முந்தய பக்கம்

வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

10 Oct 2026, 3:05 am
வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, அக்.9-கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறித்த தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிரதமர், உள்துறை அமைச்சர் பதவி விலகக்கோரி வெள்ளியன்று கோவையில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநிலப் பொருளாளர் மாசேதுங், மாவட்டச் செயலாளர் பி.ஜோதி குமார், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.கோபால்சங்கர், மு.ஆனந்தன், தேவராஜ், வினித் மற்றும் பியூசிஎல்சார்பில் சேகர் அண்ணாதுரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இதில், இந்திய குடிமக்களின் வாக்குரிமையைப் பறித்து, தற்போதைய பாஜக அரசுக்கு உடந்தையாகச் செயல்படும் தலைமைதேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமார் பதவி விலக வேண்டும். இதற்கு காரணமான பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முடிவில், மாவட்டக்குழு உறுப்பினர் ரஞ்சிதா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram