கோவை, மருதமலை பிரதான சாலையில் பாதாள சாக்கடை
6 Nov 2026, 12:47 am
<p>கோவை, மருதமலை பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக சமன் செய்து, புதிய தார்ச்சாலை அமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வடவள்ளி ரவுண்டானாவில் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மண்டலச் செயலாளர் என்.சந்திரன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சி. சிவசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.</p>
