தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

17 May 2026, 8:42 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கஞ்சா கடத்தல்: 6 பேர் கைது

நாமக்கல், மே 17- ரயிலில் பயணிகள் போல கஞ்சா கடத்தி, விற் பனை செய்ய முயன்ற 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் இருந்து பயணிகள் போல ரயில் மூலமாக ஈரோடு வழியாக சில இளைஞர்களால் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வரப்படுவதாக பள்ளிபாளையம் காவல் துறையின ருக்கு சனியன்று தகவல் கிடைத்தது. இதனைய டுத்து பள்ளிபாளையம் காவல் உதவி ஆய்வா ளர் ரஞ்சித் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், காவேரி ஆர்.எஸ். ரயில் நிலைய பகுதி யில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ரயிலில் வந்த மூவர் ரயில் வேகம் குறைந்த போது, அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலத்தை தூக்கி வெளியே வீசியுள்ளனர். அப்பொழுது அங்கே இருந்த மூவர் அதை எடுத்துக்கொண்டு செல்ல முயன்ற போது, போலீசார் அவர்களை கைது செய்து, விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆந்திரா மாநிலத்திலிருந்து சட்டவிரோத மாக கஞ்சா பொட்டலங்களை ரயில் பயணிகளை போல கொண்டு வந்தது தெரியவந்தது. இச்சம்ப வத்தில் ஈடுபட்ட பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியை சேர்ந்த கர்ணன் (21), கவின்குமார் (25), பூபதி (21), பவித்திரன் (27), சுப்ரமணி (22), சசிகுமார் (30) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த னர். கைது செய்யப்பட்டவர்கள் குமாரபாளையம் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு, சேலம் சிறை யில் அடைக்கப்பட்டனர்.

வஞ்சிபாளையத்தில் நாளை மின்தடை

திருப்பூர், மே 17- நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளை யம், வெள்ளக்கோவில், ராசாத்தாவலசு, தாச வநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் செவ்வாயன்று (நாளை) மின்விநியோகம் இருக் காது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாயன்று (நாளை) நடைபெறவுள்ளது. இதனால் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்திற்குட் பட்ட பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பள்ளிபாளையம், பெரியாயிபாளையம், காளம் பாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப் பாளையம், புது ஊஞ்சப்பாளையம், குப்பாண்டம் பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளை யம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம் பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ். நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம் பாளையம் சிட்கோ;

வஞ்சிபாளையம் துணை மின் நிலையத்திற்குட் பட்ட வெங்கமேடு, சாமந்தன்கோட்டை, செம்மாண் டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளை யம், 15.வேலம்பாளையம், கணியாம்பூண்டி, வலை யபாளையம், அனந்தபுரம், செம்மாண்டம்பாளை யம்புதூர், முருகம்பாளையம், சோளிபாளையம், ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோ கம் இருக்காது.

இதேபோன்று, வெள்ளக்கோவில், ராசத்தா வலசு, நடேசன் நகர், ராஜீவ் நகர், கொங்கு நகர், டி.ஆர். நகர், கரூர் சாலை, கோவை சாலை, குருக் கத்தி, சேனாபதிபாளையம், ஆத்திப்பாளையம், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகர், கே.பி.சி.நகர், சேரன் நகர், காமராஜபுரம், பாப்பினி, அஞ்சூர். நாகமநாயக்கன்பட்டி, புதுப்பை, உத்தம பாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளை யம், சிலம்பகவுண்டன்வலசு, வேலம்பாளையம், கம்பளியம்பட்டி, குமாரபாளையம், சாலைப்புதூர், முளையாம்பூண்டி, கும்பம்பாளையம், சேர்வகாரன் பாளையம், அய்யம்பாளையம், மங்கலப்பட்டி, மாந்தபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளை யம், கே.ஜி.புதூர், என்.ஜி.வலசு, வரக்காளிபாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று (நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் விநியோ கம் இருக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் மையத்தில் பேட்டரி திருட்டு

