கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரச் சீர்கேடு போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய கோரிக்கை
20 May 2026, 12:01 am
<p><strong>கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரச் சீர்கேடு போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய கோரிக்கை</strong></p><p>கோவை, மே 19- நூற்றாண்டு கால வரலாற்றுப் பெருமை கொண்ட கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தினமும் ஆயிரக்கணக் கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மாவட் டத்தின் மிக முக்கிய மருத்துவமனையாக விளங்கும் இதன் பல்வேறு வார்டுகளில், கழி வறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் கடும் சுகாதாரச் சீர்கேட்டுடன் நிலவி வருவ தாக நோயாளிகள் மற்றும் அவர்களது உற வினர்கள் தரப்பில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, சிறுநீரகவியல் துறை வார் டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கழி வறைகளே பயன்பாட்டில் உள்ளதோடு, அவை முறையான பராமரிப்பின்றி, தண்ணீ ரும், மின்விளக்கும் இல்லாமல் குப்பைக்கா டாக காட்சியளிக்கின்றன. மேலும், பெண்கள் கழிவறை பூட்டிக்கிடப்பதால், பெண் நோயா ளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். சிறுநீரகப் பாதிப்புடைய நோயாளிகள் அடிக்கடி கழிவறையை பயன்படுத்த வேண் டிய சூழலில், இந்த சீர்கேடு அவர்களுக்கு மேலும் புதிய நோய்த்தொற்றுகளை உரு வாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நமது தீக்கதிர் நாளிதழில் விரி வான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவம னையில் நிலவும் சீர்கேட்டை களைந்திடுக் கோரி, மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலியை சந்தித்து மனு அளித்தனர். மருத்துவமனை வார்டுகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்து, நோயாளிகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று இச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர், உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதிய ளித்தார். இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், கே. எஸ்.கனகராஜ் மற்றும் மாவட்டக்குழு உறுப் பினர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.</p>
