பராமரிப்பின்றி பாழாகும் குறிச்சி குளம்: ரூ.50 கோடி மதிப்பிலான திட்டம் வீணாவதால் பொதுமக்கள் வேதனை
7 May 2026, 2:02 am

பராமரிப்பின்றி பாழாகும் குறிச்சி குளம்: ரூ.50 கோடி மதிப்பிலான திட்டம் வீணாவதால் பொதுமக்கள் வேதனை

கோவை, மே 6- கோவையின் வரலாற்று சிறப்பு மிக்க குறிச்சி குளம், கோடிக்கணக் கான ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக் கப்பட்டும் பராமரிப்பு இல்லாமல் மீண்டும் பாழடைந்து வருவது பொதுமக்களிடையே அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரின் அடையா ளங்களில் ஒன்றாகவும், நொய்யல் ஆற்று நீர் ஆதாரத்தை கொண்டு சோழர் காலத்தில் உருவாக்கப் பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நீர் நிலையாகவும் குறிச்சி குளம் திகழ் கிறது.

சுமார் 372 ஏக்கர் பரப்பள வைக் கொண்ட இந்த குளம், பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இரண்டு பிரிவுகளாக கிடந்தது.

இதனை மீட்டெடுக்கும் நோக்கில், கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள் ளப்பட்டன.

சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த குளத்தின் கரைகள், பொதுமக்களின் நலன் கருதி 4 மீட்டர் அகலத்தில் நடைப்பயிற்சி (Walking), ஓட்டப் பயிற்சி (Jogging) மற்றும் மிதி வண்டிப் பயணம் (Cycling) மேற் கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத் தப்பட்டன.

மேலும், தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டை நினைவுபடுத்தும் விதமாக, 12 அடி உயரத்தில் காங்கேயம் காளையை ஐந்து மாடுபிடி வீரர் கள் அடக்க முயல்வது போன்ற பிரம்மாண்ட பைபர் சிலைகளும் குளக்கரையில் நிறுவப்பட்டுள் ளன.

மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த நவீன வசதி கள், தற்போது முறையான பரா மரிப்பின்றி பாழாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, குனியமுத்தூர் அரசுப்பள்ளியை ஒட்டியுள்ள குளத்தின் நடைப் பயிற்சி தளம் தற்போது பயன்ப டுத்த முடியாத நிலையில் உள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் அப்பாதை யைப் பூட்டுப் போட்டு அடைத்து வைத்துள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குளத் தின் வடக்குப் பகுதி கரைகள் மற் றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடங்கள் சீரமைக் கப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் முட்புதர்கள் மண்டி காடு போலக் காட்சியளிக்கின்றன. அடர்ந்த செடி கொடிகளுக்கு இடையே பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அதி காலை மற்றும் மாலை வேளைக ளில் நடைப்பயிற்சிக்கு வரும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

பலநூறு ஆண்டு வரலாற்றை கொண்ட குறிச்சி குளத்தை மீட் டெடுக்க அரசு 50 கோடி ரூபாய் செல விட்டுள்ள நிலையில், போதிய பரா மரிப்பு இல்லாததால் அந்த நிதி வீணாகி வருவதாக சமூக ஆர் வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முட்புதர்களை அகற்றி, அடைக்கப்பட்டுள்ள நடைபாதை களைத் திறந்து, குளக்கரையை தூய்மையாகப் பராமரிக்க மாநக ராட்சி நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என் பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப் பாக உள்ளது.