எஸ்ஜிஎஸ்டி அபராதத்தொகையை திரும்பப்பெற 10% லஞ்சம்? கோவை தொழில் துறையினர் குற்றச்சாட்டு
26 May 2026, 11:43 pm

எஸ்ஜிஎஸ்டி அபராதத்தொகையை திரும்பப்பெற 10% லஞ்சம்? கோவை தொழில் துறையினர் குற்றச்சாட்டு

கோவை, மே 26- மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) அபராதத் தொகையை திரும்பப்பெற வணிக வரித்துறை அதிகாரிகள் 10 சதவிகி தம் லட்சம் கேட்பதாக கோவை தொழில் துறையினர் குற்றச்சாட்டி யுள்ளனர்.

மேலும், நீண்ட நாட்களாக நிலு வையில் உள்ள இந்த எஸ்ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகைகளை விடுவிப்ப தற்கு, வணிகவரித்துறை அதிகாரி கள் தணிக்கையாளர்கள் மூலமாக 10 சதவீத கமிஷன் அல்லது லஞ்சம் கேட் பதாக அவர்கள் பரபரப்பு குற்றச் சாட்டை எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கோவை தொழில் அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் ஜே.ஜேம்ஸ் கூறுகை யில், கோவை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) அபராதத் தொகையை, எவ்வித லஞ்சமும், அபராதமுமின்றி உடன டியாக திரும்ப வழங்க வேண்டும் என உள்ளூர் தொழில் கூட்டமைப்பு கள் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த இரண்டு நாட்களாக, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள எஸ்ஜிஎஸ்டி அப ராதத் தொகையை திரும்பப் பெற விண்ணப்பித்திருந்த சிறு தொழில் முனைவோர்கள் நேரில் அழைக்கப் படுகிறார்கள்.

தங்களின் தணிக்கை யாளர்கள் மூலம் 10 சதவீதத் தொகையை லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே, நிலுவையில் உள்ள கோப்பு கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தொகை விடுவிக்கப்படும் என அதி காரிகள் தரப்பில் உறுதியளிக்கப்படு கிறது.

எந்தவொரு தவறும் செய்யாமல், அபராதத் தொகையை செலுத்தி விட்டு பல ஆண்டுகளாக திரும்பப் பெறுவதற்காக காத்திருக்கும் சூழ லில், தற்போது மேலும் 10% கூடு தலாக கேட்பது சிறு தொழில்துறை யினருக்கு பெரும் சுமையாக மாறி யுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடன டியாக தலையிட வேண்டும்.

லஞ்ச எதிர்பார்ப்புகளோ அல்லது கூடுதல் அபராதங்களோ இன்றி, வெளிப் படையான முறையில் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இ - நடைமுறை கள் குறித்து கேள்வி எழுப்பினால், மற்ற பிரிவுகளின் கீழ் கூடுதல் அபரா தம் விதிக்கப்படும் என அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.

சரக்கு வாகன சோதனைகளின் போது, பில்களில் ஏற்படும் மிகச் சிறிய எழுத்துப் பிழைகள் அல்லது ஒரு வார்த்தை தவறுதலாக இருந்தால் கூட, சம்பவ இடத்திலேயே 200% வரை மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படு கிறது.

பின்னர் உரிய ஆவணங் களை சமர்ப்பித்த பிறகு இந்த தொகை திரும்பப் பெறத்தக்கது என் றாலும், அதை திரும்பப் பெறுவ தற்குள் சிறு முதலீட்டாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர், என் றார்.

ஏற்கனவே ஓராண்டுக்கும் மேலாக ரீஃபண்ட் தொகைகள் தாமத மாகி வரும் நிலையில், தற்போது எழுந்துள்ள இந்த லஞ்சப் புகார் சிறு தொழில்முனைவோரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பிறப்பிக்கப்பட்ட ரீஃபண்ட் உத்தர வின் பலன்கள், எவ்வித கமிஷனும் இன்றி பயனாளிகளுக்கு முழுமை யாகச் சென்றடைவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ள னர்.