தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஜிஎஸ்டி சட்டத்தால் தேவையற்ற தொல்லைகள் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு புகார்!

3 Jun 2026, 10:55 pm
எஸ்ஜிஎஸ்டி சட்டத்தால் தேவையற்ற தொல்லைகள் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு புகார்!
<p><strong>எஸ்ஜிஎஸ்டி சட்டத்தால் தேவையற்ற தொல்லைகள் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு புகார்!</strong></p><p>கோவை, ஜூன் 3- கடந்த ஒரு ஆண்டாக, தமிழக வணிக வரித்துறையால் எஸ்ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பல வரி செலுத்துவோருக்குத் தேவை யற்ற தொல்லைகள் ஏற்படுத்தப்பட்டு வருவ தாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கோவையில் உள்ள வணிக வரித்துறை இணை ஆணையர் அலுவ லகத்தில் போசியா அமைப்பின் ஒருங் கிணைப்பாளர்கள் ஜே.ஜேம்ஸ், எஸ்.சுருளி வேல், ஏ.சிவசண்முககுமார் உள்ளிட்டோர் கூட்டாக அளித்துள்ள மனுவில், வரி செலுத்துவோருக்கு ஏற்படும் தேவையற்ற அலைக்கழிப்புகளையும், நிர்வாக ரீதி யான நெருக்கடிகளையும் விரிவாகக் குறிப் பிட்டுள்ளனர். சிறு மற்றும் குறுந்தொழில் நிறு வனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கும் வேலைவாய்ப்பிற்கும் முக்கியப் பங் காற்றி வரும் நிலையில், அவர்களுக்கு வணிக வரித்துறையின் மூலம் ஏற்படும் இத் தகைய நடைமுறைச் சிக்கல்கள் தொழிலை மேலும் முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தி யுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் வணிக வரித் துறை ஆணையர் உடனடியாகத் தலையிட்டு, குறுந்தொழில்துறையினரின் குறைகளைக் களைந்து, தடையற்ற தொழில் சூழலை உரு வாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.