தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அவசர ஊர்திகளுக்கே வழியில்லை: கோவை அரசு மருத்துவமனை முன்பு ஸ்தம்பிக்கும் போக்குவரத்து!

28 Jun 2026, 1:33 am
அவசர ஊர்திகளுக்கே வழியில்லை: கோவை அரசு  மருத்துவமனை முன்பு ஸ்தம்பிக்கும் போக்குவரத்து!

அவசர ஊர்திகளுக்கே வழியில்லை: கோவை அரசு மருத்துவமனை முன்பு ஸ்தம்பிக்கும் போக்குவரத்து!

- ராமகிருஷ்ணன் - கோவை, ஜூன் 27- கோவை மாவட்ட அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை, திருச்சி சாலையில் அமைந்துள் ளது.

கோவை மட்டுமன்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட் டங்களை சேர்ந்தவர்களும், கேர ளம் மாநிலம், பாலக்காட்டில் இருந் தும் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், ஆயிரக்கணக்கான உள்நோயாளி களும் இங்கு சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

இவ்வளவு முக்கியத்து வம் வாய்ந்த இம்மருத்துவமனை யின் பிரதான நுழைவாயில் பகுதி, தற்போது கடுமையான போக்குவ ரத்து நெரிசல் மிக்க இடமாக மாறி யுள்ளது.

குறுகிய சாலை... குவியும் வாகனங்கள்! மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உற வினர்கள் மற்றும் பொதுமக்கள் தங் களின் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், பிரதான சாலையின் ஓரங்களிலேயே வரி சையாக நிறுத்திச் செல்கின்றனர். மேலும், அரசு மருத்துவமனை யின் எதிரே தேவாலயம் பகுதி யில் வாகனங்களை நிறுத்தக்கூ டாது என வேலியும் அமைத்துள்ள னர்.

இதனால், திருச்சி சாலையின் அகலம் பாதியாக குறைந்து, காலை மற்றும் மாலை வேளைகளில் கடு மையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இப்பகுதிக்கு மிக அருகிலேயே அரசு கலைக் கல்லூரி மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான மாணவிகள் சாலையை கடக்க முடியாமலும், நடந்து செல்ல பாதையின்றியும் நாள்தோறும் பெரும் விபத்து அபா யத்தை சந்தித்து வருகின்றனர்.

ஆம்புலன்ஸ்களை முடக்கும் நெரிசல் மிக முக்கியமாக, விபத்து மற் றும் அவசரச் சிகிச்சை பிரிவுக்கு அதிவேகமாக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட, இந்த வாகன நெரிசலில் சிக்கி நிமிடக் கணக்கில் காத்து நிற்கும் அவலம் தொடர்கி றது.

அவசரச் சிகிச்சையில் ஒவ் வொரு நொடியும் விலைமதிப்பற் றது என்ற நிலையில், நுழைவாயில் நெரிசலால் நோயாளிகளின் உயி ருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. தற்போது மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் வாகனங் களை நிறுத்த, மேம்பால பகுதிக்கு அருகில் (நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் ஒட்டி) தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

ஆனால், இந்த வாகன நிறுத்துமிடம் மருத்துவமனையின் பிரதான நுழைவாயிலில் இருந்து மிக தூரமாக உள்ளது. கடுமையான காய்ச்சல், எலும்பு முறிவு, மகப்பேறு சிகிச்சை மற்றும் முதியவர்கள் இந்தத் தூரத்தை நடந்து கடப்பது சாத்தி யமற்றதாக உள்ளது.

”உடல்நலம் பாதிக்கப்பட்டு வரும் எங்களை, அரை கிலோமீட்டர் தூரம் நடக்க வைப்பது எந்த விதத்தில் நியா யம்?” என நோயாளிகளின் உற வினர்கள் வேதனை தெரிவிக்கின்ற னர். தூரத்தின் காரணமாகவே பலர் அபராதத்தை பொருட்படுத்தாமல் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

இதற்கு முன்பு, மருத்துவ மனை வளாகத்திற்குள்ளேயே ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வாகன நிறுத்த வசதி பயன்பாட்டில் இருந்தது. அப்போது எந்த நெரி சலும் இல்லை, பொதுமக்களும் சிரமப்படவில்லை.

தற்போதைய இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு, பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மருத்துவமனை வளாகத்திற் குள் காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து அல்லது அதற்கு மிக அருகிலுள்ள அரசுப் புறம்போக்கு நிலங்களை ஒழுங்குபடுத்தி, போதிய பாதுகாப்புடன் கூடிய வாகன நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

மாவட்ட நிர்வாகம், மாநகரக் காவல் துறை (போக்கு வரத்து பிரிவு) மற்றும் மருத்துவ மனை நிர்வாகம் இணைந்து போர்க்கால அடிப்படையில் கூட்டு ஆய்வு மேற்கொண்டு, இந்த மனித நேய பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே கோவை மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.