தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

24 Sept 2026, 10:17 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பேருந்து நிலைய வளாகத்தில் தூர்வாரும் பணி

நாமக்கல், செப்.24-ராசிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் பேருந்துபயணிகள், பொதுமக்கள், வாரச்சந்தை வியாபாரிகள், மாணவர்கள்பலரும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும் என மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்திவெளியானது. இதனையடுத்து நாமக்கல் ஆட்சியர் லி. மதுபாலன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் மற்றும்மழைநீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாய்களை தூர்வாரவேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து நகராட்சி சுகாதாரத்துறையினர் தூய்மைப் பணியாளர்களை பயன்படுத்தியும், ஜேசிபி எந்திரம்கொண்டும் பேருந்து நிலையத்தில் கடைகளின் ஓரம்உள்ள கால்வாய்களில் தேங்கியிருந்த சகதிகளை அப்புறப்படுத்தும்பணியில் புதனன்று ஈடுபட்டனர். மேலும், கால்வாய்களில் மழைநீர் தேங்காத வகையில் ஏற்பட்டிருந்த அடைப்புகளையும் சீர்செய்தனர்.

முதியோர் உதவித்தொகை பெற முகாம்!

நாமக்கல், செப்.24-வங்கிக் கணக்கில் இணைக்கப்படாததால் உதவித்தொகை பெற முடியாமல் தவித்த முதியவர்களுக்காக, குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் சிறப்பு அஞ்சலக சேமிப்புக் கணக்குதொடங்கும் முகாம் நடைபெற்றது.குமாரபாளையம் சமூக நலத்துறை வட்டாட்சியர் சிவக்குமார் மேற்பார்வையில், அஞ்சலக ஊழியர்கள் மூலம் புதனன்று இ - முகாம் நடத்தப்பட்டது. இதில், குடும்ப அட்டை நகல் பெறப்பட்டு, கைரேகை மற்றும் கண்ரேகை பதிவு மூலம் உடனடிசேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன. சுமார் 8 அஞ்சலக ஊழியர்கள் மூலம் 3 நாட்கள் நடைபெறும் இம்முகாமில், தினமும் 200 பேருக்குக் கணக்கு தொடங்கப்படுகிறது. விடுபட்டவர்கள் தலைமை அஞ்சலகத்தை அணுகலாம் என்றும், இம்மாத இறுதிக்குள் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

தவெக அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மின்வெட்டு

தாராபுரம், செப்.24-தமிழக அரசியல் களம் இடைத்தேர்தல் சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில், தாராபுரம் சென்னியப்பா நகர் பகுதியில் வியாழனன்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் ஆலோசனை கூட்டம், மின்வெட்டு சம்பவத்தால் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

இடைத்தேர்தலில் தாராபுரத்தை கைப்பற்றும் முனைப்பில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ், ஜெய் பாலாஜி, பர்வேஸ், ராஜேஷ்குமார் மற்றும் சமீபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,எம்.எஸ்.எம்.ஆனந்தன் என பெரும் பட்டாளமே அங்கு முகாமிட்டுள்ளது. இக்கூட்டத்தில் செங்கோட்டையன், தமிழ்நாடு பொன் விளையும் பூமியாக.. என மாநிலத்தின் பெருமையை பேசி உரையை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மின்வெட்டு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் பரவலாக மின்வெட்டு புகார்கள் எழுந்துள்ள சூழலில், ’மின்வெட்டே இல்லை’ என மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தொடர்ந்து மறுத்து வருவதும், இதனிடையே முதலமைச்சர் விஜய் நேரடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று ஆய்வு நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.இத்தகைய பரபரப்பான சூழலில்,ஐந்து அமைச்சர்கள் மற்றும் முக்கியதலைவர்கள் பங்கேற்ற ஆளுங்கட்சியின் ஆலோசனை கூட்டத்திலேயே மின்சாரம் தடைப்பட்டது, கட்சியின் நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய அதிகாரிகளை தொடர்புகொள்ள நிர்வாகிகள் அடுத்தடுத்து முயன்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. கரண்ட் கட்டே இல்லேங்கிறாங்க…ஆனா அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்திலேயே கரண்ட்இல்லாம போச்சு என அப்பகுதியினர் பேசியது சிரிப்பலையை உருவாக்கியது. நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்த அமைக்கப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டம், இறுதியில் மின்வாரியத்தின் குளறுபடியால் அரசியல் விமர்சகர்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் விமர்சனப் பொருளாக மாறிப்போனது.