கோவை, மே 17- கோவை, கருமத்தம் பட்டி தீரன் சின்னமலை நகர் பகுதியில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. கடந்த மே 9 ஆம் தேதி யன்று இரவு இந்த ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்த 6 பேட்டரி களை திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்த னர். அதில், பேட்டரிகளை திருடிய நபர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சசி குமார் (33) என்பதும், சூலூரை அடுத்த ஒட்டர் பாளையம் பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீ சார், திருடப்பட்ட ரூ.40 ஆயி ரம் மதிப்பிலான 6 பேட்டரி களையும் பறிமுதல் செய்த னர். தொடர்ந்து, அவரை போலீசார் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

பழனிசாமியால் அதிமுக வலுவிழந்து வருகிறது!

கோவை, மே 17– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-யின் தற்போதைய நிலைப்பாடு களை பார்க்கும்போது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப் பட்ட இயக்கம் வலுவிழந்துள்ளதாகவே தெரி கிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் ஞாயி றன்று தமிழக நிதியமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகை யில், அதிமுகவில் ’நான் ஒருவரே போதும்’ என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அவரது இந்த எண் ணத்தை காலம் நிச்சயம் மாற்றிக் காட்டும். அதேபோல், அதிமுகவிலிருந்து எத்தனை பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என்பது குறித்து நீங்களாகவே பேசிக் கொள்கிறீர்கள்; நாங்கள் இதுகுறித்து இதுவரை எதுவும் கூறவில்லை. இப்போது தான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளன. உங்கள் வீட்டுப் பொருளாதாரத்தை உடனே கேட்டால் உங்களால் சொல்ல முடி யுமா? அதுபோலத்தான் அரசின் செயல்பாடு களும் ஒவ்வொன்றாக முன்னேறும். முதல மைச்சர் விஜய் அறிவித்துள்ள 200 யூனிட் இல வச மின்சாரத் திட்டத்தை மக்கள் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்ற விவகாரங்களில் அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. பேருந்து நிலையங்கள் மற்றும் வழி பாட்டுத் தலங்கள் அருகே டாஸ்மாக் கடை கள் இருக்கக் கூடாது என்ற கொள்கை முடி வின் அடிப்படையில், முதற்கட்டமாக 717 கடைகள் அகற்றப்பட்டுள்ளன, என்றார்.

கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை

கோவை, மே 17– கிணத்துக்கடவு அருகே தங்கையை காத லித்து வந்த வாலிபரை கொலை செய்த சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இளஞ்சிறார் நீதிமன்றம் உத்தர விட்டது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளைஞரும், அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் சகோதரனுக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் இருவரையும் கண்டித்துள் ளார். இருப்பினும், அந்த வாலிபர் சிறுமியுட னான காதலை கைவிடவில்லை எனக் கூறப் படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சிறு மியின் சகோதரன், தான் மறைத்து வைத்தி ருந்த கத்தியால், இளைஞரை குத்தி கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுவனை கைது செய்து கோவையில் உள்ள இளஞ்சிறார் நீதி மன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஜாமீனில் வெளியில் வந்த சிறு வன் தப்பியோடியுள்ளார். தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவனை மீண்டும் கைது செய்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கின் இறுதி விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் நிரூபிக்கப் பட்டதை அடுத்து, சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட் டது.

