இபிஎஃப் பென்ஷனர்கள் ஆர்ப்பாட்டம்
16 Jul 2026, 10:16 pm
<p><strong>இபிஎஃப் பென்ஷனர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, ஜூலை 16- குறைந்தபட்ச பென்ஷன் தொகையாக ரூ. 9,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி இபிஎஃப் பென்ஷனர்கள் கோவை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தகுதி வாய்ந்த அனைவருக்கும் உயர் பென்ஷன் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் சேமிப்புத் தொகையான வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்வதைத் தடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆல் இந்தியா யுனைட்டெட் எக்ஸ் சன்ஸ் கமிட்டி ஆஃப் EPFS95 பென்ஷனர் அசோசியேஷன் மற் றும் கோவை EPF பென்ஷனர்கள் நலச்சங்கம் (துடியலூர்) ஆகியவை இணைந்து வியாழனன்று கோவை இபிஎஃப் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் பி.என. பாலகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இபிஎஃப் பென்ஷ னர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். நிறைவாக மாவட்டப் பொருளா ளர் எஸ்.ஆர்.மணி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஆனையரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்த னர்.</p>