கூட்டுறவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்

உதகை, செப்.24-தர குறைவாக பேசிய விவசாய சங்க நிர்வாகியை கண்டித்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் 2 ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டத்தில் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி என்பவர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கபணியாளர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் விதமாகவும், தரக்குறைவாகவும் பேசியுள்ளார். கூட்டுறவு சங்க பணியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அவர் மீது அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில்தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் வியாழனன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ரேசன் கடை பணியாளர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், தொடக்க வேளாண்மைகூட்டுறவு கடன் சங்கங்கள், ரேசன் கடைகள் செயல்படவில்லை. இதனால் கூட்டுறவு பயிர்கடன் வழங்குதல், நகை கடன்வழங்குதல் மற்றும் ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.

சிறுத்தை நடமாட்டம்

உதகை, செப்.24-நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம்அதிகரித்துகாணப்படுகிறது. இந்நிலையில், குன்னூர்வெலிங்டன் ராணுவ வீரர்களின் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையில் சிறுத்தை நடந்து செல்லும் காணொளி காட்சி வைரலானது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க அறிவுறுத்தல்

திருப்பூர், செப்.24 -முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியத் திட்டங்களில் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளுக்கு செப்டம்பர்-2026 மாதம் முதல் ஆதார் அடிப்படையில் பணப்பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மணிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். எனவே, வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இதுவரை இணைக்காத பயனாளிகள் தங்களது வங்கியை அணுகி ஆதார் இணைப்பை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

டெங்கு: சிகிச்சை பெற அறிவுறுத்தல்

திருப்பூர், செப். 24 –டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பது தொடர்பாக பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்படுகிறது. தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை நன்றாகத் தேய்த்து கழுவி நீர் பிடித்தபின் காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும். டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளான காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவையாகும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் இருக்கும் மருத்துவமனைகளை அணுகி உடனடி சிகிச்சை பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

உடுமலை,செப்.24-உடுமலை அரசு கலைக்கல்லூரியில் தொழிற்பயிற்சி (ஐடிஐ) மாணவர்கள் மற்றும் கல்லூரி விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்குத் தனித்தனியாகப் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் புதனன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் பக்கீர் சேட் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில் விழுதுகள் அறக்கட்டளை கோவிந்தராஜ், சார்க் அறக்கட்டளை சுவாமிநாதன், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் ராமசாமி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதவல்லி நாச்சியார் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது, போக்சோ சட்டத்தின் முக்கியத்துவம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சிக்குச் சமூக நல விடுதி நிர்வாகி மைதிலி உள்ளிட்ட திரளான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

வீரமணியின் நிறுவனத்தில் காவல்துறை சோதனை

சேலம், செப்.24-ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணியின் சேலம் நிறுவனத்தில் சென்னை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்ஒருபகுதியாக, சென்னையில் இருந்து நான்கு பேர் கொண்ட குழுவினர் வியாழனன்று காலை, சேலம், கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் அருகே உள்ள வீரமணிக்கு தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இங்குள்ள அலுவலகம் முழுவதும் சோதனையிட்ட போலீசார், முக்கிய ஆவணங்கள் ஏதும் உள்ளதா? என ஆய்வு செய்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலான சோதனையடுத்து அனைவரும் சென்னை புறப்பட்டு சென்றனர்.

இருப்பு வைத்துள்ள விதைகளை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு

உதகை, செப்.24-விதைகளை பரிசோதனை செய்து கொள்ள உதகை விதை பரிசோதனை நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து வேளாண்மை அலுவலர் நவீன் கூறுகையில், நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள், விதைப்பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரியை கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். விதையின் தர நிர்ணய காரணிகளான முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் போன்றவை பரிசோதனை செய்யப்படுகின்றன. விதைப்பரிசோதனைக்கு சமர்ப்பிக்க வேண்டிய பிரதான காய்கறிகளுக்கான விதை மாதிரியின் குறைந்தபட்ச அளவு - கேரட், காலிப்ளவர், முட்டைகோஸ், ப்ரொக்கோலி, நூல்கோல் மற்றும் டர்நீப் ஆகியவைகளுக்கு 10 கிராம், பீட்ரூட் மற்றும் முள்ளங்கி 50 கிராம், பீன்ஸ் 450 கிராம், பட்டாணி 250 கிராம், பாலக்கீரை 25 கிராம் ஆகும். இவ்வாறு பயிருக்கேற்ப குறைந்தபட்ச விதை மாதிரியை விதைப்பரிசோதனை செய்து விதையின் தரத்தை அறிந்து விதைப்பதன் மூலம் தரமற்ற விதையினால் ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்த்து கொள்ளலாம், என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.