முந்தய பக்கம்

ஏரியில் நாணல் அகற்றம்: பறவைகள் பாதிக்கும் என புகார்

14 Jul 2026, 10:38 pm
ஏரியில் நாணல் அகற்றம்: பறவைகள் பாதிக்கும் என புகார்
<p><strong>ஏரியில் நாணல் அகற்றம்: பறவைகள் பாதிக்கும் என புகார்</strong></p><p>கோவை, ஜூலை 14- கிருஷ்ணாம்பதி ஏரியில் மாநகராட்சி மேற்கொண்டு வரும் நாணல் அகற்றும் பணியால் பறவைகளின் வாழ்விடம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இயற்கை ஆர்வ லர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், கிருஷ்ணாம்பதி ஏரியில் உள்ள நாணல் செடிகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வரு கிறது. துறை சார்ந்த நிபுணர்களிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. நீர்நிலைகளில் வளரும் நாணல் செடி கள் பல்வேறு வகையான பறவைகளின் முக்கிய வாழ்விட மாக இருப்பதுடன், தற்போது பறவைகளின் இனப்பெருக்கக் காலம் என்பதால் நாணல்களை அகற்றுவது அவற்றின் கூடுகள், முட்டைகள் மற்றும் குஞ்சுகளை பாதிக்கும் என பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பறவை களின் வாழ்விடத்தை பாதுகாக்கும் வகையில், துறை சார்ந்த நிபுணர்களின் ஆய்வு நடைபெறும் வரை நாணல் அகற்றும் பணியை மாநகராட்சி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram