கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
19 May 2026, 12:46 am

டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரிக்கை

நாமக்கல்/கோவை, மே 18 - பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களுக் குப் பெரும் இடையூறாக உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக அகற்றக் கோரி நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்த னர். குமாரபாளையத்தில் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 800-க்கும் மேற்பட்ட மாண வர்கள் படிக்கும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை எண் 6220 மற்றும் பெரியமணலி சாலையில் உள்ள கடை எண் 6231 ஆகியவற்றை அகற்றக் கோரி, சிபிஎம் சார்பில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தியிடம் மனு அளிக்கப்பட் டது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தேவராஜன் தலைமை யில் நடைபெற்ற இந்நிழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் தமிழ்மணி, சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மனுவை பெற்ற ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். குமாரபாளையத்தில் திடீர் முற்றுகை: குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில், குடி யிருப்பு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அருகே உள்ள டாஸ்மாக் கடை எண் 5977-ஐ அகற்றக் கோரி பொதுமக் கள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல றிந்து வந்த பள்ளிபாளையம் டிஎஸ்பி கௌதமன், காவல் ஆய்வாளர் தவமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, “ஒரு மாதத்திற்குள் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும்” என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட் டது. கோவை கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜே.உஷா, மாநிலக்குழு உறுப்பினர் அமுதா, பொருளாளர் கே.தங்க மணி, மாமன்ற உறுப்பினர் ஆர்.பூபதி உள்ளிட்ட பலர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில், சிவானந்தபுரம் (கடை எண் 1547), கணபதி சங்கனூர் ரோடு (1559, 1638), கண்ணப்பன் நகர் (1555), பீள மேடு வி.கே.ரோடு (1519), தண்ணீர் பந்தல் (1527) ஆகிய 6 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், பள்ளிகளில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச் சாரங்களை மேற்கொண்டு, டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

விதொசவினர் ஆர்ப்பாட்டம்

சேலம், மே 18- நூறு நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றி, இத் திட்டத்தை மொத்தமாக சீர்குலைக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்த சேலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூறு நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக் கும் வேலை வழங்க வேண்டும். நூறு நாள் வேலை 200 நாளாக வும், சம்பளம் ரூ.700 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கெங்க வல்லி ஒன்றியத்தில் கடம்பூர் பஞ்சாயத்திலும், பனமரத்துப் பட்டி ஒன்றியத்தில் சந்தியூர் ஆட்டையாம்பட்டி, தம்மநாயக் கன்பட்டி, அரச மரத்துகரட்டூர் பஞ்சாயத்திலும் கொங்கணா புரம் ஒன்றியத்தில் குருவம்பட்டி ஊராட்சியிலும், நூறு நாள் வேலை கேட்டு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், சங்க மாவட்டத் தலைவர் ஜி கணபதி, மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சேகர், மாநிலக் குழு உறுப்பினர் வி.தங்க வேல் மற்றும் நிர்வாகிகள் வெங்கடாஜலம் கருத்தாப் பிள்ளை, அண்ணாதுரை, குமார், சேகர், ஜோதிபாசு, மாதர் சங்க சி.எஸ்.பழனியப்பன், சேகரி உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட் டத்தில் கலந்து கலந்து கொண்டு, மனுக்கள் கொடுக்கப்பட் டது.

திருப்பூர் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் திரண்டு மனு!

