சிறுமி பாலியல் வன்கொலை வழக்கு முதல் சாட்சி விசாரணை துவக்கம்
26 Jun 2026, 1:44 am

சிறுமி பாலியல் வன்கொலை வழக்கு முதல் சாட்சி விசாரணை துவக்கம்

கோவை, ஜூன் 25- சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை துவங்கியது.

கோவை, சூலூர் அருகே கடந்த மே மாதம் 26 ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்ப டுத்தியது. இந்த கொடூர குற்றச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அதே பகுதி யைச் சேர்ந்த கார்த்திக் (35) மற்றும் மோகன்ராஜ் (32) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, கடந்த ஜூன் 10 ஆம் தேதி காவல்துறையினர் நீதிமன்றத்தில் 819 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த கொடூர குற்றத்தை நிரூபிக்கும் வகையில், இவ்வழக்கில் மொத்தம் 104 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், இவ்வழக்கின் முக்கிய கட்டமான சாட்சிகள் விசா ரணை வியாழனன்று நீதிமன்றத்தில் முறைப்படி துவங்கு கிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு வரும் ஜூன் 26 வரை சாட்சிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதற் காக கைது செய்யப்பட்ட கார்த்திக், மோகன்ராஜ் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் மாவட்ட எஸ்.பி. கோவை மண்டல டி.ஐ.ஜி உள்ளிட்டோர் நீதிமன்றத் தில் ஆஜராகினர்.