50 அடி உயரத்திலிருந்து விழுந்த ரயில் என்ஜின்

ஈரோடு, மே 17- ஈரோட்டில் ரயில்வே பணிமனையில் கிரேன் உடைந்து ரயில் என்ஜின் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் எலக்ட்ரிக் லோகோ (மின்சார ரயில்) பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் எலக்ட்ரிக் ரயில் என்ஜினில் ஏற்படும் பழுதுகள் மற்றும் பராமரிப்புப்பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளியன்று காலை எலக்ட்ரிக் லோகோ பணிமனையில் ஒரு ரயில் இன்ஜினில் ஏற்பட்ட பழுதினை நீக்க கிரேன் மூலம் தூக்கி, பழுது நீக்கும் ரேம்பிற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது, சுமார் 80 டன் எடை கொண்ட ரயில் என்ஜினின் பாரம் தாங்காமல், எதிர் பாராதவிதமாக கிரேன் உடைந்தது. இதில், 50 அடி உய ரத்தில் தொங்கி கொண்டிருந்த ரயில் இன்ஜின் கீழே விழுந்து சேதமடைந்தது. இவ்விபத்தில் 2 தொழிலா ளர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்துக்கு பணிமனையில் உள்ள இயந்திரங்கள், கிரேன்கள் குறிப்பிட்ட கால இடைவேளையில் பரா மரிப்புப்பணி செய்யாததே காரணம் என ரயில்வே தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ரயில்வே பணிமனையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட காரணமாக இருந்த ரயில்வே அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவெக எம்எல்ஏக்கள் ஆய்வு

நாமக்கல், மே 17- நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை மற்றும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் - மோகனூர் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனையில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப் சனியன்று ஆய்வு செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மாதிரி பள்ளி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பணிகளை விரைவாகவும், தரமான முறையிலும் முடிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட் டது. மேலும், பொதுமக்கள் அவசர காலங்களில் உட னடியாக மருத்துவ உதவி பெறும் வகையில், மருத்துவ மனை வளாகத்தின் ஒரு பகுதியில் அவசர சிகிச்சை மையம் மற்றும் விஷ முறிவு சிகிச்சைப்பிரிவு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது, என்றார். இதேபோன்று, குமாரபாளையம் சட்டமன்ற உறுப் பினர் விஜயலட்சுமி, பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் சாக்கடை தூர்வாரப்படாமல் இருப் பதாக பொதுமக்கள் புகாரளித்ததன்பேரில் ஞாயி றன்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியா ளர்களிடம் பேசுகையில், பொதுமக்கள் புகார் தெரி விப்பதற்காக கொடுக்கப்பட்ட எண்ணிற்கு இது வரைக்கும் 40க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டமன்றத் தொகுதியில் அனைத்து பகுதிக்கு செல்லும் வகையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது, என் றார்.

வாக்காளர்களுக்கு திமுக வேட்பாளர் நன்றி!

அவிநாசி, மே 17- அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கோகிலாமணி ஞாயிறன்று பொது மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருப் பூர் மாவட்டம், அவிநாசி (தனி) சட்டமன்றத் தொகுதி யில் போட்டியிட்ட கோகிலாமணி தோல்வியுற்றார். இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு அறி விப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, கோகிலா மணி, முன்னாள் மேயர் தினேஷ்குமார், தலைமை செயற் குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றியச் செயலா ளர், நகரச் செயலாளர்கள் உள்ளிட்டோர் திருமுரு கன்பூண்டி நகராட்சி, சேவூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்களித்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

உதகை, மே 17- முக்கிய சுற்றுலாத் தலமான டால்பின் நோஸ் காட்சிமுனை பகுதியிலுள்ள கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் முக்கிய சுற்றுலாத் தலமாக டால்பின் நோஸ் காட்சிமுனை உள்ளது. கடல் மட்டத்திலி ருந்து சுமார் 6000 அடி உயரத்தில் இருந்து கேத்தரீன் நீர்வீழ்ச்சி மற்றும் இயற்கை காட்சிகளை காணமுடியும். இந்த காட்சி முனைக்கு செல்ல வனத்துறை நுழைவு வரி கட்டணம் வசூல் செய்கிறது. ஆனால், இப்பகுதியில் உள்ள கழிவறைக்கு தண் ணீர் இணைப்பு கொடுக்காமல் பல மாதங்களாய் கழிவறை கள் மூடப்பட்டுள்ளது, சுற்றுலாப் பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் காட்சி முனைக்கு செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு கடை கள் அதிகரித்துள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத் தியுள்ளனர்.

