மனிதவள பற்றாக்குறையால் தவிக்கும் கோவை அரசு மருத்துவமனை
13 Jul 2026, 10:35 pm

மனிதவள பற்றாக்குறையால் தவிக்கும் கோவை அரசு மருத்துவமனை

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, மேற்கு தமிழகத்தின் மிக முக்கியமான மூன்றாம் நிலை பரிந்துரை மையமாக திகழ் கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த பல்லாயிரக்கணக் கான ஏழை எளிய மக்கள் நாள் தோறும் இம்மருத்துவமனையை மட்டுமே நம்பியுள்ளனர். சென்னையை அடுத்து மிக முக்கிய மருத்துவ மையமாக இது இருந்தாலும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்து வர்கள் மற்றும் செவிலியர்கள் பற் றாக்குறை நிலவுவது கவலைய ளிக்கிறது. சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்து வர்கள் உள்ள நிலையில், கோவையில் சுமார் 300 மருத்து வர்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நோயா ளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. செவிலியர் பற்றாக்குறையால் பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. ஆய்வகத் தொழில்நுட்ப பணி யிடங்கள், மருந்தாளுநர் பணி யிடங்கள் பல ஆண்டுகளாக நிரப் பப்படாததால் பரிசோதனைக ளும், மருந்து விநியோகமும் தாம தமாகின்றன. மேலும், சித்த மருத்துவப் பிரிவு மற்றும் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ‘அண்ணப் பிளவு’ சிறப்பு சிகிச்சைப் பிரிவு ஆகியவை போதிய மனிதவள மின்றி முடங்கியுள்ளன. மருத்து வர்கள் பற்றாக்குறையை சமா ளிக்க முதுநிலை மருத்துவ மாண வர்கள் அதிகளவில் பயன்படுத் தப்படுவதால் அவர்களின் கல்வி யும் பாதிக்கப்படுகிறது. பழைய வெளிநோயாளர் கட்டிடத்தை இடிப்பதற்கு முன், முறையான மாற்று ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனையின் தூய்மை மற்றும் நோயாளிகளை அழைத்துச் செல்லும் பணிகளை மேற்கொள்ளும் ‘கிரிஸ்டல்’ ஒப் பந்த நிறுவனம், 638 பணியாளர்க ளுக்குப் பதிலாக 300 பேரை மட்டுமே பணியமர்த்தியுள்ள தாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. சில பிரிவுகளில் நோயாளி களிடம் சட்டவிரோத பண வசூல் நடப்பதாகவும் புகார்கள் உள் ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வாழ்வுரிமையும், பொது சுகாதா ரத்தை மேம்படுத்துவது அரசின் கடமை ஆகும். எனவே, தமிழக அரசு உடனடியாக தலை யிட்டு, அனைத்துக் காலிப்பணி யிடங்களையும் நிரப்ப வேண் டும். ஒப்பந்த முறையைக் கண் காணித்து, அத்தியாவசியப் பணி களுக்கு அரசு நேரடியாக நிரந் தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அத்துடன், அடிப்படை வசதிகள், தரமான கேண்டீன் மற்றும் முடங்கியுள்ள இருசக்கர ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் தொடங்கி, மேற்கு தமிழக மக்க ளின் மருத்துவ உரிமையைப் பாது காக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாகும். - தினேஷ் ராஜா கோவை மாவட்டச் செயலாளர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.

வாலிபர் சங்கம் போராட்டம் – கைது

கோவை அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியு றுத்தி இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத் தினர் திங்களன்று கோவை அரசு மருத் துவக் கல்லூரி மருத் துவமனை முன்பு மறி யலில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் என். ராஜா தலைமையில் நடை பெற்ற இந்த மறிய லில் மாவட்ட செயலாளர் டி.தினேஷ்ராஜா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் முத்து முருகன், குருசாரதி, ஸ்ரீதர், விக்னேஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.