முந்தய பக்கம்

ஹோட்டல், பேக்கரி தொழிலாளர் சங்க பேரவை

22 Sept 2026, 11:58 pm
ஹோட்டல், பேக்கரி தொழிலாளர் சங்க பேரவை

ஹோட்டல், பேக்கரி தொழிலாளர் சங்க பேரவை

கோவை, செப். 22– கோவை மாவட்ட லாட்ஜ், ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர் சங்கத்தின் 15-ஆவது ஆண்டு பேரவைக்கூட்டம், கணபதியில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.மனோகரன் தலைமைவகித்தார். ஏ.எல்.ராஜா கொடியேற்ற, கே.ராமலிங்கம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பி.தங்கராஜ்வரவேற்றார்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி துவக்கவுரையாற்றினார். பொதுச்செயலாளர் கே.சந்தோஷ் வேலை அறிக்கையையும், பொருளாளர் ஆர்.செந்தாமரை வரவு-செலவு அறிக்கையையும் தாக்கல் செய்ய, மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுச்சாமி வாழ்த்திப் பேசினார்.

இக்கூட்டத்தில், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் இபிஎஃப் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9,000 ஆக உயர்த்த வேண்டும்; சிறு பேக்கரிகள் மீதான முறையற்ற வரிகளை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கேட்டரிங் தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கும் வகையில் திருமண மண்டபங்கள் மூலம் 2% செஸ் வரி வசூலித்து நலவாரியப் பலன்களை உயர்த்த வேண்டும்; ஹோட்டல்களில் தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் மற்றும் இஎஸ்ஐ பெற ரூ.21,000 சம்பள வரம்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இப்பேரவை கூட்டத்தில் சங்க மாவட்டத் தலைவராக பி.தங்கராஜ், செயலாளராக கே.சந்தோஷ், பொருளாளராக ஆர்.செந்தாமரை உள்ளிட்ட 27 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே. ரத்தினகுமார் நிறைவுரையாற்றினார். நிறைவாக நிர்வாகி என்.ரிதுபர்ணன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram