தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மலைக்கிராமத்தில் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி மறு சீரமைப்பு

25 May 2026, 11:06 pm
மலைக்கிராமத்தில் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி மறு சீரமைப்பு
<p><strong>மலைக்கிராமத்தில் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி மறு சீரமைப்பு</strong></p><p>கோவை, மே 25- கல்வி மூலம் சமூக முன்னேற்றம் திட்டத்தின் கீழ், சிறுமுகைப்பகுதி காந்தவயல் மலைக்கிராமத்தில் உள்ள அரசு பழங்குடி உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி மறு சீரமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத் துள்ள சிறுமுகை, காந்தவயல் மலைக்கிராமத்தில் அரசு பழங்குடி உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி உள் ளது. இப்பள்ளியின் கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில், சிறுமுகை எஸ்ஐவி பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர், கல்வி மூலம் சமூக முன்னேற்றம் என்ற நோக்கத்துடன் பல் வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக காந்தவயல் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. பழுதடைந்த வகுப்பறைகள், சுற்றுச்சுவர், குடிநீர் தொட்டிகள், கழி வறைகள் சீரமைக்கப்பட்டு புத்தம் புது பொலிவுடன் வர் ணம் பூசப்பட்டது. பள்ளி வளாகம் முழுவதும் பேவர் பிளாக்ஸ் கற்கள் பொருத்தப்பட்டது பள்ளி கட்டிட சீரமைக்கப்பட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்த தும் பள்ளி ஒப்படைப்பு விழா திங்களன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு கோவை தனியார் மருத்துவ மனை மருத்துவர் லெனின் பாபு தலைமை வகித்து, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ, உதவி தலைமை ஆசிரியை கண்ணம்மாள், காரமடை ஒன்றிய வட்டார வளமைய ஆசிரியர் பயிற்சி அலுவலர் சுமதி, சங்க பொறுப்பாளர்கள் யாமினி, தன்ராஜ், சீனிவாசன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.