கோவை அருகே சிறுமி கொடூர பாலியல் வன்கொலை காவல்நிலையம் முன்பு உறவினர்கள் மறியல்; குற்றவாளிகள் 2 பேர் கைது!
23 May 2026, 9:11 pm

கோவை அருகே சிறுமி கொடூர பாலியல் வன்கொலை காவல்நிலையம் முன்பு உறவினர்கள் மறியல்; குற்றவாளிகள் 2 பேர் கைது!

கோவை, மே 23- கோவை அருகே 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி கள் 2 பேரை, சூலூர் போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற பகுதியை தமிழக காவல்துறை தலைமை இயக்கு நர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

கூலித் தொழிலாளியின் குழந்தைக்கு நேர்ந்த துயரம்

கோவை மாவட்டம் பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் களின் 10 வயது மகள், கடந்த வியாழக் கிழமை (மே 21) இரவு வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீ ரென காணாமல் போனார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சூலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, குழந்தையைத் தேடி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை யன்று கண்ணம்பாளையம் குளக்கரை அருகே உடம்பில் காயங்களுடன் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

விடிய விடிய நடந்த போராட்டம்!

சிறுமி கொலை செய்யப்பட்ட தக வல் பரவியதை அடுத்து, ஆவேசம டைந்த உறவினர்களும் பொதுமக்க ளும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, சூலூர் காவல் நிலையம் முன்பு நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 9:30 மணிக்குத் தொடங்கிய இந்த மறியல் போராட்டம், விடிய விடிய 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

5 தனிப்படைகள் மூலம் தீவிர விசாரணை

இதையடுத்து, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட் டன. சிறுமி கடத்தப்பட்ட பகுதியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட கண்கா ணிப்பு கேமிரா காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், சிறுமியை, பக்கத்து வீட்டில் வசித்து வந்த, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (என்ற கார்த்தி) என்ப வர் கடத்திச் சென்றிருப்பது உறுதியா னது.

போலீசாரிடம் சிக்கிய குற்றவாளிகள்

மேலும், கண்ணம்பாளையம் பகுதி யில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் கார்த்திக் பதுங்கியிருப்பதாக போலீசா ருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அங்கு சென்றபோது, போலீசாரிடமி ருந்து தப்பிக்க கார்த்திக் சுவரில் ஏறிக் குதித்துள்ளார். இதில் அவரது கை மற் றும் கால்களில் முறிவு ஏற்பட்டது. இதை யடுத்து, கார்த்திக்கை, பலத்த பாது காப்புடன் கோவை அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை பிரிவில் போலீசார் அனுமதித்தனர். அத்துடன், கார்த்திக் கின் குற்றத்திற்குத் துணையாக இருந்த தாக மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்து, சூலூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

போக்சோ சட்டப் பிரிவுகளிலும் வழக்கு

இந்தச் சம்பவம் குறித்து, கோவை பந்தயச் சாலை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, “கைது செய்யப்பட்ட கார்த்திக், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை விசா ரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்; மருத்துவர்களின் முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், இவ்வழக்கில் போக்சோ சட்டப் பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட் டுள்ளனர். அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் கடு மையான தண்டனை பெற்றுத்தரப்படும். பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

டிஜிபி - ஏடிஜிபி நேரில் ஆய்வு

இதற்கிடையே, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் ஆகியோர் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட கண்ணம் பாளையம் குளக்கரை பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, சூலூர் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, டிஐஜி சாமி நாதன், கோவை மாவட்ட எஸ்.பி. பவன்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் டிஜிபி அவசர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் நட மாட்டம் உள்ள பகுதிகளில் காவல்துறை ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவும், குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு கூடுதல் கண்காணிப்புப் பணிகளை மேற் கொள்ளவும் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தர விட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குக!

மாதர் சங்கம் வலியுறுத்தல் சிறுமி பாலியல் வன்கொலைக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில், “குற்றவாளிகள் கார்த்திக், மோகன் ராஜ் கைது செய்யப்பட்டு இருப் பதை வரவேற்று இருப்பதுடன், அவர் கள் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் விரைவான விசாரணை நடத்தி மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம், அரசு வேலை மற்றும் உள வியல் ஆலோசனைகள் வழங்கிட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தை கள் பாதுகாப்புக்காக அமைத்துள்ள சிறப்பு கண்காணிப்பு பிரிவு படைகளை வேகமாக செயல்படுத்தி, பள்ளிகள், பொதுமக்கள் குடியிருப்புகள் மற்றும் நகர்ப்புற-புறநகர் பகுதிகளில் பாது காப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. போதைப்பொருள் விற்பனை மற் றும் பெண்களுக்கு எதிரான வன்முறை களைக் கட்டுப்படுத்த மாநில அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாலின சமத்துவக் கல்வி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப் புணர்வு திட்டங்களை கல்வி மற்றும் பொதுமக்கள் மத்தியில் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சூலூரில் அரங்கேறியிருப்பது மனிதநேயமற்ற படுகொலை!

சிபிஎம் கடும் கண்டனம் சிறுமி பாலியல் வன்கொலைச் சம்பவத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இது குறித்து, கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் விடுத் துள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: முகம், கண்களைச் சிதைத்துக் கொடூரம் “கோவை, சூலூர் பகுதியில் 10 வயதுச் சிறுமி கடத்திச் செல் லப்பட்டு பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு முகம், கண் சிதைக்கப்பட்டு மிகக் கொடூ ரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத் தையே உலுக்கியுள்ளது. இந்த மனிதநேயமற்ற கொடூரமான படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது. மிருகத்தனமான குற்றவாளிகள் இந்த மிருகத்தனமான குற் றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளி கள் இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளி களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டுமெனவும், இனிமேல் இதுபோன்ற சம்ப வங்கள் நடைபெறாத வகையில் குழந்தைகள் - பெண்கள் பாது காப்பை உறுதி செய்வதற்கு காவல்துறை உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், சிறுமியை இழந்து தவிக்கும் பெற்றோ ருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற் குழு தமிழக அரசை வலியுறுத்து கிறது. குடும்பத்திற்கு ஆறுதல் சிறுமியை இழந்து சொல் லொணா துயரங்களுடன் தவிக் கும் பெற்றோர்களுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.