திருப்பூர், மே 18 – திங்களன்று ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் பல் வேறு அமைப்பினர் பொதுமக்கள் திரண்டு கோரிக்கை மனுக் களை அளித்தனர். ஒவ்வொரு வாரமும் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம், சட்டமன்ற தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து, இந்த குறை தீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கடந்த திங்கள்கிழமையில் இருந்து மீண்டும் குறைதீர் கூட்டம் துவங்கியது. இதனைய டுத்து, தற்போது குறை தீர் கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களோடு ஆட்சியர் அலுவ லகம் வந்திருந்தனர். உடுமலைப்பேட்டை வட்டம், சிவசக்தி காலனி பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்குக் கடந்த 45 ஆண்டுகளாகக் கபரஸ்தான் (அடக்கஸ்தலம்) இல்லாததால், தனியாக இடம் ஒதுக்கித் தரக் கோரி பதுரூல் இஸ்லாம் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகிகள் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: பெரியகோட்டை கிரா மம், சிவசக்தி காலனியில் பதுரூல் இஸ்லாம் மதரஸா பள்ளி வாசல் கடந்த 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஜமாஅத்தில் 400-க்கும் மேற்பட்ட இஸ்லாமியக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், இப்பகுதிக்கு என இது வரை தனியாக அடக்கஸ்தலம் இல்லை. இதனால், யாரேனும் காலமானால் இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலை வில் உள்ள கண்ணமநாயக்கனூர் மருள்பட்டி கிராமத்திற்கு உடல்களைக் கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. தற்போது இஸ்லாமியர்களின் குடியிருப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பள்ளிவாசலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னவீரம்பட்டி ஊராட் சிக்கு உட்பட்ட புல எண் 199-இல் உள்ள அரசுப் புறம்போக்கு இடத்தில், இஸ்லாமியர் அடக்கஸ்தலம் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஜெபவீடு இதேபோன்று, திருப்பூர் விஜயாபுரம் மகாலட்சுமி நகரில் அமைந்துள்ள ஆத்துமநேசர் ஜெபவீட்டை விரிவாக்கம் செய்ய விரைந்து தடையின்மைச் சான்று வழங்கக் கோரி, பாஸ்டர் ரா.தங்கவேலாயுதம் தலைமையில் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். இதில், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 17 வருடங்களாக இங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தால், அருகாமையில் சொந்தமாக இடம் வாங்கி விரிவாக்கக் கட்டிடம் கட்டத் திட்டமிடப்பட்டது. இதற்காகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தடையின்மைச் சான்று கோரி விண்ணப்பிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து, பல்துறை அதிகாரிகளும், கடந்த பிப்ரவரி மாதம் உள்ளூர் மக்களிடம் விசாரணை நடத்திச் சென்றனர். இருப்பினும், ஓராண்டாகியும் இதுவரை தடை யின்மைச் சான்று வழங்கப்படவில்லை. இதனால் புதிய கட்டிடப் பணிகள் முடங்கியுள்ளதால், நிர்வாகச் சிக்கல் களைக் களைந்து விரைந்து சான்று வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.'

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்: 59.40 அடி நீர்வரத்து: 387 கனஅடி நீர்திறப்பு: 900 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:29.44/72 அடி நீர்வரத்து:171கனஅடி நீர்திறப்பு:1125கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:13.65/160 அடி நீர்வரத்து:40.64கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:63.80/120அடி நீர்வரத்து:454கனஅடி நீர்திறப்பு:99கனஅடி

சிறுவனை கல்லால் அடித்துக் கொலை: நண்பர்கள் 2 பேர் கைது

கோவை, மே 18- இருகூர் அருகே 13 வயது சிறுவன் ஒரு வன், அவனது நண்பர்களாலேயே, மது பாட் டில் மற்றும் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, இருகூர் பகுதியைச் சேர்ந்த வர் பாரதிராஜா. இவர் அப்பகுதி பேரூராட்சி யில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் திவிஸ் (13), கடந்த 15 ஆம் தேதியன்று மாலை முதல் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், திவிஸின் நண்பர்க ளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், திவிஸ் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. இதனையடுத்து, இருகூர் ரயில்வே சிறிய மேடை அருகே மறைவான ஒரு பகுதியில் வீசப்பட்டிருந்த திவிஸின் உடலை போலீசார் திங்களன்று மீட்டனர். பின்னர், உடற்கூறாய் வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணை யில் கடந்த 15 ஆம் தேதி, திவிஸ் தனது நண் பர்களுடன் இருகூர் பொங்காளியம்மன் கோவில் அருகே உள்ள கால்வாய்க்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது சிறுவர்க ளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள் ளது. இதில் ஆத்திரமடைந்த திவிஸின் நண் பர்களான 13 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள், திவிஸைக் கல்லாலும், மது பாட்டிலாலும், கொடூரமாகத் தாக்கியுள்ள னர். இதில் பலத்த காயமடைந்த திவிஸ் சம் பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து உடலை அதே பகுதியில் குழி தோண்டி புதைக்க முயன்றதும் தெரியவந் துள்ளது. இதனைத் தொடர்ந்து, கொலைச் சம்ப வத்தில் ஈடுபட்ட திவிஸின் நண்பர்களான இரு சிறுவர்களையும் சிங்காநல்லூர் போலீசார் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் இருகூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.