தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவையில் ரூ.100 கோடி மானியம் நிலுவை உடனடியாக விடுவிக்க கோரிக்கை

21 Jun 2026, 2:23 am
கோவையில் ரூ.100 கோடி மானியம் நிலுவை உடனடியாக விடுவிக்க கோரிக்கை
<p><strong>கோவையில் ரூ.100 கோடி மானியம் நிலுவை உடனடியாக விடுவிக்க கோரிக்கை</strong></p><p>கோவை, ஜூன் 20- கோவை மாவட்டத்தில் குறுந்தொழில் முனைவோர்களுக்கு சேர வேண்டிய மானியத் தொகையை விடுவிக்கக் கோரி, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர்கள் சங்கத்தின் தலைவர் ஜே.ஜேம்ஸ், தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அதில், குறுந்தொழில் முனைவோர்கள் கொள்முதல் செய்யும் இயந்திரங்களுக்கு அரசு வழங்கும் தொழில் முன்னேற்ற மானி யத்தைப் பெற சுமார் மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் துறை அதிகாரிகளால் சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளில் கள ஆய்வு முழுமையாக முடிக்கப்பட்ட ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்க ளுக்கு, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மானியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, தொழில் முனைவோர்க ளின் நலன் கருதி மானியத்துக்காக காத்து திருப்பவர்களுக்கு உடனடியாக நிதியை ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், மானியத்திற்காக ஆன்லை னில் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர் களின் தொழில் கூடங்களை ஆய்வு செய்வ தற்கு அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளதாக அறியப்படுகிறது. இதனால், விண்ணப்பித்த பின்னர் அதிகாரிகளின் கள ஆய்வுக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை கோவை மாவட்டத்தில் இன்று வரை தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையைப் போக்க, எம்.எஸ்.எம்.இ (MSME) துறையின் மூலம் தேவையான அதிகாரிகளை கோவை யில் உடனடியாக நியமனம் செய்திட வேண் டும். அத்துடன், ஆன்லைனில் விண்ணப்பிக் கும் தொழில் முனைவோர்களின் விண்ணப் பங்களை ஒரு மாத காலத்திற்குள் ஆய்வு செய்து முடித்து, மானியம் பெறுவதற்கான சான்றிதழை வழங்கிட அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத் தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.