கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
6 Nov 2026, 12:36 am

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கோவை - கொல்லம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

உடுமலை, நவ.5-மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு, அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பின்னரும் கோவை – கொல்லம்பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படாதது பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே,இந்த ரயில் சேவையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி,தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில், முன்பு கோவையில் தொடங்கி பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை, மானாமதுரை, விருதுநகர், தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் அமைந்த இச்சேவை விவசாயிகள், வியாபாரிகள், தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்ததுடன், தமிழகத்தின் தென் மாவட்டங்களையும் கேரளாவையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்தாகவும் திகழ்ந்தது. மீட்டர் கேஜ் பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்ட பிறகு அனைத்து ரயில்களும் மீண்டும்இயக்கப்படும் என தெற்கு ரயில்வே உறுதியளித்திருந்தது. ஆனால், பணிகள் முடிவடைந்த பின்னரும் கோவை –கொல்லம், கோவை – ராமேஸ்வரம், கோவை – தூத்துக்குடி, கோவை – போடிநாயக்கனூர் ஆகிய நான்கு ரயில் சேவைகளும் இதுவரை தொடங்கப்படவில்லை.எனவே, இந்த ரயில் சேவையை மீண்டும் இயக்கினால் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பழனி மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைவர். எனவே, ரயில்வே நிர்வாகம் தனது உறுதிமொழியை நிறைவேற்றி, கோவை – கொல்லம் பயணிகள்ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ.5-தொழிற்சங்க ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டுவரும் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கூட்டுறவுத்துறை ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.பாண்டியம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவர்ஆ.அம்சராஜ், மாவட்டச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் உரையாற்றினர். முடிவில், மாவட்டப் பொருளாளர் ஜெ.அந்தோணி ஜெயராஜ் நன்றி கூறினார்.

நிதி நிறுவன ஊழியர்களிடம் பணம் பறித்த இருவர் கைது

தருமபுரி, நவ.5-தருமபுரியில் நிதி நிறுவன ஊழியர்களிடம் பணத்தை பறித்துச்சென்ற இருவரை போலீசார் கைது செய்த நிலையில், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணமுத்து (40) மற்றும்கேசவன் (22) ஆகியோர், தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் தருமபுரி, பாரதிபுரம் பகுதியில் தங்கியிருந்து, வாடிக்கையாளர்களி

டமிருந்து பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று வசூலான ரூ.90 ஆயிரம் ரொக்கத்துடன் நிதி நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தனர். தருமபுரி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது, அவர்களை வழிமறித்த அடையாளம்தெரியாத நபர்கள், ரொக்கம் ரூ.90 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், தருமபுரி நகர காவல் துறையினர்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறியில் ஈடுபட்டதாக, பெங்களூருவை சேர்ந்த இம்ரான், அஸ்கர் அலி ஆகியோரை புதனன்று கைது செய்தனர்.இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல்!

கோவை, நவ.5-வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மற்றும் ஆணைவாரி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலமசூழல் சுற்றுலா வியாழனன்று (நவ. 5) தற்காலிகமாக மூடப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவை வனக்கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை குற்றாலம்அருவியில் வழக்கத்தை விட நீர்வரத்து பலமடங்கு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா வியாழனன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட முட்டல் கிராமத்தில் ஆணைவாரி அருவி அமைந்துள்ளது. அருவியில் கடந்த சில நாட்களாகநீர்வரத்து சீராக வந்ததால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ஆன்லைனில் பட்டாசு வழங்க மக்கள் ஆர்வம்

சிறப்பு விற்பனை பாதிப்பு

நாமக்கல், நவ.5–தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை அதிகளவில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக பட்டாசுகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால், உள்ளூர் சிறப்பு பட்டாசு கடைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகளுக்கு அடுத்தபடியாக பட்டாசு விற்பனை முக்கியத்துவம் பெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஊரிலும் வியாபாரிகள் தற்காலிககடைகள் அமைத்து பட்டாசுகளை விற்பனைசெய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டை விட பட்டாசுகளின் விலை அதிகரித்துள்ளதால், குறைந்த விலையில் பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் ஆன்லைன் விற்பனை மற்றும் நேரடி கொள்முதலை நாடி வருகின்றனர். இதனால் உள்ளூர் பட்டாசு கடைகளின் வழக்கமான வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு–நாமக்கல் சாலையில் ஆண்டுதோறும் சிறப்பு பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்து வரும் தங்கராசுஎன்பவர் கூறியதாவது, “ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பிருந்து பெற்றோர் குழந்தைகளுடன் வந்து அதிகளவில் பட்டாசுகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக பட்டாசுகளை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும், சிலர் சிவகாசியில் உள்ள விற்பனையாளர்களிடம் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து,தங்களுக்கு தேவையான பட்டாசுகளை மொத்தமாக வாங்குகின்றனர். ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகஉற்பத்தி இடத்திற்கே சென்று வாங்கினாலும் விலை ஓரளவு குறைவாக இருப்பதால் பெரும்பாலானோர் அதில்ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த ஆண்டு எனக்கு தெரிந்த அளவில்60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன்மூலமாகவும், நேரடியாக சிவகாசி சென்றும் பட்டாசுகளை வாங்கி வந்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு வியாபாரம் இல்லை. இனிவரும் காலங்களில் சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து விற்பனைசெய்யும் என்னை போன்ற சிறு வியாபாரிகளுக்கு இந்த தொழிலில் பெரிய அளவில் வருவாய் கிடைக்க வாய்ப்பில்லை” என்றார்.

