கோவை, மார்ச் 5- செட்டிபாளையம் அருகே பிளாஸ்டிக் கழிவுகள்
5 Mar 2026, 3:59 pm
<p>கோவை, மார்ச் 5- செட்டிபாளையம் அருகே பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. சேலம் - கொச்சின் நெடுஞ்சாலை, கோவை செட்டிபாளை யம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பிளாஸ்டிக் ஆலைக்கு சொந்தமான, பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கு முழு வதும் பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக் குள் கொண்டு வந்தனர். முதல் கட்ட விசாரணையில் கிடங்கில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p> </p>
