தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘தொழில் முனைவோர் குறைதீர்க்கும் முகாம்’

2 Oct 2026, 1:22 am
‘தொழில் முனைவோர் குறைதீர்க்கும் முகாம்’

‘தொழில் முனைவோர் குறைதீர்க்கும் முகாம்’

கோவை, அக்.1 –தென்னிந்தியாவின் மான்செஸ்டராகத் திகழும் கோவை மாவட்டத்தில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் குறைகளைக் களைய, குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்த வேண்டும் என கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேஷன்வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஜாப்காட், பொறியியல், பவுண்டரி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இயங்கும் இந்நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். நாட்டின் பொருளாதாரவளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இத்துறை, தற்போதைய சூழலில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கோவை எம்எஸ்எம்இ அசோசியேஷன் அமைப்பின் தலைமை அலுவலக திறப்பு விழா, 2 ஆவது பொதுக்குழு கூட்டம் மற்றும் சிறப்பு கருத்தரங்கம் ஆகியவை பீளமேடு பி.ஆர்.புரம், ஸ்ரீநகரில் உள்ள கே.ஆர். நினைவரங்கத்தில் புதனன்று நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் தி.மணி தலைமை வகித்தார். மு.பரமேஸ்வரன் வரவேற்றார். என்.நாராயணசாமி, ஆர்.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய அலுவலகத்தை செயற்குழு உறுப்பினர் ஏ.அருணாச்சலம் திறந்து வைத்தார். செயலாளர் அறிக்கையை கி.பாண்டியனும், பொருளாளர் அறிக்கையை பி.சக்திவேலும் சமர்ப்பித்தனர்.தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், ‘வங்கி செயல்முறைகள் மற்றும் தொழில் நெருக்கடிகள்’ குறித்து எம்.ரவீந்திரன், ‘சிறுதொழில் பெரிய சந்தை’ என்ற தலைப்பில் பி.சக்திவேல், ‘பிராண்டிங் முதல் விற்பனை வரை’ என்ற தலைப்பில் Adaira Studios ஜெ.சரண்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தீர்மானங்கள்

இதில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் போல, தொழில் மாவட்டமான கோவையில் குறு, சிறு தொழில் முனைவோர்கள் மற்றும்தொழிலாளர்களின் பிரச்சனைகளை கேட்டறிய குறைந்தபட்சம் 3 மாதத்திற்கு ஒருமுறையாவது மாவட்ட ஆட்சியர் தலைமையில் ‘தொழில் முனைவோர் குறைதீர்க்கும் முகாம்’ நடத்தப்பட வேண்டும். மூலப்பொருட்களின் தொடர் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.25 லட்சம் வரை முதலீடு மற்றும் ரூ.1 கோடி வரை விற்றுமுதல் (Turnover) கொண்ட தொழிலகங்களை ‘டைனி இண்டஸ்ட்ரி’ எனத் தனி வகைப்பாடு செய்ய வேண்டும்.

டைனி மற்றும் குறுந்தொழில்களுக்கு ரூ.1 கோடி வரை கடன் வழங்க தனித்துவமான வங்கிகளை அமைக்க வேண்டும். தொழிற்பேட்டைகளுக்கு தடையற்ற மின் விநியோகம் வழங்கி, நிலைகட்டணத்தை குறைக்க வேண்டும். 12 KV-க்கு கீழ் உள்ள தொழிலகங்களுக்கு அரசே தானாக முன்வந்து வகைமாற்றம் செய்து தர வேண்டும். குறு, சிறு நிறுவனங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில், டி.சிவக்குமார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் திரளான தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.