மக்கள் பிரச்சனையை எதிரொலிக்க ஏற்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சிபிஎம் மனு

உடுமலை, நவ.5- உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை முன்பு அரசியல் கட்சிகள் மற்றும்பொதுநல அமைப்புகள் ஆர்ப்பாட்டம்நடத்த மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை முன்பு, கடந்த காலங்களில் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தன. இந்த இடம் போக்குவரத்திற்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படாத வகையிலும் அமைந்துள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இங்கு நடைபெற்ற போராட்டங்கள், பொதுமக்களிடம் நேரடியாக செய்திகளை கொண்டு சேர்க்கும் களமாகஇருந்து வந்தன. ஆனால், தற்போது, மேம்பாலம் அருகே உள்ள நகராட்சிஅலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது. இங்கு பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக இருப்பதால், யாருக்காக போராட்டங்கள் நடத்தப்படுகிறதோ அந்த பகுதி மக்களின் கவனத்திற்கு செல்வதில்லை. மேலும்,மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, பொதுமக்களின் நலனையும், போக்குவரத்து நெருக்கடியையும்கருத்தில் கொண்டு, உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம்எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை முன்பு, உரிய விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தமீண்டும் அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நகைக்கடையின் இரண்டாம் தளத்திற்கு சீல்

உதகை, நவ.5-உதகையில் நகைக்கடையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட இரண்டாம் தளத்திற்கு அதிகாரிகள் சீல்வைத்தனர்.நீலகிரி மாவட்டம், உதகையில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடை ஒன்றில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், நகராட்சியின் உரிய அனுமதியின்றி கட்டிடத்தில் இரண்டாம் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகராட்சி நகரத் திட்டமிடல் ஆய்வாளர்கள் மகேந்திரகுமார் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு வியாழனன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனுமதியின்றி கட்டுமானப்பணிகள் நடைபெறுவதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

காவலரை மிரட்டிய இளைஞர் கைது

உதகை, நவ.5-குடும்பத்தகராறு காரணமாக காவல்துறைக்கு இளம்பெண் அளித்த புகார் குறித்து விசாரிக்க சென்ற காவலர்களை அரிவாளை காட்டி மிரட்டிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகில் அதிகரட்டி நெடிகாடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (24). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. மது பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ், மது குடித்துவிட்டு வந்து வீட்டில்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன், மது குடித்துவிட்டு வந்த சந்தோஷ் வீட்டில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நீண்ட வாக்குவாதம் இந்த முறை முடிவுக்கு வரவில்லை. இதனால் பயந்து போன சந்தோஷின் மனைவி, இதுகுறித்து 100க்கு போன் செய்து காவல் துறையைதொடர்பு கொண்டு, கணவரின் நடவடிக்கை குறித்து புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து உதகை லவ்டேல் காவலர் ஒருவர், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சந்தோஷின் வீட்டுக்கு சென்றார். அப்போது, சந்தோஷ் தகாத வார்த்தைகளில் பேசியது மட்டுமின்றி, காவலரை அரிவாளை எடுத்து மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். சந்தோஷ் மது போதையில் இருந்ததால், அவசரம் காட்டாத காவலர், தற்காலிகமாக குடும்ப பிரச்சனையை தீர்த்து விட்டு, நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்துக்கொண்டு, திரும்பிவிட்டார். இதன்பின் சந்தோஷுக்கு போதை இறங்கியதும், காவலர் கொடுத்த புகாரின் பேரில், லவ்டேல் காவல்துறை விசாரணை நடத்தி ஆபாச வார்த்தைகளில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

சாலையோரமுள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்

தருமபுரி, நவ.5-காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி நெடுஞ்சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம் உள்ளதால், தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்திலிருந்து பந்தாரஅள்ளி ஏரிக்கரை வழியாக திப்பம்பட்டி, காரிமங்கலம் செல்லும் நெடுஞ்சாலை செல்கிறது. கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை உள்கோட்ட அலுவலகம் கட்டுப்பாட்டில் வரும் இச்சாலை வழியாக பல்வேறு கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இச்சாலையில், பந்தாரஅள்ளி ஏரிக்கரையின் தெற்குப்பகுதியில் உள்ள சாலையோரம் திறந்தவெளி கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றின் ஓரம் உள்ள சாலையில் வாகனங்கள் பாதுகாப்பாக கடந்துசெல்லும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தடுப்புச்சுவா் கட்டபபட்டிருந்தது. இந்த சுவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதனால், கிணறு அமைந்துள்ள பகுதியில் சாலையின் ஒரு பகுதி அப்போதே சரிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதனை சரிசெய்யும் வகையில், அப்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில், தற்காலிக ஏற்பாடாக மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து சாலைசரி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த மணல் மூட்டைகள் அண்மையில் பெய்த மழையால் மீண்டும் சரிந்து கிணற்றில் விழுந்துள்ளது. இதனால் தற்போது தற்காலிக தடுப்புமின்றி, அந்த சாலையை வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.சாலையோரத்தில் கிணறு திறந்து வெளியில் அமைந்துள்ளதாலும், மேலும் வரும் நாட்களில் தொடா்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால் மீண்டும் இச்சாலை சேதமடைந்த வாய்ப்புள்ளது. எனவே, பந்தாரஅள்ளி சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு, வாகன ஓட்டிகள் நலன்கருதி, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முட்டை விலை உயர்வு

