கோவை அரசு மருத்துவமனையில் அவலம் தண்ணீரின்றி, சிறுநீரக வார்டு கழிப்பறைகள்!
17 May 2026, 11:04 pm

கோவை அரசு மருத்துவமனையில் அவலம் தண்ணீரின்றி, சிறுநீரக வார்டு கழிப்பறைகள்!

கோவை, மே 17- கோவை அரசு பொது மருத்துவ மனையின் சிறுநீரகவியல் வார்டில் உள்ள கழிப்பறைகள் முறையான சுகாதாரமின்றியும், தண்ணீரின்றி யும் குப்பைக்காடாகக் காட்சி அளிக் கும் வீடியோ வெளியாகி பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அரசு மருத்துவமனை யின் கிட்னி வார்டில் நாள்தோறும் 30 முதல் 50-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுடன் தங்கி இருக்கும் உறவினர்களையும் சேர்த் தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த வார்டில் தினமும் இருக்கின்றனர்.

இத்தனை பேருக்கும் சேர்த்து அங்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப் படுகிறது.

மிக முக்கியமாக, இந்த வார்டில் உள்ள பெண்கள் கழிப்பறை நீண்ட நாட்களாகப் பூட்டி வைக்கப் பட்டு உள்ளது.

இதனால் சிகிச்சை யில் இருக்கும் பெண் நோயாளிக ளும், ஆண்களுக்கான கழிப்பறை யையே பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள் ளனர்.

சிறுநீரகப் பாதிப்பு உள்ள நோயா ளிகள் அடிக்கடி கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டிய சூழலில், இந்த சுகாதாரமற்ற நிலை அவர்க ளின் உடல்நிலையை மேலும் மோச மாக்கும் என அச்சம் தெரிவிக்கின்ற னர்.

இதுகுறித்துப் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கூறும்போது, “நான் கடந்த 7 மாதங்களாக இந்த வார்டிற்குச் சிகிச்சைக்காக வந்து செல்கிறேன்.

கழிப்பறையில் கழுவு வதற்குக் கூடச் சரியான தண்ணீர் வசதி இல்லை.

உணவு உண்ட பின் போடும் குப்பைகளும், மருத்துவக் கழிவுகளும் அங்கேயே தேங்கிக் கிடக்கின்றன.

இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. கழிப் பறையில் மின்விளக்கு வசதி இல்லா ததால், வயதானவர்கள் நள்ளிரவில் செல்ல முடியாமல் கடும் சிரமத் திற்கு உள்ளாகிறார்கள்.

இதுகுறித்து இரண்டு, மூன்று முறை மருத்துவ மனை நிர்வாகத்திடம் புகார் அளித் தும் இதுவரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.

அதனால் தான் இந்த வீடியோவை எடுத்து வெளியிடுகிறோம்” எனத் தெரிவித் தார். ஒரு வார்டில் மட்டுமல்லாமல், மருத்துவமனையின் பெரும்பாலான வார்டுகளில் இதே நிலை தான் நீடிப் பதாக நோயாளிகள் குற்றம் சாட்டு கின்றனர்.

ஏழை - எளிய மக்கள் நம்பி வரும் கோவை அரசு மருத்துவமனையின் இந்த அவல நிலை குறித்து, மாவட்ட நிர்வாகமும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, கழிப்பறைகளைச் சீர மைக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த நோயாளிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள் ளது.