பசுந்தேயிலைக்கு உரிய விலை விவசாயிகள் எதிர்பார்ப்பு

உதகை, மே 17- பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்தை நம்பி பெரும் பாலான தேயிலை தோட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். அவ்வப்போது இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலை யில், தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிக விளைச்சல் இருக்கும் தற்போதைய சூழலில் அதிக மக சூல் காரணமாக தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. இந்நிலையில், தேயிலைக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என சிறு, குறு தேயிலை விவசாயிகள் எதிர்பார்த் துள்ளனர். மேலும், தற்போது பசுந்தேயிலை விளைச்சல் அதி கம் இருப்பதால் தேயிலைக்கு உரிய விலை கிடைத்திட வும், காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை தோட்டங்க ளில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் பசுந்தேயிலை களில் கொப்பல நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று தேயிலை விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல் களை கருத்தில் கொண்டு, தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முட்டை விலை உயர்வு: பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

நாமக்கல், மே 17- நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கோழிப் பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முட்டை உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் நாமக்கல் முதன்மை மாவட்டமாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் நாமக்கல்லில் இருந்து தினந்தோறும் முட்டை கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தினந் தோறும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூடி முட்டை விலை குறித்து அறிவிப் பது வழக்கம். தினசரி கோழிப் பண்ணைக ளில் ரொக்க விற்பனைக்காக, எவ்வித தள்ளு படியும் (மைனஸ்) இல்லாத முட்டை விலையை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதன்படி, பண்ணைகளில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை இதுவரை ரூ.5.55 ஆக இருந்து வந்தது. இந்நிலையில், ஞாயி றன்று முட்டை விலையில் 5 காசுகள் உயர்த் தப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ.5.60 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அறி வித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே முட்டை விலை கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல விலை அதிகரித்து வருவதால், கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் தொழிலாளர் கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உதகையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

உதகை, மே 17- மலர் கண்காட்சியை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உதகையிலிருந்து வெளி மாவட்டங்க ளுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக் கப்படுவதாக போக்குவரத்துத்துறையி னர் அறிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையில் நடை பெறும் மலர் கண்காட்சியை காண பல் வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்க ளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஆண்டு தோறும் கோடைக்காலத்தின் போது, சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள், சுற்றுப்பேருந்துகள் மற் றும் பார்க் அன்ட் ரெய்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்முறை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சுற்றுப்பேருந்துகள் கடந்த ஏப்ரல் மாதம் முதலே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கூடுதல் சுற் றுப்பேருந்துகள், பார்க் அன்ட் ரெய்டு பேருந்துகள் மலர் கண்காட்சி நடக் கும் 11 நாட்களும் இயக்கப்படவுள்ளன. இது தவிர கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையத்துக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள் ளன. இந்த பேருந்துகள் 5 முதல் 15 நிமி டங்களுக்கு ஒருமுறை இயக்கப்படவுள் ளன. இதேபோல கோவை, மேட்டுப் பாளையம், ஈரோடு, திருப்பூர் பகுதிக ளில் இருந்தும் உதகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மலர் கண்காட்சி நடைபெறும் நாட்க ளில் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி சாலையில் பேருந்துகள் பழுதாகி நின்றால், உட னுக்குடன் சீரமைக்க மொபைல் வேன் கள் தயார் நிலையில் நிறுத்தி வைக் கப்பட உள்ளன. சுற்றுலாப் பயணிக ளின் வாகனங்கள் பழுதாகி நின்றாலும், அவற்றை உடனுக்குடன் அப்புறப்ப டுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படா மல் இருக்க கிரேன்கள் தயார் நிலையில் உள்ளன. சிறப்பு பேருந்துகளை முறையாக இயங்குவதை கண் காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக போக்கு வரத்துத்துறையினர் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.