நாமக்கல், நவ.5-நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை கடந்த 7 நாட்களில் ரூ.90 காசுகள் உயர்ந்து ரூ.6.60ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினந்தோறும் 80 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான முட்டைகள் பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நாள்தோறும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டை விலையில் மாற்றம் இருக்கும்.

கடந்த சில நாட்களாகவே முட்டை விலை சுமார் ரூ.5.90 காசுகள் என கணிசமான விலையில் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக முட்டை விலைகிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ.6.20 பைசாக்கு விற்கப்பட்டு வந்த ஒரு முட்டை தற்போது வியாழக்கிழமை நிலவரப்படி 40 காசுகள் உயர்ந்து ரூ.6.60 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 90 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தண்டவாள பராமரிப்பு பணி:3 ரயில்களின் இயக்கத்தில் மாற்றம்

சேலம், நவ.5–ஈரோடு–கரூர் ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நவம்பர் மாதத்தில் குறிப்பிட்ட நாள்களில் 3 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.நவ.7, 10, 12, 14, 17, 19, 21, 24, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் செங்கோட்டை–ஈரோடு எக்ஸ்பிரஸ் (16846) கரூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு, கரூர்–ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. பின்னர் கரூரிலிருந்து ஈரோட்டுக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.பாலக்காடு டவுன்–திருச்சி எக்ஸ்பிரஸ் (16844) கொடுமுடிவரை மட்டுமே இயக்கப்பட்டு, கொடுமுடி–திருச்சி இடையே ரத்து செய்யப்படும். பின்னர் சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.கோவை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16322) போத்தனூர், பொள்ளாச்சி, பழனி வழியாக திண்டுக்கல்லுக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் பல வழக்கமான நிலையங்களில் நிற்காது; போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

தேயிலை தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த சிசு மீட்பு!

உதகை, நவ.5-நெல்லியாளம் பகுதியிலுள்ள தேயிலை தோட்டத்தில், தொப்புள் கொடியுடன் சடலமாக கிடந்த சிசு மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த நெல்லியாளம் ரேஞ்ச், 2 மைன்ஸ் பகுதியில் தேயிலை தோட்டத்தில், தொப்புள் கொடியுடன் சிசு இறந்து கிடந்ததை கண்டு, தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிசுவின் உடலை மீட்டு, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தேயிலை தோட்டத்திலேயேபிரசவம் நடந்து சிசு வீசி செல்லப்பட்டதா? அல்லது வேறு இடத்தில்குழந்தை பிறந்தவுடன் இங்கு வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமராவதிநகர் சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

உடுமலை, நவ. 5-உடுமலையை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 2027–28 ஆம் கல்வியாண்டிற்கான 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய சைனிக் பள்ளிகள் நுழைவுத் தேர்வு (AISSEE–2027) நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து, ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சைனிக் பள்ளியில் 2027–28 ஆம் கல்வியாண்டிற்கான 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய சைனிக் பள்ளிகள் நுழைவுத் தேர்வு (AISSEE–2027) நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. விண்ணப்ப பதிவு நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://exams.nta.nic.in/sainik-school-society/ என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 2 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

6 ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள், 2027 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 10 முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். 9 ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிப்பவர்கள் அதே தேதியன்று 13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், 9 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சைனிக் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு, விண்ணப்ப நடைமுறை, தேர்வு விதிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தேசிய தேர்வு முகமையின் https://nt.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் பிரசவம் - பெண் குழந்தை பிறந்தது

திருப்பூர், நவ.5 -திருப்பூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி ஒருவருக்கு, பெண் குழந்தை பிறந்தது. ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் அந்த ரயிலை நிறுத்தி ஆம்புலன்ஸ்வாகனம் மூலம் தாய், சேய் இருவரும், ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி உபினா. கர்ப்பிணியான உபினாவியாழனன்று கோவையில் இருந்து நாகர்கோயில் செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்தார். இந்த ரயில் திருப்பூரைத் தாண்டி சென்று கொண்டிருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ரயிலிலேயே உபினா பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு ஊத்துக்குளி ரயில் நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் வர வழைக்கப்பட்டது. கொடியம்பாளையம் நால்ரோடு பகுதியில் இருந்து ஓட்டுநர் ஐய்யப்பன் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி வந்தார். ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் இருந்து, தாயும், சேயும் மேல் சிகிச்சைக்காக ஊத்துக்குளி அரசு மரு்த்துவமனையில் சென்று சேர்க்கப்பட்டனர்.