சிறுமி பாலியல் வன்கொலை வழக்கு: இருவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
3 Jun 2026, 10:58 pm

சிறுமி பாலியல் வன்கொலை வழக்கு: இருவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

கோவை, ஜூன் 3- சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனு மதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய் யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரிடமும் மேலும் தீவிர விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையினர் கோவை போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக, கைது செய்யப் பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதனன்று கோவை போக்சோ நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். காவல்துறையின ரின் மனுவை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், கைது செய் யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறை யினருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். போலீஸ் காவல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, இவ்வழக்கு குறித்த அடுத்தக் கட்ட விசாரணையை காவல் துறையினர் தீவிரப்படுத்தி யுள்ளனர்.