந்த ஜூன் 1 ஆம் தேதி ஒரு முட்டை யின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.70 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பின் னர் சந்தை தேவைக்கு ஏற்ப தினசரி 5 முதல் 10 காசுகள் வரை விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில், தேசிய முட்டை ஒருங் கிணைப்புக்குழு (NECC) நாமக்கல் மண்ட லத் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில், ஒரு முட்டையின் கொள் முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப் பட்டு ரூ.6.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2025 டிசம்பர் 23 ஆம் தேதி ரூ.6.40 என்ற விலையே அதிக பட்சமாக இருந்தது. தற்போது அதையும் தாண்டி ரூ.6.45 ஆக உயர்ந்திருப்பது முட்டை வரலாற்றிலேயே புதிய உச்சமாக கருதப் படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 55 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முட்டை விலை உயர்வை கோழிப் பண்ணை உரிமையாளர்கள் வரவேற்றுள்ள அதேநேரத்தில் நுகர்வோர்கள் அதிர்ப் தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:55.29 அடி நீர்வரத்து:142 கனஅடி நீர்திறப்பு:550 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:18.75/72 அடி நீர்வரத்து:30கனஅடி நீர்திறப்பு:730கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:61.92/160 அடி நீர்வரத்து:206.73கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:63.40/120அடி. நீர்வரத்து:247கனஅடி நீர்திறப்பு:286கனஅடி

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்க பரிந்துரை

ஈரோடு, ஜூன் 17- காலிங்கராயன் வாய்க்காலில் ஜூன் 28 ஆம் தேதி தண்ணீர் திறக்க நீர்வளத்துறையி னர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் நேரடியாக 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. வாய்க்கால் பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, ஏப்ரல் 30 ஆம் தேதி நிறுத்தப்படும். வாய்க் காலில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடை பெற்று வருவதால், நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாய்க்கால் பராமரிப்புப் பணி குறித்து ஆய்வு செய்யப் பட்ட நிலையில், ஜூன் 28 ஆம் தேதி பாசனத் துக்காக நீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய் யப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.