தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்சார நிலை கட்டணத்தை திரும்பப்பெறுக தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

16 May 2026, 1:19 am
மின்சார நிலை கட்டணத்தை திரும்பப்பெறுக தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மின்சார நிலை கட்டணத்தை திரும்பப்பெறுக தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

​​​​​​​கோவை, மே 15- மின்சார நிலை கட்டணத்தை திரும்பப்பெற தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோவை யிலுள்ள 25 தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோவையில் தொழில் அமைப்பு களின் கூட்டமைப்பினர் வெள்ளி யன்று செய்தியாளர்களை சந்தித்த னர்.

அப்போது புதிய அரசிடம் உள்ள எதிர்பார்ப்புகள் குறித்து அந்த அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் பேசுகையில், தொழில் துறையின ருக்கு நெருக்கடி ஏற்படுத்தும், மின் சார நிலை கட்டணத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.

குறுந் தொழில் வாரியம் ஒன்றை அரசு ஏற்ப டுத்தி கொடுக்க வேண்டும். மாநில சரக்கு மற்றும் வரி (SGST) அதிகாரி கள் 2007க்கு பின்பு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை திரும்பப்பெற வேண் டும்.

தமிழகத்தில் 717 மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதை வரவேற்கின் றோம்.

தொழில் சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியில் இருக்கும் மதுக் கடைகள், எப்எல்2 மதுக்கடைக ளால் தொழிலாளர்கள் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டி லுள்ள அத்தனை மதுக்கூடங்களை யும் மூட வேண்டும்.

எரிபொருட்கள் விலை உயர்வு கோவையில் சிட்கோவை தவிர வேறு தொழிற்பேட்டைகள் எதுவும் இல்லை.

கோவை பகுதியில் இருக் கும் இடங்களில், சிறு சிறு தொழிற் பேட்டைகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

பதிவுத்துறையால் ஏற்ப டும் நெருக்கடிகளை களைய வேண் டும்.

கோவை சிட்கோ தொழிற் பேட்டையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

மேலும், எரிபொருட்கள் விலை உயர்வை ஏற் படுத்தி ஒன்றிய அரசு எதிர்பார்க்காத அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

2012 - 13களில் 120 டாலருக்கு கச்சா எண் ணெய் கிடைத்த போது, 65 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைத்தது.

ஆனால், இப்போது பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

எரிபொருட்கள் விலை உயர்வு கார ணமாக தனிமனித பாதிப்புகள் ஏற்ப டும்.

எல்லா சுமையினையும் தொழில் துறை மீதே சுமத்தாமல் அரசே ஏற் றுக்கொள்ள வேண்டும்.

மூலப்பொருள் வங்கி மூலப்பொருட்கள் விலையேற் றம் காரணமாக தொழில் முனை வோர் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மூலப்பொருள் வங்கி உருவாக்கப்பட வேண்டும், அனைத்து மூலப்பொருட்களையும் குறைந்த விலையில் கிடைக்க நடவ டிக்கைகள் எடுக்க வேண்டும்.

பிரத மரின் சமீபத்திய வேண்டுகோளை பார்க்கும் போது அச்சம் ஏற்படுகி றது.

ஐடி சார்ந்த தொழிற்துறையின ருக்கு வீட்டிலிருந்தபடியே வேலை (work from home) என்பது சரியாக இருக்கும்.

சிறு, குறு தொழில் துறை யினர் இயந்திரங்களை வீட்டில் வைத்து ஓட்ட முடியாது, என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.