முந்தய பக்கம்

வீட்டு வசதி வாரியப் பிரச்சனை: அமைச்சரிடம் ஒதுக்கீட்டாளர்கள் மனு

7 Jun 2026, 12:15 am
வீட்டு வசதி வாரியப் பிரச்சனை: அமைச்சரிடம் ஒதுக்கீட்டாளர்கள் மனு

வீட்டு வசதி வாரியப் பிரச்சனை: அமைச்சரிடம் ஒதுக்கீட்டாளர்கள் மனு

கோவை, ஜூன் 6- வீட்டு வசதி வாரியப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கோவையில் அமைச்சர் சம்பத்குமாரிடம் ஒதுக்கீட்டா ளர்கள் சனியன்று மனு அளித்தனர். அம்மனுவில், கணபதி மாநகரில் வசிக்கும் பெரும்பா லான ஒதுக்கீட்டாளர்கள் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வீடுகளை பெற்று குடியேறினோம். தற்போது 65 முதல் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உள்ளோம். தங்களுக்குச் சாத கமாக நீதிமன்றங்கள் மற்றும் நடுவர் தீர்ப்பாயங்கள் வழங்கிய தீர்ப்புகள் இருந்தபோதிலும், வீட்டு வசதி வாரியம் மேல் முறையீடுகள் மூலம் வழக்குகளை நீட்டித்து வருகிறது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகைகளை திருப்பி வழங்க மறுப்பதோடு, வீட்டு உரிமைப் பத்திரங்களையும் வழங்கா மல் உள்ளது. இப்பிரச்சனைக்கு தமிழக அரசு வெளிப்படையான விசா ரணை நடத்தி தீர்வு காண வேண்டும். கூடுதலாக வசூலிக் கப்பட்ட தொகையை 6 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வும், வீட்டு உரிமைப் பத்திரங்களை உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரி வித்துள்ளனர். அமைச்சரை சந்தித்தபோது நலச்சங்க தலை வர் கே.ஜெயசந்திரன், செயலாளர் எம்.ஏழுமலை, பொருளா ளர் பி.சுப்பிரமணி உள்ளிட்ட ஒதுக்கீட்டாளர்கள் உடனி ருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram